மோடி அரசின் ‘அதிரடி’  நடவடிக்கைகளான பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.  இந்திய பொருளாதாரத்துக்கு ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியிருப்பதாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா .

சரக்கு மற்றும் சேவை வரி தவறான வழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதால், கடந்த ஜூலை 2017 முதல் மாநிலங்கள் ரூ. 78,929 கோடி இழப்பீட்டை சந்தித்தித்துள்ளதாகவும் இந்த இழப்பீட்டை புதிய மறைமுக வரி விதிப்பு முறையில் உள்ள இழப்பீடு சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அமித் மித்ரா தெரிவித்தார்.

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மித்ரா,  “மத்தியில் உள்ள அரசு அதிரடியான முடிவுகளை எடுப்பதிலும் நாசகரமான முடிவுகளை எடுப்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளிடம் பொருளாதார நிச்சயமற்றதன்மை குறித்து அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது” என்றார்.

உயர் மதிப்பு கொண்ட பணத்தாள்களின் மதிப்பு நீக்கம், விவசாயிகளையும் முறைசாரா துறையினரையும் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார். ஜப்பான், சுவிட்ஸர்லாந்து போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட இந்தியாவைக் காட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தை அதிக அளவு பெற்றுள்ளன.

படிக்க:
கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !
முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.-ஆல் ரூ. 4.75 லட்சம் கோடிக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. 2015-16- ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சியை சரிகட்ட இந்தியாவுக்கு குறைந்தது நான்காண்டுகளாவது தேவை.  2015-16 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்து 2017-18 ஆண்டுகளில் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.  மார்ச் 2019- ல் முடியவிருக்கும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக வளரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என்ற மித்ரா,  ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

ஜி.எஸ்.டி.யின் நன்மைகள் குறித்து நாடெங்கும் வகுப்பெடுக்கும் சங்கிகள்!

ஜி.எஸ்.டி.யில் பொருத்தமான ரசிது வழங்கும் முறை இல்லாததால், தவறான ரசிதுகளைக் கொடுத்து, வரி சலுகையைப் பெற பலர் நினைக்கின்றனர்.  இது முறைகேடானப் பணபரிமாற்றத்துக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் மித்ரா.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடத்தில் ரூ. 1 கோடி கடன் என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வாங்கிய எவரையும் தான் பார்க்கவில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் இந்தத் திட்டத்தை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். ஆரம்பக்கட்ட ஒப்புதலுக்கு மட்டுமே கடன் அளிக்கும் இந்தத் திட்டம், எப்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு பலனளிக்கும்?” என மித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார வல்லுநர்கள், முன்னாள் நிதியமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் வரை பொருளாதாரம் தெரிந்த அனைவரும் மோடியின் வெத்துவேட்டு அதிரடிகளை கிழித்து காயவைத்துவிட்டனர். நேர்மையாக பதில் சொல்ல முடியாத மோடி கும்பல், அயோத்தி காவி அரசியலை கையிலெடுத்துள்ளது.

செய்தி ஆதாரம்:
Demonetisation, GST cost economy Rs 4.75 lakh crore, says Amit Mitra

இதையும் பார்க்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க