ஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெறவிருக்கும் சூழலில், தமிழில்தான் குடமுழுக்கு பூஜை நடைபெற வேண்டும் என தமிழக மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மக்கள் அதிகாரம் அமைப்பினர் குட முழுக்கை தமிழில் தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி,

தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு

“கட்டியவன் தமிழன் !
வழிபடுபவனும் தமிழன் !
சமஸ்கிருதத்திற்கு இங்கென்ன வேலை ?
தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்து !”

என்ற முழக்கங்களை வைத்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இம்முழக்கங்களை போஸ்டர்களாக தஞ்சை முழுவதும் ஒட்டி வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

கடந்த 02-02-2020 அன்று மாலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தோழர்கள், தேவா, பாலாஜி ஆகியோரை அப்பகுதி போலீசு துணை ஆய்வாளர் முத்தரசன் கைது செய்து தஞ்சை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

தமிழில் குடமுழுக்கு நடத்து என போஸ்டர் ஒட்டியதற்காகக் கைது செய்வது ஒருபுறத்தில் தமிழக போலீசின் யோக்கியதையைக் காட்டியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோசஸ் ஜோசப் செபாஸ்டியன், போஸ்டர் ஒட்டிய “குற்றத்திற்காக” மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரையும் வருகிற பிப்ரவரி 16-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதைப் பார்க்கும் போது நீதித்துறையின் யோக்கியதையும் என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது !

கருத்துரிமையைப் பறிக்காதே ! கைது செய்யப்பட்ட இரு தோழர்களையும் உடனடியாக விடுதலை செய் !

தகவல் : மக்கள் அதிகாரம்