ங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

படிக்க:
♦ எஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே !
♦ மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !

கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.

காங்கிரஸ் கண்டனம்

ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

4 மறுமொழிகள்

 1. இது போன்ற செய்திகள் நம்மை முட்டாளாக்க பயன்படுத்துகிறார்கள்.தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் வட்டி கட்டாதவர்களை வங்கிகள் கண்காணித்து கடிதம், மின்னஞ்சல் அனுப்பும்.குறிப்பிட்ட அலுவலகம் பூட்டியிருந்தால் கதவில் நோட்டீஸ் ஒட்டுவார்கள்.பின்னர் கிளை அலுவலகம் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுப்பார்கள்.தலைமை அலுவலகம் RBI க்கு தகவல் கொடுக்கும். இடையில் நேரடி விவாதம், காவல்துறை, வருமானவரி துறை நடவடிக்கையும் நடைபெறும்.வாங்கிய கடனுக்கு ஈடு கொடுத்த சொத்தை முடக்குவார்கள்.முடிந்தால் ஏலம் விடுவார்கள்.சாமானிய மக்கள் இந்த நடவடிக்கைகளுக்குள்ளே பயந்து சொத்தை விற்று அல்லது வேறு பக்கம் கடனை வாங்கி செட்டில் செய்துவிடுவார்கள்.ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் சொத்தின் மதிப்பை விட பல மடங்கு அதிகமாகவே கடன் கொடுத்திருப்பார்கள்.அதே நேரம் பினாமி பெயரிலும், வெளிநாட்டிலும் சொத்துகளை வாங்கி குவித்துவிட்டு ஆட்சியாளர்களுக்கும், பெரும் கட்சிகளுக்கும் (எதிர் கட்சிக்கும்)குறிப்பிடத்தக்க பணத்தை நன்கொடையாக கொடுத்துவிட்டு விமானத்தில் பறந்துவிடுவார்கள்.பொதுமக்களை ஏமாற்ற பேப்பரில், செய்திகளில் அப்பப்ப நடவடிக்கை எடுப்பது போல சில பில்டப் வேலைகளை செய்து கொண்டே இருப்பார்கள்.ஓராண்டுக்கு மேல் வட்டி முதற்கொண்டு எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லையென்றால் (கணக்கு செயல்படாமல் இருந்தால்)WriteOff இறந்த கணக்கு என தீர்மானித்து RBI கும், அரசுக்கும் சம்பந்தபட்ட வங்கி தெரிவித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பார்கள்.அப்போதும் கடன்காரர்களை கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அவர்களின் PAN நம்பரை கொண்டு வேறு வங்கிகளில் இருக்கும் சொத்தையும் முடக்குவிடுவார்கள்.திரும்ப கடன் வாங்க முடியாது அவ்வளவு தான். அரசியல் செல்வாக்கற்ற நபர்கள் சிலர் அல்லது உள்நாட்டில் மாட்டிக் கொண்ட சிலர் கம்பி எண்ணலாம்.வெளியில் இருக்கும் வாரை தான் அவர்களுக்கு சிக்கல் நீதிமன்றம் சென்று விட்டால் சேப்டி தான். இந்த Write Off வழக்கம் ஒரு சாதாரண விசயமாக வங்கிகளில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெரும்.அதை அப்போதைக்கு எந்த கட்சி எதிர்கட்சியோ அதை அம்பலப்படுத்துவார்கள்.

 2. Central Government didn’t waive of the defaulter’s loan….This is called write off… This doesn’t mean discount or waiving off or giving a clean chit to the defaulters… NEarly 9000 crore worth assets of vijay mallaya is attached by ED and nearly 1650 crore worth of assets were already recovered. Same is the case of neerav and soksi…. their assets are already attached by ED… This article is written without understanding the basics of financial operations of the RBI. For more understanding, check out the RBI site.

 3. ஒரு ஊரில் இருந்த பெரியவருக்கு ரூபாய் ஐந்து கோடிக்கு சொத்து இருந்தது .அதில் ருபாய் ஒரு கோடியை அவருடைய நண்பர் தொழில் தொடங்க கடன் கொடுத்தார் . நண்பரின் சொத்தின் மீது அடமான பாத்திரம் பெற்று கடன் தராமல் , அவருடைய திறமையின் நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தார் . இப்பொழுது அவர் தனது சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .
  4 கோடி சொத்து கையிருப்பு
  1 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது
  மொத்தம் ஐந்து கோடி

  தொழில் நன்றாக ஓடும் பொழுது , நண்பர் வட்டியை தவறாமல் கட்டினார். ஒரு நாள் தொழில் நஷ்டம் ஏற்படவே ,அவருடைய நண்பர் தொழிலை மூடியதுடன் ,கடன் பாக்கியை தர முடியாது என்று கூறிவிட்டார். வீட்டு பத்திரம் வாங்காததால் , கடனை பெற முடியாமல் மனம் உடைந்து இறந்து போனார் . இப்பொழுது அவர் மகன் பொறுப்பை எடுத்து கொண்டார் . தந்தையின் நண்பரிடம் பேசி மிச்சம் இருந்த பேக்டரியை விற்று ஒரு சிறு தொகையை பெற்று கொள்ளலாம் என்று சென்றால் அணைத்து வாடகை கட்டிடத்தில் நடந்து இருந்தது . சட்ட நிபுணரோ , உனது தந்தை அடமானம் வாங்கி கடன் கொடுக்க வில்லை அதனால் உனது தந்தையின் நண்பரின் வீட்டை பெற முடியாது என்று கூறிவிட்டார் .

  வீட்டிற்கு வந்த மகன் சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .
  4 கோடி சொத்து கையிருப்பு
  1 கோடி கடன் திரும்ப வராது
  மொத்தம் சொத்து நான்கு கோடி .

  இப்பொழுது இவனது பக்கத்துக்கு வீட்டுகாரர் , ஊரெல்லாம் சென்று அந்த பையன் சரி இல்லை . ஒரு கோடி ரூபாயை அம்போ என விட்டு விட்டான் , ஒரு கோடி ரூபாயை தொலைத்து விட்டான். அவன் ஒரு உதவாக்கரை என்று கூறினார் .

  இப்பொழுது நீங்கள் கூறுங்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தது யார் ?
  1. தந்தை – அடமானம் வாங்காமல் கடன் கொடுத்தவர்
  2. மகன் – சொத்து கணக்கை நான்கு கோடி என்று திருத்தி எழுதியவர்
  3. ஊரிலாம் சென்று ஒரு கோடி ரூபாயை தொலைத்துவிட்டான் என்று கூறுபவர் உண்மை கூறுகிறாரா ? இவர்கள் சொல்வதை வைத்து அந்த ஊர் மக்கள் முடிவு எடுக்கலாமா ?

  கடன் தள்ளுபடி (லோன் waiver ) என்பது கடன் வாங்கியவர் பணம் சொத்து வைத்து இருந்தாலும் பணத்தை தர வேண்டாம் என்று கூறுவது. கடன் வாங்கியவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது

  வராக்கடன் (லோன் writeoff ) என்பது – கடன் வாங்கியவரிடம் பணம் இல்லை , அதனால் வங்கியின் சொத்து மதிப்பை மாற்றி எழுதுவது. கடன் வாங்கியவர் மீதான சட்ட பூர்வ நடவடிக்கை தொடரும் .

 4. இந்த கணக்கியல் விளக்கங்கள் எல்லாம் தெரியும் ஐயா. பிரச்சினை அது அல்ல. கங்கிராஸாக இருந்தாலென்ன bjp என்றாலென்ன பிரச்சினை அவர்கள் யார் சார்பாக முடிவு எடுக்கிறார்கள் என்பது. எவ்வளவு பணம் மீள சட்டநடவடிக்கைகள் மூலம் முடக்கப்பட்டது என்பது தான் முக்கியம். write off பிரச்சினை அல்ல. உண்மையில் தொழில்நுட்ப , கணக்கியல் வேறுபாடுகள் இருந்தாலும் நடைமுறையில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் யதார்த்தம். சரி இவர்களுக்கு எதிராக முன்பு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எவ்வளவு சொத்துக்கள் seize செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு பணம் பெறப்பட்டது. எவ்வளவு பேர் தண்டனை அடைந்தார்கள் என்பது முக்கியம். அதிலுள்ள சட்ட குறைபாடுகளை நீக்குவதில் எவ்வாறு அரசுகள் செல்லப்பட்டன என்பதுதான் முக்கியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க