பத்திரிக்கை செய்தி
நாள் : 15.05.2020
துக்கம் விசாரித்தால் வழக்கா? பொய் வழக்கு போட்ட போலீசு மீது நடவடிக்கை எடு !
அதிமுகவைச் சேர்ந்தவர்களால் எரித்துக்கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதற்காக விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் மற்றும் எட்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் விடுதலை சிறுத்தைகள்கட்சி, தேமுதிக,பாஜக, முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் விழுப்புரம் திருவெண்ணை நல்லூர் போலீசால் 143,188,269, 3 of Epidemic disease act, 51 of Disaster management act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கலியபெருமாள் மற்றும் முருகனுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் அனைத்து குற்றங்களுக்கும் துணை போன விழுப்புரம் மாவட்ட போலீசு துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதென்பது கண்டிக்கத்தக்கது.
படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?
குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.
பொய்யான புகார் அளித்த விஏஓ சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும். மேலும் பொய்வழக்கு போட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தங்கள்
மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.