மிழ் அச்சு ஊடகத்துறையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்த இந்து-தமிழ் நாளிதழ், அச்சு ஊடகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடாகவும் பொய்ச்செய்திகளின் புகலிடமாகவும் பாஜக அரசின் அடிவருடியாகவும் மொத்தமாக மாறியுள்ளது.

ஆண்டின் சில வாரங்கள் நீங்கலாக, மொத்தமும் தமிழகத்துக்கு வெளியே குப்பை கொட்டி வந்ததாலும்; இத்தனை நாளாக, இணையத்தில் இவர்களது நடுப்பக்கக் கட்டுரைகளை மட்டுமே படித்து வந்ததாலும் இந்த உண்மை எனக்கு உறைக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டுக்கு வந்து முழுச் செய்தித்தாளாகப் படிக்கும்போதுதான், தனது தாய் நாளேடான ஆங்கில இந்து கடைபிடிக்கும் அடிப்படையான ஊடக அறங்கள் நெறிமுறைகள் எவற்றையும் பேணாது மாநகராட்சிக் குப்பைக்கிடங்கைவிட மோசமாகத் தமிழ் இந்து பேணப்படுகிறது என்கிற உண்மை உறைத்தது.

கொரோனாவுக்கான மருந்துக்காக ஆயிரமும் இலட்சமுமாகக் கோடிகளை வாரியிறைத்து உலகின் வல்லரசு நாடுகளெல்லாம் முடிவேதுமின்றிப் போராடிக் கொண்டிருக்க, இந்தியாவில் ஒரு டுபாக்கூர் நிறுவனம் அதற்கான மருந்தைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக எந்த அரசுத்துறை ஒப்புதலும் இன்றியே அறிவிக்கிறது. அவர்களது செய்திக்குறிப்பை PTI வாயிலாகப் பெறும் இந்து தமிழ் நாளேடு அப்படியே விளம்பரதாரர் பகுதி போல அதனைச் செய்தியாக வெளியிடுகிறது. மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு செய்தியில் பிற பார்வைகளையும் கோணங்களையும் மாற்றுக்கருத்தினையும் இறுதியில் இணைத்து வெளியிட வேண்டுமென்ற அடிப்படையான ஊடக நெறிமுறையைக் கூடப் பின்பற்ற முடியாத அளவுக்குப் பொறுப்பற்ற அசட்டைத்தனம்.

இந்தியாவின் தற்போதைய அரசைத் தலைமையேற்று நடத்துபவர் எப்படிப்பட்ட முட்டாள் என்றால், பண்டைக்காலத்திலேயே பாரதத்தில் சோதனைக்குழாய்க் குழந்தை, மரபணு அறிவியல், உறுப்புமாற்று அறுவை மருத்துவம் என அனைத்தும் இருந்ததாகவும் கர்ணனும் விநாயகரும் இவற்றுக்குச் சான்றுகள் எனவும் அறிவியல் மாநாட்டுக்கே சென்று பறைசாற்றும் அளவுக்கு வடிகட்டிய முட்டாள். ஆனால் இப்படியான முட்டாள் அரசின் ஆயுஷ் (இழவெடுத்த பெயர்) அமைச்சகமே பதறியடித்துக்கொண்டு பதஞ்சலி தன் மருந்தை (!?) விளம்பரம் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !
♦ ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை

ஆனாலும் பதஞ்சலி தயாரிப்பைப் பற்றி, கால் பக்கத்துக்கு அழகாக, வண்ணமயமான படத்துடன் அவர்கள் சொன்னதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பொறுப்புணர்வும் இன்றி ஒரு நாளிதழ் வெளியிடுகிறது என்றால் அதன் தரத்தை நீங்களே எடைபோட்டுக் கொள்ளலாம். ஆயுஷ் துறையின் எச்சரிக்கையைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் ஆறாம் தேதி சிறையிலடைக்கப்பட்ட ஆனந்த் டெல்டும்டே பற்றி இன்று வரை அவர் பெயரையே குறிப்பிடாமல் வெற்றிகரமாக மறைத்து வருவதும் தமிழ் இந்துதான். கருவுற்றிருந்த நிலையிலும் சான்றுகள் ஏதுமின்றியும் சிறையிலடைக்கப்பட்ட மாணவி சபூரா சர்கார் இரு மாதங்களுக்கு மேலாகச் சிறையில் வாடி நேற்று ஒருவழியாகப் பிணையில் வெளியாகியும் விட்டார். அதைப் பற்றியும் ஒரே வரி கூட ஒதுக்க தமிழ் இந்துவுக்கு மனம் இல்லை.

பாகிஸ்தான் வாழ்க என்று கத்திய ஒரே செயலுக்காக தேசத்துரோகப் பிரிவில் 19 வயதே ஆன சிறுமியான அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்கா வாழ்க, இலங்கை வாழ்க, வங்கதேசம் வாழ்க, பிரான்சு வாழ்க என்று கத்தினால் எப்படித் தேசதுரோகம் ஆகாதோ அதுபோலத்தான் இதையும் சட்டப்படிக் கருதவேண்டிவரும். ஏனெனில் சட்டப்படி பாகஸ்தான் வாழ்க என்பதை எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானது என்று வரையறுக்க இயலாது. பாகிஸ்தான் எதிரி நாடு என்று இந்தியாவின் எந்தச் சட்டமும் கூறவில்லை. எனினும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் பல மாதங்கள் அந்தச் சிறுமி கொடுமைக்குள்ளானார். பிணைக்காக விண்ணப்பித்தபோது, தப்பிச்சென்றுவிடக்கூடும் என்று மகா அபத்தமான ஒரு காரணத்தைக் காட்டி ஒரு ‘நீதியரசர்’ மறுத்தார். எப்படியோ பிறகு அச்சிறுமியும் வெளியே வந்தார். இந்த அமுல்யா தொடர்பான வழக்கிலும் தமிழ் இந்து கப்சிப்தான்.

இவை சில சோற்றுப் பதங்கள். இவர்களில் யாருக்கும் ஆதரவாக நடுப்பக்கக் கட்டுரைகள் கூட வேண்டாம், இவ்வாறு நடக்கிறது என்று செய்தியாகக் கூடத் தமிழ் இந்து வெளியிடாமல் புறக்கணித்து பாஜக அரசுக்கு வாலாட்டி வருகிறது. ஆனால் தேவையற்ற குப்பைகளை மலை மலையாகக் கொட்டுவதற்கு மட்டும் தயங்கவே தயங்காது.

தமிழ் வாசகப் பரப்பில் ஆங்கிலத்துக்கு நெருக்கமான அறிவார்ந்த உரையாடலை இந்துவின் தமிழ்ப் பதிப்பு உருவாக்கப் போகிறது என்று நினைத்த யாரும், அதற்கு முற்றிலும் நேரெதிராகத் திரும்பி, அது பதஞ்சலிக்குச் சொம்படிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பி.கு : மேலும் விரிவாக, தமிழ் இந்துவின் ஊடகச் சீர்கேட்டைப் பற்றியும், மிக அடிப்படையான ஊடக நெறிகளைக் கூட பின்பற்றாத தன்மை
பற்றியும் எழுதப் பலவற்றைச் சேகரித்து வைத்துள்ளேன். ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைகொண்டதுபோலத் தெரியாததால் எழுதுவதற்கு நாட்டம் ஏற்படுவதில்லை.

நன்றி : ஃபேஸ்புக்கில் Arunkumar Cheyyaru 

2 மறுமொழிகள்

  1. நானும் உங்களைப் போலவே எதிர்பார்த்து தமிழ் இந்துவின் சந்தா தாரராக உள்ளவன். ஆனால் தற்போது வெறுத்துப் போய் சந்தாவை நீடிப்பதில்லையென முடிவெடுத்துள்ளேன்.தமிழ் இந்து தின மலருடன் போட்டி போட்டு ஜால்ரா அடிப்பது குறித்து மிகவும் வருத்தமே.

  2. தி ஹிந்துவின் ஆங்கில பதிப்பு மட்டும் எந்த அளவுக்கு உசத்தி என தெரியவில்லை. இலங்கையில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதை திட்டமிட்டு மறைத்ததுடன் இன்றுவரை அதை whitewash செய்யும் வேலையை திறம்பட செய்துவருகிறது. கம்யூனிச முகமூடியில் எந்தவிதமான மனிதத் தன்மையும் இல்லாமல் நடத்தப்படும் நாளேடு. அவனுடைய தமிழ் பதிப்பு கருணாநிதி அண்ணாதுரை ஆகியோர் எழுதிய மேலோட்டமான அடுக்குமொழி அலங்கார வசனங்களுக்கு இலக்கிய தகுதி கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. இந்த நாளேட்டின் யோக்கியதை சில காலத்திற்குப் பிறகு தான் யாருக்கும் தெரியவரும். இதை படிப்பதற்கு பதிலாக டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை படிக்கலாம். அவர்களிடம் ஓரளவுக்காவது நேர்மை இருக்கிறது. ‌

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க