“ரஜினிக்கான எதிர்வினை : ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல் ?” என்ற தலைப்பில் தலையங்கம்  தீட்டி ‘கருத்துச் சுதந்திரத்திற்கே’ ஒரு புதுப் பரிமாணத்தைக் காட்டியுள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை திரையில் விசிலடித்து ரசித்து வந்த தமிழ்ச் சமூகம், பெரியார் பற்றிய அவரது சமீபத்திய பேச்சுக்களை சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் கிண்டலடித்துக் கண்டனமும் செய்து வருகிறது.

சங்க பரிவாரக் கும்பல் குருமூர்த்தி மூலமாக தனது தமிழக முகமாக ரஜினிகாந்தை ஒரு ‘ஆளுமை’யாகக் கட்டமைக்கத் திட்டமிட்டுவரும் நிலையில், அந்த ‘ஆளுமை’ சிதைக்கப்படுவதைக் கண்டு தாங்க முடியாத இந்து தமிழ் திசை தனது தலையங்கத்தின் தொடக்கத்திலேயே இந்தக் ‘கொடுமைகளை’ எல்லாம் குறிப்பிட்டு தமிழகத்தில் “சமூக வெளி மோசமாகி” விட்டதாக வருந்துகிறது.

உள்நுழைந்ததும், துக்ளக் கூட்டத்தில் பெரியார் விவகாரத்தை ரஜினி பேசுவதற்கான நியாயத்தை நம்மிடையே முன் வைத்து நமது அங்கீகாரத்தைக் கோருகிறது இந்து தமிழ் திசை. சோ ராமசாமியின் தைரியத்துக்கு உதாரணம் கொடுப்பதற்காகத் தான் 1971 சேலம் மாநாட்டைப் பற்றி ரஜினி குறிப்பிட்டாராம். அதாவது, “ரஜினி பெரியாரைப் பற்றி பேசியதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத்தான் இந்து தமிழ்திசை நமக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அடுத்ததாக, பெரியார் நடத்திய சேலம் மாநாட்டில் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டதை வேறு யாரும் கண்டிக்கவில்லை; சோ ராமசாமிதான் கண்டித்து எழுதினார் என்ற ‘வரலாற்றுத்’ தகவலை துக்ளக் மேடையில் ரஜினிகாந்த் சாதாரணமாக பேசியதற்காக பெரியாரிய, முற்போக்கு அமைப்புகள் கண்டனங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் அறிவித்திருப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது இந்து தமிழ் திசை.

நிர்வாணமாக செருப்பு மாலை போட்டு ஊர்வலம் எடுத்துச் சென்றனர் என உண்மைக்குப் புறம்பாக ரஜினிகாந்த் பேசியதைக் குறிப்பிடாமல், ஒரு சாதாரண விசயத்தை ரஜினிகாந்த் பேசியதற்காக அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் என்ற தோற்றத்தை இதன்மூலம் கொடுத்துவிட்டுக் கடந்து செல்கிறது இந்து தமிழ் திசை.

அடுத்த சில பத்திகளுக்குப் பிறகு,

“பெரியாரியர்களின் மொத்த வாதமும் இந்த விஷயத்தில் ஒன்றுதான், “ரஜினி குறிப்பிட்டபடி ராமர் – சீதை படங்கள் நிர்வாணமாகவோ செருப்பு மாலை அணிவித்தோ எடுத்துச் செல்லப்படவில்லை; அந்த ஊர்வலத்தில் பெரியார் மீது காலணி வீசப்பட்டதன் எதிர்வினையாகவே கடவுளர் படங்கள் காலணியால் அவமதிக்கப்பட்டதானது நடந்துவிட்டது” என்பதே அது.” என்கிறது.

படிக்க :
முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

மேற்கண்ட பத்தியில், ரஜினி தவறான தகவலைப் பேசியதாக பெரியாரியர்கள் சொல்வதாகக் கூறும் இந்து தமிழ்திசை அது குறித்து தமது கருத்தைப் பதிவு செய்யாமல், பின்வருமாறு அதைக் கடந்தும் செல்கிறது. “சரி, ரஜினி சொன்ன அந்த ஒரு தகவலில் தவறு இருப்பதாகவே கொண்டாலும், ஒரு மறுப்பு அறிக்கையோடு முடிந்திடக்கூடிய விஷயம்தானே இது? இதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்?” என்றும் வினவுகிறது.

பிரச்சினையின் நடுநாயகமாக வீற்றிருப்பது துக்ளக் பத்திரிகை. அதன் ஆசிரியர்களுள் ஒருவரான ரமேஷ், ராமர், சீதை சிலையை நிர்வாணமாகக் கொண்டு சென்றார்கள் என ரஜினி கூறியது தவறான தகவல் என ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையிலும் செத்துப் போன சோ ராமசாமியே மீண்டும் வந்து ரஜினி சொன்னது பொய் எனக் கூறினாலும் அதன் மீது தன்னுடைய கருத்தைக் கூற தயாராக இல்லை என்பதை மேற்கண்ட அதன் வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

நமக்குத் தெரிந்தவரையில் தலையங்கம் என்பது நடப்பு நிகழ்வுகளின் மீது ஒரு பத்திரிகை தனது சொந்தக் கருத்தை பகிரங்கமாகப் பேசுவதற்கான பகுதி.

நிர்வாண ராமர், சீதா சிலையை பெரியார் ஊர்வலமாகக் கொண்டு சென்றார் என ரஜினி சொன்ன தகவல் சரியானதா ? தவறானதா ? அதன் மீது இந்து தமிழ்திசையின் கருத்து என்ன ? “ரஜினி சொன்னது தவறுதான். ஆனாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று கூட சொல்லட்டும், பரவாயில்லை. அல்லது “ரஜினி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூட சொல்லட்டும்; ஆனால் அதை நேரடியாகச் சொல்லக்கூடிய நேர்மை வேண்டுமல்லவா? அதுதானே யோக்கியமான பத்திரிகைக்கு அழகு ?

அடுத்ததாக ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் எனச் சொன்னபிறகும் நீதிமன்றம் செல்வதாக பெரியாரிய இயக்கங்கள் கூறியிருப்பது, இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையில் அபத்தமானதாம்; கருத்துச் சுதந்திரத்துக்கு விரோதமானதாம்; கண்டனத்துக்குரியதாம்.

கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யான தகவலைச் சொல்லிவிட்டு, அது பொய்தான் என்பதை பலரும் நிரூபித்த பின்னரும், மன்னிப்புக் கேட்க முடியாது எனத் திமிராகப் பேசும் ஒரு மனிதன் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் கண்டனத்துக்குரியது என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானது என்பதும் இந்து தமிழ் திசைக்கே வெளிச்சம்.

படிக்க :
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
♦ அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !

அந்தத் தலையங்கத்தின் மீதப் பகுதி முழுக்க கருத்துச் சுதந்திரம் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் நம் அனைவருக்கும் வகுப்பு எடுக்கிறது இந்து தமிழ் திசை.

அதில் ஒரு இடத்தில், “இத்தகு சூழலில், கடவுளையே விமர்சிக்கும் அளவுக்குக் கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு இயக்கம், தம்முடைய தலைவர், இயக்கம் தொடர்பான ஒரு செய்திக்காக இவ்வளவு பதறுவதும் எதிர்ப்பதும் பெரிய முரணாக இருக்கிறது.” என்று பெரியாரிய அமைப்புகளைக் குறிப்பிடுகிறது.

இந்திய சமூகத்தில் ஏற்கெனவே கருத்துச் சுதந்திரம் வழிந்தோடிக் கொண்டிருந்தது போலவும், அதைக் கொண்டாடி கடவுள் எனும் கருத்தாக்கத்தை பெரியார் எதிர்த்தது போலவும் எளிமையாகக் கடந்து போகிறது தமிழ்திசை.

கடவுளர்களது புராணக் கட்டுக்கதைகள் மூலம் சாதிய படிநிலையை சமூக யதார்த்தமாக மாற்றிய பார்ப்பனியத்தை எதிர்த்துப் பெரியார் நடத்திய கலகத்தின் விளைவாக வெற்றிகொள்ளப்பட்டதுதான் தமிழகத்தில் தற்போது நிலவும் கருத்துரிமை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைபொருள் அது.

அவ்வகையில் திராவிட, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களால் வென்றெடுக்கப்பட்ட கருத்துரிமையை, தான் பேசியது தவறு எனத் தெரிந்தே அவதூறு பேசும் அரைவேக்காட்டு ரஜினியின் உளறுவதற்கான உரிமையோடு ஒப்பிடுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தின் மீது புல்டோசரை ஏற்றுகிறது இந்து தமிழ்திசை.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஒக்கிப் புயல் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, பாபர் மசூதி இடிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு விவகாரங்களிலும் செய்திகளை வலதுசாரி – ஆளும்வர்க்க சார்புத்தன்மையோடு நைச்சியமாக இந்து தமிழ் திசை எழுதி வந்திருக்கிறது என்பது நாம் அறிந்த வரலாறுதான் !

அந்த வரலாற்றில் இது பத்தோடு பதினொன்றுதான் எனினும், நமது ஆதங்கம் எல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு இந்தச் சாத்தான் எல்லாம் வந்து வேதம் ஓதுகிறதே என்பதுதான் !

நந்தன்
நந்தன்

23 மறுமொழிகள்

 1. ஒரு வெங்காயமும் இல்லை, ஹிந்து மத எதிர்ப்பில் பெரியாருக்கு நல்ல வருமானம் கிடைத்தது (கண்ணதாசன் சொன்னது) ..

  பெரியார் கிறிஸ்துவ மிஷனரகள் பரப்பி வைத்த பொய்களை உண்மை என்று பகுத்தறிவு இல்லாமல் நம்பினார் அல்லது தனது வருமானத்திற்கு பயன்படுத்திக்கொண்டார், அதன் வெளிப்பாடு தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி தமிழ் வேண்டாம் ஆங்கிலம் படி, ஆங்கிலம் படித்தால் தான் அறிவு வளரும் போன்ற மூடநம்பிக்கை கருத்துக்களை பரப்பினார். பெரியாரை பரப்பிய மூட நம்பிக்கை கருத்துக்களை வந்தேறி மதங்களை சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக பயன்படுத்திகொள்கிறார்கள்.

  • கண்ணதாசன் ஒரு பெத்தடின் கேசு, கண்ணதாசன் ஒரு மொடா குடியன், போதை மருந்து (பெத்திடின்) அடிமை, பெண் பித்தன், ஒரே வீட்டில் இரண்டு பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தியவன், ஒரு மெண்டல் கேஸ் ( cyclothymic temperamental disorder) (Indian Journal Of Psychiatry, Jan-March 2011;53(1): 82-86).
   அவனுக்கு பெரியாரை பற்றி சொல்ல என்ன யோக்கியதை இருக்கு

 2. ரஜினி ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார் ஆனால் பெரியாரியவாதிகள் அவர்களாவே முன் வந்து அவர்களின் போலித்தனங்கள், ஹிந்து வக்கிர சிந்தனைகள், பாசிஸ்ட் வக்கிர மனப்பான்மை அனைத்தையும் அம்பலப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

  பெரியரியவாதிகள் அமைதியாக இருந்திருந்தால் இந்தளவுக்கு அம்பலப்பட்டு இருக்க தேவையில்லை.

  பெரியரியவாதிகளை அவர்கள் வாயாலாயே அம்பலப்படுத்திய ரஜினி வாழ்க.

 3. நாங்க ஹிந்து கடவுளை அவமதிக்கவில்லை என்று பெரியாரியவாதிகள் தெரு தெருவாக கதறுவதை கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  தெய்வம் நின்று கொள்ளும்

 4. @Manikandan
  உங்களுடைய கருத்துச்சுதந்திரத்தை வினவு பின்னூட்டங்களில் மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும். வேறு எந்த பார்ப்பன-பணியா-முதலாளித்துவ ஊடகத்திலும் உங்களால் ஒன்றையும் ‘பிடுங்க’ முடியாது, இந்த சுதந்திரத்தை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பதிவுகளிலும் ‘கழிய’ வேண்டாம்.

  (நாத்தம் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி அரைவேக்காடு-கீழ்ப்பாக்கம் கன்றாவிகளையெல்லாம் பின்னூட்டத்தில் வினவு ஏன் அனுமதிக்கிறதோ? )

 5. தமிழக மக்களுக்கு ரஜினி ஆற்றும் தொண்டை எல்லோரும் பாராட்டவே வேண்டும். பெரியாரின் மாபெறும் சேவையை தமிழக மக்கள் மறந்து போன நிலையில், துக்லக் விழாவில் 1971 ஆண்டு பெரியார், ஆடைகள் இல்லாத ராமர் சீதை சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்ததாக ஒரு தவரான பொய் செய்தியை ரஜினி கூறியதால் தமிழகமே அதிர்ந்தது!. இந்த செய்தி மூலம் பெரியார் யார் என்று அறிந்து கொள்ள, இளைஞர்கள் உலகம் கூகள் (google) வழியாக தேடுதல்கள் அதிர்கிறது!. எனக்கும் என்னைப் போன்றோருக்கும் மனக்கண் திரை முன்னால் கற்பனை காடசியில் இது நேரிலே நடைபெறும் நிகழ்வாகவே தோன்றுகிறது. பல லட்சம் மக்கள் கற்பனையில் ராமர் செருப்பால் அடிபடுவதை கட்டணம் இன்றி காண்பதற்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜிக்கு பகுத்தறிவு உள்ளவர்கள், நன்றி சொல்லவே கடமைப் பட்டுள்ளார்கள். ரஜினி சொல்லியதால் தான் ஊடகங்கள் மூலம் எல்லா மக்களுக்கும் பெரியாரின் தன்னலமற்ற தொண்டு மனதில் பதிவாகி உள்ளது. வாழ்க ரஜினி! வாழ்க பெரியார்!! வளர்க பகுத்தறிவு!!!

 6. வெறிநாய் கூச்சல் அதிகமாக இருக்கே… தேர்தலில் ரஜனி பத்து இடங்கள் கூட பிடிக்க முடியாது.வா… நீதான் தைரியமான ஆள் ஆச்சே. வந்து பாரேன். வெறிநாய் நாகபூரில் கத்தினால் கொஞ்சம் காசு கிடைக்கும். அப்பிடியே நித்தி சாமியுடன் கைலாஸாவுக்கு போய் ஜாலி பண்ணலாம். இங்கே கத்தி என்ன பிரயோசனம். பாம்பையும் வெறிநாயையும் கண்டால் பாம்பை விட்டுவிடு வெறிநாய்களை நடு உச்சியிலே போடு. நீ என்ன வேணா கத்து ராஜா. ராஜனியால ஒரு மயிரையும் இந்த தேர்தலில் பிடுங்க முடியாது. சைக்…வீணா ராஜனியை ஒரு நல்லவன் என்று நம்பினேன் பாருங்கள். எனக்கு பெரியார் ஒத்தை செருப்பால் அடிக்க வேண்டும்.

 7. ரஜினியை பார்த்து நீங்கள் பயப்படுவது உங்கள் கதறல்களிலேயே தெரிகிறது. வினவு கூட்டங்கள் ரஜினி என்ற பிம்பத்தை அவதூறு மற்றும் பொய்கள் மூலம் உடைக்க பார்க்கிறார்கள்… அதற்கு பல காரணங்கள், அதில் ஒன்று ரஜினி மிக வெளிப்படையாக தன்னை ஹிந்து ஆன்மிகவாதியாக காட்டி கொள்வது, மற்ற அரசியல்வாதிகளை போல் ஹிந்து கடவுள்களை அவமதித்து கொண்டு ரம்ஜானுக்கு குல்லா போட்டு கொண்டும், கிறிஸ்துமஸுக்கு கேக் வெட்டி கொண்டு ஹிந்து கடவுள்களை இழிவு செய்யும் வக்கிரங்களை ரஜினியால் செய்ய முடியாது என்பது இவர்களுக்கு தெரியும் அதனால் ரஜினி வர கூடாது என்று நினைக்கிறார்கள். ஹிந்துக்களுக்கு எதிரான வினவு மற்றும் பெரியரியவாதிகளின் பாசிஸ்ட் மனப்பான்மையை தான் இது காட்டுகிறது.

 8. வினவு கூட்டங்கள் மற்றும் பெரியாரியவாதிகள் நேர்மையற்றவர்கள் என்று பல காலமாக சொல்லி கொண்டு இருக்கிறேன் அதற்கு இப்போது நடக்கும் இந்த விவகாரமே சாட்சி.

 9. யாரப்பா அங்கெ கெதியா அந்த வெறிநாய்க்கு மாட்டு மூத்திரம் வையுங்க. பாவம் தாகத்தில் கூச்சல் போடுது. நாயை கொன்ற பாவம் நமக்கெதுக்கு. ஜாலிதான் போ.

 10. பெரியார் முதலானவர்கள் முன்னெடுத்த இயக்கத்தால் அதிகம் பலனடைந்தவர்கள் தமிழகத்தின் பெரும்பான்மையினரான இடைநிலை சாதியினர். இன்றைக்கு இருக்கும் அவர்களின் வாரிசுகளுக்கு அதாவது வாட்ஸ்அப் தலைமுறையினருக்கு எழுபதுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த அரசியல் மற்றும் சமூக சூழ்நிலை குறித்து பெரும்பாலும் தெரியாது. திராவிட சிந்தனை கொண்டவர்கள் தங்களுடைய கொள்கைகளை தமிழகத்துக்கு வெளியே அகில இந்திய அளவில் கொண்டு சேர்ப்பதற்கு அதிக முயற்சி செய்யவில்லை. இவர்களால் தமிழகத்தில் கூட ஒரு உருப்படியான ஆங்கில நாளேடு மட்டுமல்ல அறிவுப்பூர்வமான தமிழ் நாளேட்டை கூட கொண்டுவர முடியவில்லை. இவர்கள் கொண்டுவந்த பள்ளி மற்றும் கல்லூரி கல்வி முறை பெரும்பாலும் குறைந்த தரம் கொண்ட சிந்தனைக்கு வழி இல்லாத மனப்பாட முறை. இதில் படித்துவந்த கடந்த இரண்டு மூன்று தலைமுறையினருக்கு ஒரு இழவையும் சிந்திக்க தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது திராவிட கட்சிகளின் வரம்பற்ற ஊழலும் குடும்ப அரசியல் அராஜகமும் தான். சிறுபான்மை மத தீவிரவாதத்தின் மீதான திராவிட கட்சிகளின் மென்மையான போக்கையும் அவர்கள் ரசிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இதெல்லாம் நடக்கத் தான் செய்யும். தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒன்று மத்தியில் அதிகாரத்தில் வலுவாக உட்கார்ந்திருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்படாமல் தமிழகத்தில் மட்டும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகத்தான் போகும்.

 11. ‘பெரியார் பெயரை கருவேப்பிலை போல் பயன்படுத்தி வந்த திராவிட கட்சிகள் , இப்போது சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள். பெரியாரால்தான் தமிழர்கள் வேட்டி சட்டை போட்டார்கள், எழுத்து கூட்டி படித்தார்கள் என்றெல்லாம் ஒரு மாயத்த்தோற்றம் போட்டவர்கள் இப்போது தமிழ் தேசியத்திற்கும் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குகிறார்கள்”

  மேற்கண்டவை நான் ஒரு இணையதளத்தில் படித்தது.

 12. இந்த நாய்கள் எழுதுகிற தமிழில் இருந்து …இவ்வளவு சுதந்திரமாக பேசவும் …வாழவும் … மகளிரின் சுதந்திரத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமைக்காகவும் பாேராடாடிய ஒரே ஆள் பெரியார்தான் …..! ஓட்டு பாெறுக்கிற அரசியலை ஒதுக்கி தள்ளியவர் ….பதவிக்காக எவனும் எவன் காலையும் நக்குவான் என்று அன்றே கூறியவர் … .! அவரை பற்றி முழுதும் அறியாமல் கடவுள் மறுப்பு என்கிற ஒன்றை மட்டும் பிடித்துக் காெண்டு அலைகிற மா.மூ .கூட்டத்துக்கு ஒரு ம…ரும் புரியாது …புத்தியிலும் ஏறாது …! ஆதரிக்கிற அபிமாணிகள் தவறை சுட்டிக்காட்டினால் தான் தலைவனாக வர துடிக்கிறவனுக்கு வழி காட்டியாக அமையும் …பினாத்தல்களை ஆதிரிக்கிறவன்களால் நல்ல தலைவனை உருவாக்க முடியாது …நடு நிலையா இருந்து சிந்தித்தால் உண்மை விளங்கும் …!

  • எதுக்கு பெரியார் பற்றி இந்த மாதிரியான பொய்கள்… ஏற்கனவே கண்ணதாசன் அவர்கள், பெரியார் ஹிந்து மதத்தை இழிவு செய்வதன் மூலம் எப்படி சம்பாதித்தார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

   ஆங்கிலேயர்களுக்கு (மிஷனரி) அடிமை வேலை பார்த்தவர் தானே இந்த பெரியார். மிஸ்சிஓனரிகள் பரப்பி வைத்த பொய்களை பகுத்தறியாமல் உண்மை என்று நம்பி அவர்கள் சார்பாக ஹிந்து கடவுள்களை இழிவு செய்தார்.

   பெரியார் ஒரு ஆங்கிலேய அடிமை சிந்தனை கொண்டவர் என்பதை மறுக்கவே முடியாது.

   • பெரியார் தெலுங்கு பேசும் உயர் சாதியில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். கோயில் தர்மகர்த்தா பதவி வகித்தவர். அவருக்கு சொந்த வாழ்க்கைக்காக காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எப்போதும் இருந்ததில்லை. அவர் தன்னுடைய இயக்கத்துக்கு நிதி திரட்டினார். அவ்வளவுதான்.

    • //அவர் தன்னுடைய இயக்கத்துக்கு நிதி திரட்டினார்// அவருக்கு நிதி திரட்டினால் என்ன அவரது இயக்கத்திற்கு நிதி திரட்டினால் என்ன எல்லாம் ஒன்று தான்… முரசொலி பத்திரிகை தொண்டர்கள் கொடுத்த காசில் தொடங்கப்பட்டது என்று கருணாநிதி சொன்னார் ஆனால் இன்று அது அவரின் குடும்ப சொத்து.

     எல்லா திராவிட கூட்டங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

   • ” பெரியார் ஒரு ஆங்கிலேய அடிமை சிந்தனை கொண்டவர் என்பதை மறுக்கவே முடியாது. ” அப்படியா …! இருந்தாலும் நான்கு முறை மன்னிப்பு கடிதம் எழுதிக்காெடுத்து எங்களின் கூட்டம் முழுக்க உங்களுக்கு சேவகம் செய்ய காத்திருக்கிறாேம் என்று அடிமை சிந்தனையுடன் கால் நக்கி சிறை விடுதலை பெறாதவர் பெரியார் என்பது சிறப்பானதுதான் …!

 13. எப்படி? உன்னுடைய வேதங்கள், புராணங்கள். இதிகாசங்கள், மனு தர்மம், ஆகமங்களிலுள்ள உண்மைகளை தமிழில் சொல்லியதால் அடிமையா? ஆங்கிலேயனின் அடிமையாக செயல்பட்டார் என்பதற்கான ஒரே ஒரு சான்று காட்டு பார்ப்போம். சவர்க்கார் தெண்டனிட்டு எழுதியது போல ஒரே ஒரு கடிதத்தைக் காட்டு பார்ப்போம்.
  கூசாமல் எந்தப் பொய்களையும் எழுதினால் மட்டறுப்பு செய்யாமல் வினவில் வெளியிடுவார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவாயா? எந்த வேலயும் செய்யாமல் உண்டு கொழுத்துத் திரிந்த பார்ப்பன பாசிசக் கூட்டத்தின் திள்ளுமுள்ளுகளை அம்பலப்படுத்தியதற்காக இத்தனை ஆங்காரமும், ஆத்திரமும் உள்ளதென்றால் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, வேசி மகன் என்று எழுதி வைத்து, ஊருக்குள் வரக் கூடாது, கல்வி கற்கக் கூடாது,………என எத்தனையெத்தனை கொடுமைகளைச் செய்தீர்கள்? இன்னமும் செய்து கொண்டிருக்கிறீகள்? உழைத்த கூட்டம் எப்போதும் அடிமையாக மட்டும் இருக்காது என்பதை இங்கு சொல்லி எச்சரிக்கிறேன்.
  வினவுக்கும் ஒரு வேண்டுகோள். ரொம்ப …………… நல்லவன் என்று என்ன அவதூறு எழுதினாலும் வெளியிடுவீர்களா? அப்படி ஒரு முடிவு உள்ளதா எனத் தெரியவில்லை.

  • இதோ ஒரு சில ஆதாரங்கள்

   1 இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது ஆங்கிலேயர்கள் தொடர்ந்து இந்தியாவை ஆள வேண்டும் என்று சொல்லி இந்திய சுந்தந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தவர் பெரியார்
   2 ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஹிந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று பிரித்தாண்டர்கள், அவர்களுக்கு உதவி செய்ய பெரியார் ஹிந்துக்களில் பிளவு உண்டாக்க பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்கள் என்ற பிரிவினை வெறுப்பை விதைத்தார்.
   3 பெரியார் கீழ் வெண்மணியில் நடந்த படுகொலைகளை பற்றி என்ன சொன்னார் என்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்… பெரியாரின் ஜாதி மறுப்பு எல்லாம் வெறும் வெளிவேஷம் தான் அதற்கு கீழ் வெண்மணி படுகொலைகள் ஒரு ஆதாரம்.
   4 மிஷனரிகள் ஹிந்து மதத்திற்கு எதிராக எழுதி வைத்த பொய்களை அப்படியே நம்பியவர் பெரியார்.
   5 தமிழ் வேண்டாம் ஆங்கிலம் படி, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஆங்கிலேயர்கள் (மிஷனரிகள்) பொய்களை பரப்பியவர் பெரியார்.

 14. எந்த வெறிநாய் பெரியாரைப்பற்றி என்ன சொன்னாலும் இந்த முறை தி மு க வெல்லப்போவது உறுதி. ரஜனி முடிந்தால் முதலில் கடசி தொடங்கி நின்று பார்க்கட்டும். பத்து சீட்டு கூட வெல்ல முடியாது. என்ன வேணுமெண்டாலும் எந்த வெறிநாயும் கதறட்டும். அதுவும் இந்த எச்ச வகையறாக்கள் கடும் போட்டியை தேர்தலில் ஏற்படுத்துவார்கள் (நோட்டாவுடன்). ஹா ஹா ஹா சங்கிகள் நல்லா கதறட்டும்.முடிந்தால் தேர்தலில் ஐந்து சீட்டு வேண்டாம் ஒரு கவுன்சிலர் தேர்தலில் வென்று காட்டட்டும் பார்க்கலாம். இந்த சங்கி வெறிநாய்கள் கதறலை கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வாரே வா.

  • ஐயா தம்பி ஆர்எஸ்எஸ் அமைப்பினரை குறைத்து மதிப்பிட வேண்டாம்.அப் படி குறைத்து மதிப்பிட்டு தான் நாடு இந்த நிலைமையில் இருக்கிறது. கொஞ்சம் உஷாராக கருத்து வெளியிடவும்.

  • திராவிட கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கூட்டங்கள் எல்லாம் நேர்மையற்ற பாசிஸ்டு மனப்பான்மை உள்ளவர்கள் என்று பல முறை சொல்லியிருக்கிறேன் அதற்கு உங்களின் வார்த்தைகள் மேலும் வலு சேர்க்கிறது.

 15. பெரியசாமி அண்ணா, நான் அதுகளை குறைத்து மதிப்பிடவில்லை. இழிவாக மதிப்பிடுகிறேன். அதுதான் சொல்லிவிட்டேன் வெறி நாய்கள் என்று. அவை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒளிக்கப்படவேண்டியவை. மற்றும்படி உங்களது அறிவுபூர்வமான தர்க்கங்களை முறையாக எதிர்கொள்ளும் அளவுக்கு அவைகள் ஒன்றும் தகுதியானது அல்ல. எனவே வெறிநாய்களை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க