PP Letter head

நாள் 18-8-2020

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு மூடியது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்து வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிரான இந்த வழக்கில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பி.ஆர்.பி.சி. தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் இணைந்து வாதிட்டனர். மேலும் திரு வைகோ, சி.பி.எம்., வணிகர் சங்கம், பேராசிரியர் பாத்திமாபாபு ஆகியோரும் இந்த வழக்கில் இணைந்து வாதிட்டனர். தமிழக அரசின் வாதங்களை தாண்டி ஸ்டெர்லைட்டின் 25 ஆண்டுகால சட்டமீறல்கள், மோசடி, கழிவுகளை அகற்றாமல் தேக்கி வைத்தது, நீர், காற்று மாசுபட்டது, பசுமை வளையம் அமைக்காமல் ஏமாற்றியது என பல்வேறு உண்மைகளை மக்கள் சார்பில் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டது.

இத்தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 15 பேர்களின் உயிர் தியாகத்திற்கு கிடைத்த மரியாதை. சுற்றுச்சூழலை நாசமாக்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளை விரட்டியடிக்க எப்படிப் போராட வேண்டும் என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த முன்னுதாரணமானது தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் கடைசி செங்கல்லை பிரித்து கடலில் வீசி எறியும் வரை சட்டப் போராட்டமும் மக்கள் பேராட்டமும் இதே ஒற்றுமை, உறுதியுடன் தொடர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கும் ஜாலியன்வாலாபாக் போன்று தூத்துக்குடியில் நினைவு தூண் அமைக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தன் சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை அனுமதிக்க முடியாது. படுகொலைக்கு காரணமான போலீசார் மற்றும் உத்திரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்கபட வேண்டும்.

படிக்க:
ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.

பாசிச பாஜ.க மற்றும் இந்துத்துவா சக்திகள், ஊடக தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் வலதுசாரி கருத்தாளர்கள் துவக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசியதுடன், தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை, தியாகத்தை கொச்சைபடுத்தினர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க காவி பாசிசஸ்டுகள் அனைத்து துரோக வேலைகளையும் செய்ய துவங்குவார்கள்.

தமிழக மக்கள் விழிப்போடு இருந்து இவர்களை முறியடிக்க வேண்டும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

1 மறுமொழி

  1. வேதாந்த நிறுவனத்தின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி என்ற போக்கில், ஏற்கனவே மரணமுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,சூற்று சூழலை மாசு படுத்தியுள்ளது, சுற்றுப்புற பகுதிவாழ் நிலத்தடி நீரை நஞ்சாக்கியுள்ளது, இவ்வளவு நாளாக உற்பத்தி ஏற்றுமதி என பல்வேறு விதங்களில் கொள்ளையடித்த பொருளாதாரம் பறிமுதல் செய்வதற்கான உத்தரவு ஏதேனும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதா??? இவை அனைத்துக்குமான உரிய நட்ட ஈடு வழங்கவேண்டிய பொறுப்பிலிருந்தும் முதலாளிகளுக்கு விலக்கு அளித்து தள்ளுபடி செய்துள்ளதா???தமிழக அரசு தொழில் வளர்ச்சி என மக்களை ஏமாற்றி முன்பு அளிக்கப்பட்ட நிலத்தை , தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புரையை கொண்டு, அரசு இயந்திரங்கள் தானே முன்வந்து ஸ்டெர்லைட் நிலங்களை கையகப்படுத்தி ஆலையை ( dismantle) பிரித்து மேய்ந்து, தாங்கள் கூறும் கடைசி செங்கலை கடையில் போடவோ/கரையில் போடவோ/கடலில் போடவோ…முன்வருமா??? உலகம் முழுவதும் கடலில் எதை போட்டாலும் எடுத்தாலும் கணக்கில் வருவதில்லை…!!! அரசியல் தலைவர்களும் சில மந்திரிகளும் மாய்மாளம் அடித்து தற்காலிக தீர்ப்புகளை வரலாற்று சிறப்புமிக்கது வரவேற்கத்தக்கது என மக்களுக்கு இவ்வரசமைப்புகளின் நம்பிக்கை வைக்குமாறு ஓட்டு பொறுக்கி அரசியல் சந்தை முகவர் பணியை செய்து வருகின்றனர்… உஷார் உஷார் உஷார்…ப்ரார் ப்ரார் ப்ரார்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க