பேச்சு, கருத்துச் சுதந்திரத்துடன் பெரும் மதிப்பை கொண்டவர்களிடையே உற்சாகமான உணர்வு காணப்படுகிறது. இது நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ‘பிரசாந்த் பூஷண் தருணம்’ என்று அழைக்கப்படுவதால் உந்தப்பட்டதாகும்.

பூஷனுக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்த முடியவில்லை என குடிமக்கள் கருதுகின்றனர்.

‘மக்களின் ஆட்சியை, மக்களுக்காக மக்களால்’ நிறுவுவதற்கான அரசியலமைப்பை ‘மக்களாகிய நாம், நமக்குக் கொடுத்தோம்’ என்பதை பெருமையுடன் நினைவு கூர்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது.

சிறிது நேரம் இடைநிறுத்தி, இந்த காவியப் போருக்கு அப்பாற்பட்ட அடிப்படைகளைப் பார்ப்போம். சிலர் இதை கோலியாத்துக்கு (பெரும் அரக்கனுக்கு) எதிரான டேவிட்டின் (தீரமிகு சிறுவனின்) போர் என்று அழைக்கிறார்கள்.

நான் மரியாதையுடன் அதில் உடன்படவில்லை. பிரஷாந்த் சட்டத் துறையில் ஒரு டேவிட் ஆவார், அவர் நீதிமன்றங்களில் பல போர்களில் தனது உயரத்தையும் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார். அவரது பெயர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். பேச்சு சுதந்திரத்திற்கான தடை மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக அதிகாரமாக மொழிபெயர்க்கப்படாது.

நீதிமன்றங்களின் திருப்தியற்ற செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூறும் குடிமக்கள் மீது, நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்க வைக்கும் என்பதை நம்மில் பலர் சரியாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

பல நாடுகளில், நீதிமன்றங்கள் விமர்சனங்களை முன்னேற்றத்துக்குரியதாக எடுத்துக்கொள்கின்றன; குற்றவியல் அவமதிப்பு அதிகாரங்களை அரிதாகவே பயன்படுத்துகின்றன. 2016-17 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து 169 வழக்குகளை விசாரித்தன். இங்கிலாந்தில், கடந்த நூற்றாண்டில் ‘நீதிமன்றத்தை அவதூறு செய்வது’ தொடர்பாக ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருந்தது.

படிக்க:
கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

பிரிவு 2 (சி) குற்றவியல் அவமதிப்பை இவ்வாறு வரையறுக்கிறது :

“(சி) குற்றவியல் அவமதிப்பு என்பது எந்தவொரு விஷயத்தையும் வெளியிடுவது (சொற்களால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது சமிக்ஞைகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால், அல்லது வேறுவிதமாக) அல்லது வேறு எந்த செயலையும் செய்வது.

(i) எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறு செய்வது அல்லது அவதூறு செய்ய முனைவது, அல்லது குறைப்பது அல்லது குறைக்க முனைவது; அல்லது

(ii) எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளின் சரியான போக்கில் தப்பெண்ணங்கள் உருவாக்குவது, அல்லது தலையிட முனைவது; அல்லது

(iii) வேறு எந்த வகையிலும் நீதியின் நிர்வாகத்தில் தலையிடுவது அல்லது தலையிட முனைவது, அல்லது தடுப்பது அல்லது தடுக்க முனைவது ”

அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2 (சி) 2018 ஆம் ஆண்டில் “நீதிமன்றத்தின் அவமதிப்பு என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் / தீர்ப்பை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்பதற்கு மட்டுமே கட்டுப்படுத்த வேண்டுமா என இந்திய அரசு, சட்ட ஆணையத்திற்கு ஒரு குறிப்பை வெளியிட்டது என்பது சுவாரஸ்யமானது. துரதிர்ஷ்டவசமாக அதன் அறிக்கை எண் 274 இல் இவ்வாறு கூறி இந்த ஆலோசனையுடன் உடன்படவில்லை:

“மேலும், அவமதிப்பு கூறுகளுக்கு எதிராக தொடர்ந்து தடுப்பு தேவைப்படுவதால்,‘உத்தரவுகளை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை / நீதிமன்றத்தின் தீர்ப்பை ’மட்டுமே உள்ளடக்குவதற்கான அவமதிப்பு வரம்பைக் குறைப்பது விரும்பத்தகாததாகத் தெரிகிறது. விதி வரம்பில் மிகவும் குறுகிவிட்டால், பாதிப்பிலும் தாக்கம் குறையும். அவமதிப்பு சட்டத்தில் இத்தகைய மாற்றம் நீதிமன்றங்கள், அவற்றின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் மீதான மரியாதை அல்லது பயத்தை குறைக்கக்கூடும்; மேலும், இது நீதிமன்றங்களை வேண்டுமென்றே மறுப்பது, அவதூறு செய்வது போன்ற நிகழ்வுகளில் விரும்பத்தகாத அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் உள்ளது.”

நிந்தனை என்பதை கடவுள் அல்லது மதத்தை அவமதிப்பதை காட்டுவதாக அனைத்து அகராதிகளும் அங்கீகரிக்கின்றன.

இப்போது மூன்று இணை அரசு ஊழியர்களை ஒரு உதாரணமாகப் பார்ப்போம், குடிமக்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் பாதுகாப்பின் கொள்கையை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் நீதிபதிகளை வைத்து இந்தக் கொள்கைகளை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மிக உயர்ந்த நியாயத்தன்மையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் குடிமக்களின் நேரடி ஒப்புதலுக்கு உட்படுவார்கள். குடிமக்களிடமிருந்து மரியாதைக்குரிய கட்டளையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடலாம், அது இல்லாமல் அவர்கள் வடிவமைக்கும் சட்டங்கள் மதிக்கப்படாது. அவை கொள்கைகளை வடிவமைக்கின்றன, இந்த கொள்கைகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நேரத்திலும் மக்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது விமர்சனங்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், அவர்களால் அவர்களின் செயல்பாடுகளை நிறைவேற்ற முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு காவலரை இப்போது சித்தரிப்போம். அவர் மீண்டும் குடிமக்களை எதிர்கொள்கிறார் – கோபமடைந்த அல்லது மோசமான கும்பல்களும் கூட – சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அழுக்குகள் மற்றும் கொடூரங்களுக்கிடையில் செயல்பட வேண்டும். குடிமக்கள் அவரை மதிக்கவில்லை என்றால் – அல்லது அவர் ஊழல் நிறைந்தவர் மற்றும் அவரே ஒரு குற்றவாளி என்று நம்பினால் – அவர் தனது சட்ட நடைமுறையாக்கல் செயல்பாட்டை பொதுமக்களுக்கு வழங்க முடியுமா?

மறுபுறம், ஒரு நீதிபதி ஒரு மூடிய மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் அமர்ந்து சட்டத்தை நிலைநிறுத்துவதாகக் கூறப்படும் நீதியை வழங்குகிறார். அவர் மிகவும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பான சூழலிலும் இருக்கிறார்; வசதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தனது செயல்பாடுகளை தனது சொந்த வேகத்தில் செய்கிறார்.

ஆனாலும்கூட, பிரபுக்களுக்கு குற்றவியல் அவமதிப்பு விதிகளின் கதகதப்பான பாதுகாப்பு தேவை என்று வாதிடப்படுகிறது.

சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இந்த மாபெரும் பிரசாந்த் பூஷண் தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இழந்தால், சாதாரண குடிமக்களின் பேச்சு சுதந்திரம் தடைசெய்யப்படும்.

சாமானியர்களுக்காகப் பேசும்போது, பிரஷாந்த் பூஷண் போன்ற ஒரு சட்ட ஜாம்பவானுக்கு மட்டுமே நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை இருக்கும் சூழ்நிலையை நாம் அறியாமல் உருவாக்கியிருப்போம். இது ஜனநாயகத்திற்கான அவரது துணிச்சலான, தைரியமான நிலைப்பாட்டின் பொருத்தமான விளைவாக இருக்காது. குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்த இந்த தருணத்தை நாம் கைப்பற்ற வேண்டும்.


கட்டுரையாளர் : சைலேஷ் காந்தி, முன்னாள் மத்திய தகவல் ஆணையர்.

மொழிபெயர்ப்பு :  கலைமதி
நன்றி: த வயர்.

3 மறுமொழிகள்

  1. எத்தனையோ கடைநிலை நீதிமன்றங்களில் வழங்கிய தீர்ப்புக்கள் உயர்நிலை நீதிமன்றங்களில் பரிசீலிக்கப்பட்டு மாற்றாக தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வழக்கிற்க்கு ஒரே நீதிமன்றம், ஒரே தீர்ப்பு என இருந்தால் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குடிமக்கள் ஏற்றுக்கொண்டு மேல்முறையீட்டுக்கு போகமாட்டார்கள்.அவ்வாறு மேல்முறையீட்டுக்கு மக்கள் செல்வதே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தின் நடவடிக்கைககள் சரியாக இல்லாமல் இருப்பதாக கருதித்தான் அவ்வாறு மேல்முறையீட்டுக்கு செல்வதின் அர்த்தமாகும்.இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்புதான். அப்படியென்றால் மேல்முறையீட்டுக்கு போகும் குடிமக்களையும் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டியதுதானே.ஏன் தண்டனை வழங்காமல் விட்டது?
    தவறான ஒரு தீர்ப்பு உயர்நிலை நீதிமன்றங்களில் சரியான தீர்ப்பாக வழங்கும் போது, தவறான தீர்ப்பை வழங்கிய கீழ்நிலை நீதிமன்றம், மக்களின் நேரத்தையும்,பணத்தையும்,விரையம் செய்வதற்க்கும் மனஉளச்சலுக்கும் காரணமாக அமைகிறது.
    இது மட்டும் நீதிமன்றம் மக்களை அவதிப்பதற்க்கு சாட்சியாக அமையவில்லையா?
    மக்கள் தவறுசெய்தால் நீதிமன்ற அவதிப்பு,
    நீதிமன்றம் தவறுசெய்தால்
    மேல்முறையீடா?

  2. நீதிமன்றம் ஒரு விளையாட்டு மைதானம், இதில் யார் வேண்டுமானாலும் கோதாவில் இறங்கலாம்…
    இதோ, மக்களுக்காக சில முக்கிய சட்டங்கள்:-
    1.நம் இந்திய நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல: அரசியல் சாசனம் கோட்பாடு-51அ(ஓ) வின் கீழ் செயல்பட வேண்டும்.
    2.இந்திய அரசியல் சாசனம் 19(1)-ன்படி சுதந்திரமாய் சொயல்படலாம்.
    3.Cr.P.C.2(8) ன் கீழ் எவர் ஒருவரையும் புலன் விசாரணை செய்ய அதிகாரம் உண்டு.
    4.Cr.P.C. 43-ன்கீழ் தனி நபர்-அதாவது எவரும் எவரையும் கைது செய்யலாம்.
    5.இந்திய சாட்சியச் சட்டம்.101,105 -ன் கீழ் ஒரு புகாரை அளிப்பவர்க்கு அக்குற்றத்தை நிரூபிக்கும் சுமை உள்ளது.
    6.இ.அ.சா.19-ன்படி நீதிமன்றத்தில் தானே வாதாடிக் கொள்ளலாம்.தனிநபரும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று புலன் விசாரணை நடத்தலாம்.
    7.Cr.P.C.161(3)-ன்படி நண்பறுக்காக சிபாரிசு செய்யலாம்.
    8.Cr.P.C. 36-ன்படி உயர்நிலை அதிகாரிக்கும்,crpc 149-ன்படி கீழ் நிலை அதிகாரிக்கும் ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    9.இ.த.ச.211-ன்படி ஒரு குற்றத்தை நிருபபிக்க முடியாமல் போனால் தண்டனை உண்டு.
    10.இ.அ.சா.19(1)(எ)-ன்படி எந்த தொழிலையும் செய்து கொள்வதற்கு உரிமை உண்டு.
    11.இ.த.ச.79-ன்படி தம் கடமையை ஆற்றுவதற்கான ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி அதைப் புரிந்திருந்தால் அது குற்றமாகாது… இதன் தொடர்ச்சி மறுப்பதிவில் வெளிவரும்…
    குறிப்பு:-
    CrPC ; Criminal procedure code-குற்ற விசாரணை முறைச் சட்டம்.
    இ.த.ச: இந்திய தன்டணை சட்டம்.IPC: Indian penal code.
    இ.சா.ச: இந்திய சாட்சியச் சட்டம்.IEC; Indian evidence act.
    இ.அ.சா: இந்திய அரசியல் சாசனம்-Constitution of India.

  3. தொடர்ச்சி…
    12.இ.த.ச.109-ன்படி குற்ற உடந்தையாக இருந்தால் தண்டனை உண்டு.
    13.இ.த.ச.166-ன் கீழ் கடமையில் தவறியதாகக் கருதினால் கீழ் நிலை/மேல் நிலை போன்ற அதிகாரிகளுக்கும் தண்டனை உண்டு.
    14. Cr.P.C. 311- ன் கீழ் எவர் ஒருவரும் ஒரு முக்கிய சாட்சியாக ஆஜராகலாம்.
    15. Cr.P.C. 51 – ன்படி ஒருவரைக் கைது செய்வதற்கு முன் அவரிடம் கைப்பற்றிய பொருள்களுக்கு ரசீது தர வேண்டும்.
    16. இ.த.ச. 167 – ன்படி ஒரு ஆவணத்தை பொய்யாகப் பதிவு செய்திருந்தால் அது குற்றம்.இது போலீசுக்கும் வக்கீலுக்கும பொருந்தும்.
    17. இ.த.ச. 78- ன்கீழ் நாட்டின் முன்னேற்றம் கருதி அதிகாரத்தை மீறிய உத்திரவினைக்கூட பிறப்பிக்க இயலும்.
    18. இ.த.ச. 19- வந்து பிரிவின் படி நீங்களும் நீதிபதி ஆகலாம்.
    19. Cr.P.C. 182-ன்கீழ் கடிதம் மூலம் ஏமாற்றத்தை உண்டாக்கிய எந்தக் குற்றமும் கடிதம் எவ்விடத்தில் பெறப்பட்டதோ அந்த அதிகார வரம்பிற்குள்ள நீதிமன்றம் விசாரிக்கும்.
    20. இ.த.ச. 193-ன்கீழ் பொய்ச் சாட்சி சொன்னால் தண்டனை வழங்கலாம்.
    21. இ.த.ச. 192-ன்படி நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துவிட்டு முன்னுக்கு பின் முரணாக எதுவும் கூறக்கூடாது.அப்படி கூறினால் அது குற்றமாகும்.ஒரு பொய்ச் சாட்சியை வக்கீல் உருவாக்கினாலும் அது குற்றமாகும்.
    22. Cr.P.C. 50(2)-ன்கீழ் எவர் ஒருவரையும் சொந்த ஜாமினில் எடுக்கலாம்.
    23. இ.த.ச. 52-வது பிரிவின் படி எத்தகைய செயலிலும் நல்லெண்ணத்துடன் ஈடுபடலாம்.
    24. இ.த.ச. 19 மற்றும் 78 வந்து பிரிவின் படி எவரும் நீதிபதி ஆகலாம்.
    25. Cr.P.C. 203-ன்படி வழக்கை முறைப்படி விசாரிக்காமல் தள்ளுபடி செய்யக்கூடாது.
    26. Cr.P.C. 50(2) மற்றும் 169-ன் கீழும் சொந்த ஜாமினில் பெயில் எடுக்கலாம்.
    27. Cr.P.C. 39- ன்படி சமுதாயத்தில் ஒரு குற்றம் நடைபெற்றால் பொது மக்கள் தாமே முன்வந்து தகவல் தரலாம்.
    28. Cr.P.C.197-ன்படி ஒரு அரசு ஊழியரைக் கைது செய்ய அரசின் அனுமதி தேவை.
    29.இ.த.ச.161-ன்படி லஞ்சம் வாங்குவதும்,இ.த.ச.162-ன்படி லஞ்சம் கொடுப்பதும் குற்றமே.
    30.இ.அ.சா.361(4)-ன்கீழ் ஜனாதிபதியைக்கூட கேள்வி கேட்கலாம்.
    31. I.P.C. 219-ன்படி ஒரு நீதிபதி உண்மைக்கு புறம்பாக ஏதாவது செய்தால் அவரைச் சிறை வைக்கலாம்.
    32. I.P.C. 406-ன்கீழ் நம்பிக்கைத் துரோகம், மோசடி என்ற குற்றத்தை யார் செய்தாலும் அந்நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு.
    33. Cr P.C. 50(1)-ன்படி காவல்துறை கைது செய்தால் அதன் விபரம் நமக்கு தெரிவிக்க வேண்டும், எதுவும் சொல்லவில்லை என்றால் நாம் கோர்ட்டில் கேள்வி கேட்கலாம்.பிறகு Cr.P.C.50(2)-ல் சொந்த ஜாமின் கோரலாம்.
    34.I.P.C. 197-ன்படி அதிகாரபூர்வமாக செயல்படுத்தக் கூடிய பத்திரத்தில் பொய்யான தகவலைப் பதிவு செய்வது குற்றமாகும்.இதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு.
    35.I.P.C.464-ன்கீழ் பொய்யான பத்திரத்தின் மூலம் பிறர் சொத்தை அபகரித்தால் 7 வருடங்கள் சிறை தண்டனை உண்டு.
    36.I.P.C.193,196,197,200- ன்படி பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அதை அறிந்திருந்தும்,உண்மைபோல திரித்து நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால்-3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
    37.I.P.C.468- ன்படி ஏமாற்றும் பொருட்டு போலியான பத்திரம் தயார் செய்தால்,அதை எழுதியவருக்கும்,விற்றவர்க்கும் வாங்குபவரும்கும் சாட்சிகளுக்கும் , பதிவு செய்த சார்பதிவாளர்க்கும் 7 வருடங்கள் சிறை தண்டனை உண்டு.
    38. I.P.C.484-ன்படி சொத்தின் அடையாள குறியை மாற்றுதல், அழித்தல் குற்றமாகும், இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
    39.IP.C.500- ன்படி ஒருவரை அவதூறாக எது செய்தாலும் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.
    40.I.C.A. 19(1) மற்றும் Cr.P.C. 302(2),303- ன்கீழ் அவரவர் வழக்கை அவரவரே நடத்தலாம்.
    41. I.C.A. 19(1) மற்றும் Cr.P.C. 303- ன்கீழும் சட்டம் படித்த எவரும் நீதிமன்றத்தில் வாதாடலாம்.
    42. I.P.C. 403- ன்படி அடுத்தவரின் சொத்தை அபகரித்தல் குற்றமாகும்-இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
    43.Cr.P.C.160- ன்படி காவல்துறை விசாரணைக்கு சம்மன் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும்.
    44.Cr.P.C.160(2)- ன்கீழ் காவல்துறை விசாரணைக்கு சென்றால் சம்பளமும், படியும் உண்டு.
    45.Cr.P.C.154(2)- ன்படி புகார்தாரருக்கு F.I.R. காபி இலவசமாக கொடுக்கபட வேண்டும்.
    46.I.P.C. 420- ன்கீழ் பிறரை வஞ்சித்து பணம் கையாடல் செய்வது நம்பிக்கை துரோகம், இதற்கு ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை உண்டு.
    47.Cr.P.C 162- ன்படி காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டால் அது செல்லாது.
    48.இ.சா.ச.70-ன்கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பொழுது சங்கதிகள் யாவும் உண்மை என்று கையொப்பம் இட வேண்டும்.
    49.I.P..C.166- ன்படி ஒரு அரசு ஊழியர் தம் கடமையிலிருந்து தவறினால் ஒர் ஆண்டு சிறை உண்டு.
    50.Cr.P.C.2(ஈ)- ன்கீழ் ஒரு முறையீட்டை வாயினால் சொன்னாலே போதும், பதிவு செய்து தீர்வு காணலாம்.
    51.Cr.P..C.155(1)-ன்கீழ் காவல்துறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி Cr.P.C.155(2)தும் உண்டு.இதன்படி நம் காவலர்களா என்பது கேள்விக்குறியே…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க