க்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில்  144 தடை உத்தரவு இருக்கிறது. இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 19/09/2020 அன்று விருத்தாசலம், பாலக்கரையில் தோழர்.முருகானந்தம் ( விருதை மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன உரை :

தோழர். கோகுல கிரிஸ்டீபன், (மாவட்ட செயலாளர் -இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி) ஆற்றிய கண்டன உரையில், மோடி அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை பிஜேபியின் ஆதரவு சட்டங்களை நடைமுறைப்படுத்த 144 தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுமைக்கும் அனைத்து  உத்தரவுகளும் தளர்வு  செய்யப்பட்டாலும் 144 இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் மக்களுடைய உரிமையை மீட்கக் கூடிய வகையில் இல்லாத சூழலை நீடிக்கிறது என்றார்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ ஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தோழர். ராஜசேகர், (வட்ட செயலாளர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) பேசுகையில், பாசிச மோடி அரசு மக்கள் மீது துளியளவும் அக்கறை இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பாசிச வெறியோடு உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தை கட்டமைக்கிறது. இதனை அனைவரும் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்றார்.

தோழர்.மணியரசன், (மாவட்ட செயலாளர், புரட்சிகர மாணவர்-  இளைஞர் முன்னணி) பேசுகையில், நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே பொது முடக்கம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிவித்து மக்களை பெரும் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என தனியார் மருத்துவமனைகள் கூட அரசுடமையாக்கி மருத்துவ எமர்ஜென்சியை அறிவித்தனர்.

ஆனால் இந்தியாவிலோ அதற்குத் தலைகீழான நிலை எந்த தனியார் மருத்துவமனையும் அரசுடமையாக்க படவில்லை ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக இந்த 144 தடை உத்தரவை பயன்படுத்திக்கொண்டு மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் நலச் சட்டம், கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் தள்ளுபடி என்று இந்திய மக்களுக்கு எதிரான பல்வேறு நாசகார திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து நிற்க பாசிசத்தை முறியடிக்க முற்போக்கு, ஜனநாயக சக்திகள் புரட்சிகர பாதையிலே ஒன்றுபட வேண்டும் என்று பேசினார்.

தோழர்.மணிவாசகம் (ஆய்வு மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்) பேசுகையில், கொரோனா பெரும் நோய்த் தொற்றினால் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய நிறுவனங்களில் உள்ள அரசு அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். சாதாரண உழைக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளார். இதில் இருந்து மக்களை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பாசிச மோடி அரசு முதலாளிகளை பாதுகாக்கக் கூடிய வகையில் பல்வேறு நாசகார சட்டங்களை கொண்டு வருகிறது இதனை நாம் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள்,அனைத்து கட்சியினர் ஒன்று பட்டு போராடவேண்டும் என்று பேசினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்.பாலாஜி (மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர், கோ.பூவனூர்), தோழர். அருள் (பகுதி ஒருங்கிணைப்பாளர், கம்மாபுரம்), தோழர். தனசேகர் (பகுதி ஒருங்கிணைப்பாளர், விஜயமாநகரம்), தோழர்.ஆடியபாதம், (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஊமங்கலம்), தோழர்.அருள்முருகன் (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஆலிச்சிகுடி) மற்றும் தோழர்கள் மணிகண்டன், பூங்குழலி, முருகன், அர்ஜுன், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம் – விருத்தாச்சலம்

தொடர்புக்கு:
97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க