கொரோனா சமூக வாழ்வின் அனைத்து அவலங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பள்ளி/உயர்கல்வி சார்ந்த அறிவிப்புகள் மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதாகவும் தனியார் நிறுவனங்களின் நலன்களை முன்னிலைப்டுத்தியும் வந்துள்ளது. கொரானா பரவலினால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை மாநில அரசுகள் ரத்துசெய்த போதும் ‘உயர்கல்வி சார்ந்த முடிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ எனக்கூறி தேர்வை இணையவழியில் நடத்தியதோடு மட்டுமில்லாமல் இணையவழிக் கல்வியை கட்டாயமாக்கியது மோடி அரசு.
தேசியக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து புதிய அமைப்புகளும் (Regulating body) கல்வியில் மாநில உரிமைகளை பரிப்பவையாகவும் மத்தியில் அதிகாரத்தை குவிப்பவையாகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் / கொடைவள்ளல்கள்/தன்னார்வு அமைப்புகளை கல்வியில் அனுமதிப்பதாகவுமே உள்ளது. தேசிய மருத்துவ ஆணையமானது (National Medical Commission) நீட் தேர்வை கட்டாயமாக்கியதோடு கல்விக்கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் சென்றுள்ளது.
இதனை அம்பலப்படுத்தி பேராசிரியர் கருணானந்தன் உரையாற்றுகிறார் !
பாருங்கள் ! பகிருங்கள் !