சங்கிகள் அட்டகாசம் தாங்கலயே வேலவா | மக்கள் அதிகாரம் பாடல் !

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்து பாஜக துவங்கியிருக்கும் வேல் யாத்திரையை அம்பலப்படுத்தும் பாடல் !

வேல் யாத்திரை எனும் பெயரில் ஒரு கலவர யாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு எப்படியாவது இந்துமதவெறியைத் தூண்டி தமிழகத்தை மற்றுமொரு குஜராத்தாக மாற்றும் திட்டத்தோடு வலம் வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

ஒருபுறத்தில் உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டதிருத்தங்கள் மூலம் ரத்து செய்து கொண்டிருக்கும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல், மற்றொரு புறத்தில் கலவரம், ஆட்கடத்தல்,  பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்துத் தான் இந்த வேல் யாத்திரையை தொடங்கியிருக்கிறது தமிழக பாஜக.

இதனை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் தோழர்கள் இயற்றிப் பாடியிருக்கும் இந்தப் பாடல் அம்பலப்படுத்துகிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !

2 மறுமொழிகள்

  1. இந்த பாடலுக்கான ஆட்டத்தை மக்கள் வாழும் பகுதிகளில் படமாக்கி இருக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க