போராளிகளுக்கு சிறை ! அர்னாபுக்கு பிணை ! ஏன் இந்த பாகுபாடு? || காணொலி

அர்னாபுக்கு இருக்கும் தனி மனித உரிமை, 80 வயது புரட்சிகர எழுத்தாளரான வரவர ராவுக்குக் கிடையாதா ? 90% உடல் செயல்பாடுகளை இழந்த பேராசிரியர் சாய்பாபாவுக்குக் கிடையாதா ? || காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காஷ்மீர் மக்களின் போராட்டம்,  தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள், பீமா கொரேகான் போராட்டம், டெல்லி வன்முறை ஆகியவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் புனையப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட போராளிகளின் பிணை மனுக்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுகின்றன.

ஹதராஸ் பாலியல் வன்கொலை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பான் என்ற பத்திரிகையாளரைக் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். அவருடைய பிணை மனு மறுக்கப்படுகிறது.

மேற்கண்ட வழக்குகளில் பெரும்பாலானவை புனையப்பட்டவை, ஆதாரங்களையோ, குற்றத்திற்கான முகாந்திரங்களையோ போலீசு இன்னும் சமர்ப்பிக்காமல் இருக்கும் நிலையிலும் இவர்களின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனது ஊடகத்தில் சங்கிகளின் குரலை ஒளிபரப்புவதையே வாடிக்கையாகக் கொண்ட அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்ட சமயத்தில், அவரது பிணை மனு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்த மராட்டிய அரசைக் கடிந்து கொண்டு தனி மனித உரிமை பற்றி பாடம் எடுத்துள்ளது.

அர்னாபுக்கு இருக்கும் தனி மனித உரிமை, 80 வயது கவிஞரும், புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவுக்குக் கிடையாதா ? 90% உடல் செயல்பாடுகளை இழந்த பேராசிரியர் சாய்பாபாவுக்குக் கிடையாதா ?

நீதிமன்றத்திற்கு ஏன் இந்தப் பாகுபாடு ?  விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க