வம்பர் 26, இந்தியா முழுவதும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்டு பல்வேறு பகுதியளவிலான தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தன.

மத்திய மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டத் திருத்தங்களை வாபஸ்பெற வலியுறுத்தும் வகையில் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் இரயில் மறியல் போராட்டங்களும் நேற்று நடைபெற்றன.

தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் விவசாயிகளும் நவம்பர் 26, 27 தேதிகளில் டெல்லியை நோக்கிப் பேரணி மற்றும் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்திருந்தனர். டெல்லி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளையும் பல இடங்களில் தடுப்பரண்களைப் போட்டு தடுத்து நிறுத்த முயற்சித்தது மோடி அரசு. அதனையும் மீறி தங்களது பேரணியை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

படிக்க :
♦ பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு
♦ பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்

மத்திய மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் என்பது ஒரு துவக்கம் தான் என்று தொழிற்சங்கத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் செயல்பாடுகளை மோடி அரசு கைவிடாவிட்டால், இப்போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தையும் பேரணியையும் தடுக்க, கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீரங்கி ஆகியவற்றைக் கொண்டு கடுமையான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி போலீசு. அதனையும் மீறி தடுப்பரண்களைத் தகர்த்தெறிந்து விவசாயிகளும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.

நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !

சுகாதார ஊழியர்கள் சங்கம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகப் பணியாளர்கள் சங்கத்துடன் இணைந்து மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேற்கு வங்க மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 31-இல் மறியல் போராட்டத்தில் இறங்கிய தொழிற்சங்கத்தினர்
கொல்கத்தாவில் நடத்தப்பட்ட இரயில் மறியல்
அஸ்ஸாமில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி மூடப்பட்டன.
விவசாயிகளின் டெல்லி நோக்கிய பேரணியை அரியானாவில் தடுக்கும் போலீசு
அரியானா- டெல்லி எல்லையில், டெல்லி போலீசு ஏற்படுத்தி வைத்திருக்கும் தடுப்பரண்
உத்தரப் பிரதேசத்தில் மேதா பட்கர் விவசாயிகளின் டெல்லி நோக்கிய பேரணியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்
உத்தரப் பிரதேச விவசாயிகளின் டெல்லி நோக்கிய பயணம்
டெல்லியின் துணைநகரான நொய்டாவில் தொழிலாளர்கள் போராட்டம்
தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் பேரணி மற்றும் போராட்டம்
ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்
ஜம்மு காஷ்மீரில் அங்கன்வாடி தொழிலாளர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது

 


படங்கள் : நன்றி – People’s Dispatch
தமிழாக்கம் : கர்ணன்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க