டெல்லி- காசிபூர் எல்லையில் போராடும் விவசாயிகளோடு பீம் சேனா தலைவர் சந்திர சேகர் ஆசாத் அவர்கள் நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு  செவ்வாய் கிழமை அன்று  இணைந்தார். உடனடியாக புதிய வேளாண் சட்டம் திரும்ப பெறப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கிய ஆசாத், “விவசாயிகள் இந்த கடும் குளிரில் தங்களின் உரிமைக்காக போராடிவருகின்றனர். இந்த மூன்று சட்டங்களும் உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’’ என்றார்.

“நாங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு  எங்களின் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போரில் நாங்கள் அவர்களோடு உள்ளோம்’’ என்றார்.

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

பஞ்சாப், அரியானா விவசாயிகள் சிங்கு, திக்ரி எல்லையில் பேரணியை தொடர்ந்து வருகின்ற அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உபி விவசாயிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (29-11-2020) டெல்லி-  காசிபூர் எல்லையில் உள்ள காசிபூரில் தலைநகர் டெல்லியில் நுழையும்  நோக்கோடு  கூடினர். மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து டெல்லி எல்லைகளில்  விவசாயிகள் போராடி வந்ததால், 01.12.2020 அன்று காலை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது.

கடந்த திங்கள் கிழமை அன்று,  வேளாண் அமைச்சர் நரேந்த்ர தாமர் கோவிட் 19, மற்றும் குளிர் ஆகியவற்றை குறிப்பிட்டு  போராடும் விவசாயிகளின் சங்க தலைவர்களை, திட்டமிட்டிருந்த டிசம்பர் 3-ம் தேதிக்கு பதிலாக  முன்னதாகவே செவ்வாய்க்கிழமை அன்று  பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

“எமது கூட்டத்தில், இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முன்வந்திருப்பதை ஏற்றுக்கொள்வது என்று நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகள்,  அமைச்சர்களுடனான அந்த கூட்டத்தில் கலந்துகொள்வர்’’ என்று விவசாய தலைவர் பால்சீத் சிங்க் மஹால் கூறினார்.

செவ்வாய் அன்று,  ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தை தொடர்ந்த நிலையிலேயே உள்ளனர். அச்சட்டங்கள் குறைந்த பட்ச ஆதாரவிலை என்ற அமைப்பு முறையை  ஒழித்துக்கட்டிவிடும் என்றும் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குமென்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

000

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திர சேகர் ஆசாத் பேசுகையில், அரசாங்கம் சர்வாதிகாரியாக மாறினால், மக்கள் வீதிகளுக்கு வர வேண்டும். அரசாங்கம் இந்த விவசாயிகளின் இயக்கத்தை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் இங்கு விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக வந்திருக்கிறோம். நாங்கள் அவர்களுடன் இறுதி வரை இருப்போம்” என்றார்.


தமிழாக்கம் : முத்துகுமார்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க