க்ராவில் வசிக்கும் மிகத் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அமித் ஜெய்ஸ்வால் ஜெய்ன். மோடியால் ட்விட்டரில் பின்தொடரும் 2,350 பேரில் ஜெய்ஸ்வாலும் ஒருவர். மோடி, யோகியின் செயல்பாடுகள் குறித்து யாரேனும் குற்றம் கூறினால் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கும் ஒரு குண்டர் படையாக செயல்பட்டு வந்தவர். அமித்ஜெய்ஸ் தன்னை மோடி பின்தொடர்கிறார் என பெருமையோடு ட்விட்டர் பயோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இன்று அவரது குடும்பம் தனது வாழ்நாளின் இறுதிக்கணம் வரை மோடியை மன்னிக்க மாட்டோம் என்று ஜெய்ஸ்வால் காரின் பின்புறத்தில் வெகு மரியாதையுடன் ஒட்டிய மோடியின் போஸ்டரை ஆத்திரத்துடன் கிழித்தெறிந்துவிட்டது.

படிக்க :
♦ மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

.பி.யின் ஆக்ராவில் விளம்பர பலகைகள், பேனர்களை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் அமித் ஜெய்ஸ்வால் சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகாக்களில் தன்னை இணைத்துக் கொண்டு ஆர்வமாக பங்கெடுத்து வந்தவர். இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக சட்டப்பூர்வமாக அறிவிக்கும் இந்துமத பாசிசத்தின் சின்னமான அயோத்தி கோயில் கட்டுமானத்தை நகரமெங்கும் ராம் ஜன்மபூமி என்று எல்..டி விளக்கு பலகைகளை வைத்துக் கொண்டாடியவர். அத்தைகைய தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர்தான் அதன் சொந்த அமைப்பாலேயே இக்கட்டான தருணத்தில் சிறிதும் இரக்கமின்றி கைவிடப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ராவில் எங்கும் படுக்கை வசதி இல்லாததால் மதுராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமித்தும் அவரது தாயாரும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவசரமாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட கையறு நிலையில் எப்படியும் உதவி கிடைக்கும் என்று நம்பி மோடியையும், யோகி ஆதித்யாநாத்தையும் அமித்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து Tag செய்து உதவி கோரியுள்ளார் அவரது சகோதரி சோனு அலாக்.

ஆனால், அவர்களின் பெருமதிப்பிற்குரிய மோடியிடமிருந்தோ, யோகியிடமிருந்தோ எந்தவிதமான உதவி அல்ல, ஒரு மறுபதில் கூட கிடைக்கவில்லை. எப்படியோ அலைந்துதிரிந்து மருந்து வாங்கி வந்த நிலையில் அமித் ஏப்ரல் 29 அன்று இறந்து போனார். அவர் இறந்த பத்து நாட்களில் அவர்களது தாயாரும் உதவிகளின்றி இறந்து போயுள்ளார்.

அமித் ஜெய்ஸ்வால் ஆர்.எஸ்.எஸ்ன் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ல் பணிபுரியும் விஷயத்தில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்று ஆக்ராவின் விஜய் நகர் ரோஸ்கர் பாரதியின் ஆர்.எஸ்.எஸ் பிரிவு தலைவராக இருக்கும் அமித் குப்தா என்பவர் தெரிவிக்கிறார். “அவ்வளவு தீவிரமான தொண்டரின் உயிர் காக்க அக்குடும்பத்தின் மன்றாடலுக்கு மோடி தனது மௌனத்தின் மூலம் அவர்களின் நம்பிக்கையை சவக்குழிக்குள் தள்ளிவிட்டார்.

இதே போல் ஏப்ரல் மாதத்தில் உத்திரப் பிரதேச பா..வின் லக்னோ மஹாநகர் பிரிவின் முன்னால் பொறுப்பாளரின் மகன் சந்தோஷ்குமாரும் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15-ம் தேதி உ.பியின் கொரோனா உதவி மையத்தை அழைத்தபோது அவரை செத்து போ என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் யோகியோ மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்க உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். .பி.யின் சீதாப்பூர் பா..க சட்டமன்ற உறுப்பினரோ கொரோனா குறித்து ஊடங்கங்களிடம் அதிகம் பேசினால் என் மீது தேசத்துரோக வழக்கு பாயலாம் என்று அச்சம் தெரிவிக்கிறார். சொந்த கட்சியினரே மோடி, யோகியின் நடவடிக்கைகள் குறித்து மனம் வெதும்பி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாடே மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை, படுக்கைகள் இல்லை, உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை, எரிக்க சுடுகாடு இல்லை என்ற அவலக் கூக்குரல்களால் நிறைந்திருக்கிறது. மோடியின் காதுகளோ நாட்டு மக்களின் அவலக் குரல்களில் துயில் கொள்கிறது. புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லையென்று கங்கை நதியெங்கும் தனது சொந்தங்களின் உடல்களை நாய்களும், பிணம் தின்னும் கழுகுகளுக்கும் வீசிச் செல்லும் அவலத்தில் முழ்கியிருக்கிறது இந்த தேசம்.

இறந்த உடல்களால் நிரம்பி வழியும் கங்கை கரைக்கு செல்வதற்கு அஞ்சி உத்திரப் பிரதேச கரையோர மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘இந்துக்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை’ இன்று அவர்களுக்கு ஒரு சாபமாகவே தோன்றுகிறது. .பி.யின் 1140 கி.மீ செல்லும் கங்கை நதிக்கரையில் 2000 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உன்னாவ் நகரையொட்டிய நதிக்கரையில் மட்டும் 900 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நூறாண்டுகள் கழித்து கங்கை கரையை தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், இவற்றை சரி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இத்தகைய பேரவலத்தை மூடி மறைப்பதில் மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. .பி.யின் உள்ளாட்சித் தேர்தல்களில் பணியாற்றி 1621 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக அதன் ஆசிரியர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஆனால், யோகி அரசோ வெறும் 3 பேர் மட்டுமே இறந்ததாக அறிக்கை கொடுத்துள்ளது. குஜராத் அரசு மார்ச் முதல் மே 10 வரையிலான இறப்புக்கணக்கு 4218 மட்டுமே என்று கூறுகிறது. ஆனால், குஜராத்தின் திவ்ய பாஸ்கர் நாளிதழ் மார்ச் முதல் மே 10 வரை 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதையும், கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ஒப்பிடுகையில் 65,085 இறப்புகள் அதிகமாக உள்ளது என்று பாஜக வின் புள்ளி விவர மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.

சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் மோடியோ இத்தகைய பெருந்தொற்று பேரிடரையே தனது கார்ப்பரேட்டுகளின் கால்களை நக்கி சேவை செய்யும் சிறந்த தருணமாக மாற்றிக்கொண்டுள்ளது. அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை எல்லாம் முடக்கி, கார்ப்பரேட்டு மருந்து கம்பெனிகளும், தனியார் மருத்துவமனைகளும் தங்கு தடையின்றி கொள்ளை லாபத்தை ஈட்ட வழி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு தொடர்பாக முடிவெடுப்பது உலகளவில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

படிக்க :
♦ அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
♦ மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்

எந்த வளர்ச்சியின் பிம்பமாக மோடி முன்னிறுத்தப்பட்டரோ அந்த குஜராத் மக்களின் அன்றாடம் செத்துப்பிழைக்கும் வாழ்க்கையையே இன்றைக்கு முழு நாட்டின் நிலைமையுமாக மாற்றியுள்ளது ஆர்.எஸ்.எஸ் – பாஜக.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பலியாக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், எந்த குண்டர்படைகள் சக உழைக்கும் மக்களை எதிரிகளாக பாவித்து சாதியையும், மதத்தையும் வைத்து கொன்று குவித்து பார்ப்பனிய சித்தாந்தத்தின் இந்து ராஷ்டிரம் எனும் பெரும் சவக்குழியை தோண்டியதோ, அந்த குண்டர் படைகளின் அடியாட்கள் இன்று தான் தோண்டிய அதே சவக்குழியில் சத்தமில்லாமல் புதைகிறார்கள். ஆனால், அதன் தலைமையோ எரிகின்ற சிதைகளின் முடை நாற்றத்தை முகர்ந்து ரசிக்கின்றது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பாஜக எத்தகைய கொடிய பாசிச மனிதகுல விரோதி என்பதை அறியாதவர்கள் உணர வேண்டியுள்ளது. அதை ஜனநாயகக் கருணையின்றி வேரோடு அழித்தொழிக்காமல் நமது துயரங்களுக்கு முடிவுகள் இல்லை.


பாலன்
செய்தி ஆதாரம் :
https://theprint.in/india/rss-worker-modi-followed-on-twitter-dies-of-covid-pm-didnt-help-despite-plea-family-cries/656948/
https://www.aransei.com/news/up-mla-afraid-of-sedition-charge-by-yogi-govt/
https://www.thehindu.com/news/national/only-three-teachers-on-polling-duty-died-of-covid-19-says-up-govt/article34593776.ece
https://www.vikatan.com/news/general-news/ganga-river-in-uttar-pradesh-and-the-corona-virus-situation

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க