ணிப்பூரைச் சேர்ந்த கிஷோர்சந்திரா வாங்கேம் மாநிலத்தை ஆளும் பா..க அரசின் இந்துத்துவ திணிப்பை கடுமையாக எதிர்த்து வரும் பத்திரிகையாளர். கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் மோடியையும் மாநில முதலமைச்சரையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர். நீண்ட போராட்டத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அவர், இம்முறை சாணியும் கோமியமும் கோவிட் தொற்றைக் குணப்படுத்தாது என பதிவிட்டதற்காக மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாய்கோம் திகேந்திர சிங் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த மரணம் குறித்து பத்திரிகையாளர் வாங்கேம் முகநூலில் பதிவிட்டதாக அவர் கைது செய்யப்பட்டார். பின், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

படிக்க :
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

மணிப்பூர் மாநில பா..க துணை தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வாங்கேம், அரசியல் செயல்பாட்டாளர் எரண்ட்ரோ லெய்சோம்பம் ஆகிய இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அவர்களுடைய வீடுகளிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வாங்கேம் தனது சமூக ஊடக பதிவில், ‘மாட்டுச்சாணமும், கோமியமும் வேலை செய்யவில்லை. ஆதாரம் இல்லா விவாதங்கள். நாளை நான் மீன் உண்ணப் போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அரசியல் செயல்பாட்டாளர் தன்னுடைய பதிவில், பசுவின் கழிவுகள் கோவிட் தொற்றை குணப்படுத்தாது என மறுத்து எழுதியுள்ளார்.

மாநில தலைநகர் இம்பாலில் உள்ள நீதிமன்றம், திங்களன்று பத்திரிகையாளர் வாங்கேம், 1980-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (2) இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், அவர் எப்போது பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் தடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம் சங்கி கூட்டம் ஒன்று கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க பசும் சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இது செய்தியாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட நிலையில், அதை தனது பதிவுடன் பகிர்ந்திருந்தார் பத்திரிகையாளர்.

அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா..வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.

மோடி தலைமையிலான பா..க ஆட்சி அமைந்ததில் இருந்து இந்தியாவில், தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது தொடர் கதையாகிவிட்டது. செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் அடக்கி ஒடுக்குவதை முக்கியமான செயல்பாடாகவே வைத்துள்ளது பா..க அரசு. கடந்த 2020-ஆம் ஆண்டு ஊடக சுதந்திரத்துக்கான உலக தர வரிசையில் 142 இடத்திலிருந்து 180 இடத்தைப் பிடித்து இழிபுகழைத் தேடிக்கொண்டது பாஜக அரசு. கோவிட் பெருந்தொற்று காலத்திலும் தொடரும் இந்த அடக்குமுறைகளால் ஊடக சுதந்திரமும் தனிமனித சுதந்திரமும் மேலும் கீழ் நிலைக்குச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.


கலைமதி
நன்றி: Sabrang India

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க