லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அழைக்கப்படும் இந்தியாவில் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டு  46 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிகழ்வையொட்டி கடந்த ஜீன் 27-ம் தேதியன்று கனடாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இந்திய அரசாங்கத்தால் சமூக செயல்பாட்டாளர்கள்  சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பினர்.

Radical Desi என்னும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம் சர்ரேயில் உள்ள இந்திய விசா மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்டதற்காகவும், விளிம்புநிலை மக்களுக்காக போராடியதாலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமூக செயல்பாட்டாளர்களின் படங்களுடன் கூடிய தட்டிகளை ஏந்திக் கொண்டு போராடினர்.

படிக்க :
♦ மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
♦ தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !

அப்படி அரசால் வேட்டையாடப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர்களில் ஒருவர்  டெல்லி பல்கலைகழக பேராசிரியர்  ஜி.என். சாய்பாபா. அவர் இடுப்புக்கு கீழே 90 சதவீதம் செயல்பாடு இழந்துவிட்ட ஒரு மாற்றுத்திறனாளி. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சாய்பாபா-வின் உடல்நிலை சிறையில் மேலும் மோசமாகி வருகிறது. மேலும், பேராசிரியரும் எழுத்தாளருமான ஆனந்த் தெல்டும்டே, புரட்சிகர கவிஞர் வரவர ராவ், மனித உரிமைகள் செயல்பாட்டளரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் ஆகியோரும் இதில் அடங்குவர்.

வலதுசாரி இந்துத்துவ ஆட்சியில், மதச் சிறுபான்மையினர் மீதும் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதுமான தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தற்போதைய, மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைப்போல மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருகிறது.

கொரோனா சிக்கல்களால் கடந்த மாதம் இறந்த இரண்டு பத்திரிகையாளர்களான ஜர்னைல் சிங் மற்றும் ராஜ்குமார் கேஸ்வானி ஆகியோரின் நினைவாக பேரணியின் தொடக்கத்தில் ஒரு கணம் மெளனம் அனுசரிக்கபட்டது. ஜர்னைல் சிங், சீக்கிய இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கத்தைப் பொறுப்பேற்க தொடர்ந்து போராடி வந்த நிலையில், ராஜ்குமார் கேஸ்வானியோ, போபால் எரிவாயு கசிவில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றிய இந்திய அதிகாரிகளை அம்பலப்படுத்தி வந்தார். இரண்டு துயரங்களும் 1984-ல் இந்தியாவை உலுக்கியது, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் உடந்தையாக இருப்பவர்கள் இந்த ஆண்டுகளிலும் தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர்

பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக  செயல்பாட்டாளர்களை  குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் ஒருமனதாக கோரிக்கை வைத்தனர். மேலும், அவர்கள் சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினர். மேலும் கனடாவில், இந்திய உயர்மட்ட அதிகாரிகளால் அதிகரித்து வரும் வெளிநாட்டு தலையீடுகளை கண்டனம் செய்ததோடு, சமூக செயல்பாட்டளர்களையும், டெல்லியின் அரசாங்க கொள்கைகளை  எதிர்க்கும் பத்திரிகைகளை மெளனமாக்க முயற்சிக்கும் செயல்களையும் கண்டித்தனர்.

இந்தியாவில் மோடி ஆட்சியின் தோல்விகளை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மீதும், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும், விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கும் சமூக செயல்பாட்டளார்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

செய்தி சேரிக்கச் சென்ற செய்தியாளர்களை சிறையில் அடைக்கும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற பாசிச நடவடிக்கைகள் அனைத்தையும் சர்வதேச அளவில் அம்பலப்படும் நிகழ்வுகளில் ஒன்றுதான் சர்ரேவில் நடந்த இந்த போராட்டம்.


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : Counter currents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க