நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி
தோழர் மணிவண்ணன்
க்சல்பாரி புரட்சியாளரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் தோழர் மணிவண்ணனுக்கு ஆகஸ்ட் 22, 2021 அன்று கோவையில் நான்காம் ஆண்டு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாதி,மத பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக, சுயநலம், ஒதுங்கும் போக்கை ஊக்குவிக்கும் சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிராக போராடி புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திபிடித்தவர் தோழர் மணிவண்ணன்.
எளிமையான வாழ்க்கை, அங்கீகாரத்திற்கு ஏங்காத அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்திலும் வர்க்க அரசியலுக்கான போராட்டம், உழைக்கும் மக்களிடம் ஐக்கியப்படுவது, அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.
தோழர் மணிவண்ணனின் உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது சிறந்த கம்யூனிசப் பண்புகளை வரித்துக் கொள்ள உறுதியேற்று கோவைப் பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் சிவப்பஞ்சலி செலுத்தினர்.
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த நக்சல்பாரி புரட்சியாளருக்கு வீரவணக்கம்!
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க