உப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் !

உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்.. உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்.. அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்.. 405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..

ப்பு – நம் வாழ்வில் தவிர்க்கமுடியாதது.. சுயமரியாதையின் அடையாளமாகக் காட்டப்படும் உணவுப் பொருள் உப்பு. அந்த உப்பு எடுக்கும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது ? அவர்களின் வலிகள்தான் நமது உணவின் ருசியாகின்றது.

உப்பளத்தின் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வெளிவருகிறது உப்பிட்டவரை … ஆவணப்படம்.

உப்பு சுமக்க வந்தோம் – வலிகளை சுமந்து நின்னோம்..
உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்..
அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்..
405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..

உறக்கம் தொலச்சி உப்பு எடுத்தோம் ருசியும் கூடிடவே ..
கருமணிக்கு பார்வையிழந்தோம் – இருளும் சூழ்ந்திடுதே
வாழ்வில் இருளும் சூழ்ந்திடுதே..

அள்ள அள்ள குறையாது வெள்ளைத் தங்கம்..
ஆனாலும் எங்க வாழ்க்கைய மெல்லத் தின்னும்.
இரும்பக் கூட உருக்குதிந்த உப்புக் காத்து..
எலும்புக்கூடா தேகம் ஆச்சு – இந்த உப்புப் பூத்து.

பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்

வெளியீட்டு நாள் : 12.10.2021

பாருங்கள்! பகிருங்கள்!
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் : மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு : 97916 53200

2 மறுமொழிகள்

  1. வலியை உணர்த்துகிறது பாடும் தோழரின் குரல்..உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டுமாயின் நாம் உப்பாய் மாறி துரோகிகளின் தொண்டைக்குள் “கரிப்பது” அன்றி வேறு தீர்வில்லை..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க