ண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு எதிராக, அக்டோர் 26 அன்று திரிபுரா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது, இந்து மதவெறியர்கள் நடத்திய வன்முறையால், சாம்தில்லாவில் இரண்டு முஸ்லீம் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. முசுலீம்களின் பல்வேறு குடியிருப்புகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டன. அவர்களது வழிபாட்டுத் தளமான மசூதி சூறையாடப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திரிபுரா போர்க்களமாக காட்சியளிக்கிறது.
இந்த வன்முறை தொடர்பான உண்மை கண்டறியும் குழுவில் பங்கேற்ற டெல்லியை சார்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஊபா சட்டத்தை ஏவியுள்ளது திரிபுராவை ஆளும் பாசிச பாஜக அரசு.
அதோடு நிற்கவில்லை. கடந்த நவம்பர் 6-ம் தேதியன்று, இந்து மதவெறியர்களின் வன்முறைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த 102 பேரின் மீது (ட்விட்டரில் 68 கணக்குகள், முகநூலில் 32 கணக்குகள், யூடியூப்பில் 2 கணக்குகள்) கிரிமினல் சதி, போலி குற்றச்சாட்டுகள் மற்றும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், அந்த நபர்களின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறும் ட்விட்டர், முகநூல் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரிபுரா மாநில போலீசுத்துறை.
திட்டமிட்டு முஸ்லீம் மக்கள் மீதும், அவர்களது சொத்துக்கள் மீதும் வன்முறை வெறியாட்டம் போட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் காவி குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வன்முறைக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவிவிட்டுள்ளது திரிபுரா அரசின் காவி போலீசு.
படிக்க :
எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்
திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்
திரிபுரா போலீசுத்துறையின் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சட்டம் – ஒழுங்கு) சுப்ரதா சக்ரவர்த்தி, “பிரச்சனையின் முக்கியத்தன்மையை மனதில் கொண்டுதான் ஊபா சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சமூக வலைதளப் பதிவுகள் குறித்து, நாங்கள் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்கிறார்.
இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜெய்ப்பூர் பேராசிரியர் சலீம் (பொறியாளர்), பிரிட்டிஷ் நாளிதழான பைலைன் டைம்ஸின் சர்வதேச நிருபரான ஜஃபருல் இஸ்லாம் கான் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன. டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர், பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் சிறுபான்மை துறை, மாணவர் ஆர்வலர் ஷர்ஜீல், உஸ்மானி மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் ஷியாம் மீரா சிங், ஜஹாங்கீர் அலி மற்றும் சர்தாஜ் ஆலம் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த திரிபுரா போலீசுத்துறையின் நடவடிக்கைக்கு, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (EGI) மற்றும் இந்திய மகளிர் பத்திரிகை படை (IWPC) கண்டனம் தெரிவித்துள்ளன.
வகுப்புவாத வன்முறைகள் குறித்து புகார் அளித்ததற்காகவும், எழுதியதற்காகவும், பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது கட்டாய சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ள திரிபுரா போலீசுத்துறையின் இந்த நடவடிக்கையால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய எடிட்டர்ஸ் கில்ட் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது.
“நிகழ்வுகளின் உண்மை நிலைமையைத் தெரிவிப்பது முன்னிலைப்படுத்துவது மற்றும் வழங்குவது ஒரு பத்திரிகையாளரின் வேலை. அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பது பத்திரிகையாளர்களின் வேலையல்ல. ஊபா சட்டங்களை ஊடகவியலாளர்கள் மீது பயன்படுத்தி அவர்களை மௌனமாக்குவதற்கான முயற்சி இது. இத்தகைய குற்றச்சாட்டுகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு ஊடகங்கள் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என IWPC கூறியுள்ளது.
“திரிபுரா எரிகிறது” என்று ட்விட் செய்ததற்காக ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் சியான் மீரா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
“விசாரணை மற்றும் ஜாமீன் விண்ணப்பங்கள் மிகவும் கடுமையானதாகவும், மிகையானதாகவும் இருக்கும் இத்தகைய கடுமையான சட்டம், திரிபுரா வகுப்புவாத வன்முறையைப் பற்றி புகார் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டும் எடிட்டர்ஸ் கில்ட், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தண்டிக்காமல், ஒரு நியாயமான விசாரணையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் எம்.பி ஜிதேந்திர சவுத்ரி, “போலீசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் நெறிமுறையற்றது. சங்க பரிவார கும்பல் வகுப்புவாத வன்முறைகளை தொடுக்கும் போது, மனிதநேய உணர்வுள்ளவர்கள் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பது இயல்பான ஒன்றாகும். அதற்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி ஊபா சட்டம் பாய்வதென்பது முற்றிலும் ஆபத்தமானது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸின் மாநில பொறுப்பாளர் சுஷ்மிதா தேவ், “திரிபுரா வன்முறை பற்றி போலீசு தரும் தகவல்கள் பொய்யானது என்று கருதும் பட்சத்தில் உண்மையை அறிந்து கொள்ள அப்பகுதிக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” என்று கூறினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை. ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்து மதவெறி கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க