ரம் சன்சாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முசுலீம்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்த சாமியார் கும்பல் மீது கண் துடைப்புக்கு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. முசுலீம்களைக் கொல்வதற்கு தனிப்படை அமைக்க வேண்டும் என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டிய இந்தக் கும்பல் இன்னும் கைது செய்யப்படாமல் வெளியே தைரியமாக உலாவிக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்திய நீதித்துறையின் இலட்சணம்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 28-ம் தேதியன்று பல்வேறு அகாதாக்களில் (மடங்கள்) உள்ள சாமியார்கள் ஹரித்துவாரில் சந்தித்து முசுலீம்களுக்கு எதிரான ஆயுதப்படையைக் கட்டுவதற்கான கருக்குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருக்குழுவில் மொத்தம் 21 சாமியார்கள் இடம்பெற்றுள்ளனர்.
இசுலாமியர்களை ஆயுதமேந்திய கும்பல் எனக் கூறும் இச்சாமியார்கள், குரானுக்கு எதிராகவும், முசுலீம் மத தலைவர்களான மவுலானாக்கள் மற்றும் இமாம்களுக்கு எதிராகவும் போலீசு நிலையத்தில் வழக்குத் தொடுத்து வந்துள்ளனர்.
படிக்க :
உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !
இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” மாற்றுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவதாகவும், முந்தைய கூட்டத்தில் தாங்கள் பேசியவை அனைத்தும் சரியானவை என்றும் அது தங்களது கருத்துச் சுதந்திரம் என்றும் கூறியிருக்கின்றனர்.
இது போன்று மேலும் மூன்று சன்சாத்களை அலிகர், குருஷேத்ரா மற்றும் சிம்லாவில் துவங்க இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். தற்போது முசுலீம்களுக்கு எதிரான ஆயுதப்படை அமைப்பதற்கான கருக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைத்தும் ஏற்கெனவே முசுலீம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் எனப் பேசிய சன்சாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தான். இவர்களில் இந்துத்துவ வெறியன் யதி நரசிங்கானந்த் சரஸ்வதும் ஸ்வாமி பிரபோதானந்த், இந்து மகாசபையின் பொதுச் செயலர் அன்னபூர்ண பாரதி, பண்டித் அதிர் கௌஷிக், சிந்து மகாராஜ், ஸ்வாமி தர்ஷன் பாரதி ஆகியோர் இந்த கருக்குழுவில் இடம்பெற்றுள்ள முக்கியமானவர்களாகும்.
”இந்து தர்மத்தைப் பற்றி இந்தியாவில் பேசுவது தவறா? ஆதிசங்கரர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அகாதாக்களை உருவாக்கினார். புத்த மதத்திற்கு எதிராகப் போராட ஆயுதம் தாங்கிய அகாதாக்களை உருவாக்கினார். குரு கோவிந்த் சிங் எப்படி தனக்கான படையை உருவாக்கினாரோ அதே போலத்தான் இந்துக்களுக்கும் அகாதாக்கள். இதுவரை இதில் எந்தப் பிரச்சினையும் இல்லையே ? இப்போது என்ன பிரச்சினை வந்துவிட்டது. இஸ்லாம் மதம் ஒரு ஆயுதம்தாங்கிய கும்பல். அதனால்தான் அவர்களை ஆயுதங்களைக் கொண்டே போரிட முடியும்” என்று கூறுகிறார் தர்ஷன் பாரதி என்னும் சாமியார்.
முந்தைய கூட்டத்திற்கான வரவேற்பு குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்திய அவர், உலகிற்கு அரித்வார் கூட்டம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ”தர்ம சன்சாத் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான ஒரு படி” என்றார், தர்ஷன் பாரதி.
வழக்கம்போல இந்தத் திட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். , பாஜக-வுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாக நம்பச் செய்யும் வகையில் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளது. “பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் மட்டுமே இந்துமதத்திற்கு ஜவாப்தாரிகள் அல்ல. எங்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது.“ என்று தங்களது வருங்கால ஆயுதமேந்திய தாக்குதல் குற்றத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ்.  – பாஜக-வை முன் கூட்டியே விடுவித்துவிட்டது.
படிக்க :
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
இதற்கு முந்தைய நிகழ்வில், முசுலீம் வெறிப்பு அரசியல் பேசியதற்காக இவர்கள் மீது மென்மையான பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதியப்பட்டாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி வருகின்றது இந்துத்துவக் கும்பல்.
முசுலீம்களைக் கொல்வதற்கு தீர்மானம் போடுவதும், அதற்குப் படை திரட்டுவதும் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஒன்றிய பாசிச அரசோ, மாநில அரசுகளோ, அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ கண்டுகொள்வதில்லை.
இந்து ராஷ்டிரம் என்பதை பொத்தாம் பொதுவாகப் பேசி வந்தவர்கள், இன்று பகிரங்கமாக அதுதான் தங்களது நோக்கம் என்றும், அதற்கு படுகொலைகளும் ஆயுதங்களும் தான் தீர்வு என்றும் பேசிவருகின்றனர். இது பாசிசக் கும்பலின் புதிய பரிமாணம். இது தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், ஹிட்லரின் வதை முகாம்கள் போல் இந்தியாவிலும் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
கர்ணன்
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க