கடந்த ஜனவரி 31 அன்று மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 30 வினாடி வீடியோவில், “மசூதிகளில் அசான்(பாங்கு) ஓதும்போது (அதற்கெதிராக) ஒலிபெருக்கியில் இரைச்சலை ஏற்படுத்துங்கள்” “இந்த வீடியோவை வைரலாக்குங்கள் இந்த செய்தி இந்தியா முழுவதும் செல்ல வேண்டும்” என்று மசூதிக்கு வெளியில் காவி குண்டர் ஒருவர் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அறைகூவல் விடுக்கிறார்.
கடந்த ஜனவரி 29 அன்று ரத்லாம் மாவட்டத்தின் ராவ்தி போலீசு நிலையத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் ஆசான் ஓதுவதை தடை செய்யக்கோரி புகார் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த இந்து ஜாக்ரன் மஞ்ச் (HJM) உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோவை பரப்பியுள்ளனர்.
வீடியோ ஒரே இரவில் வைரலானது, அடுத்த நாள் ரத்லம் போலீசார் கிராமத்திற்கு விரைந்து மசூதியின் ஒலிபெருக்கி ஒலியைக் குறைக்குமாறு முஸ்லீம்களை வலியுறுத்தினர். அதே நேரத்தில் மசூதிக்கு வெளியே இந்துமதவெறி அமைப்பினர் வைத்திருந்த ஒலிபெருக்கியை அகற்றினர்.
படிக்க :
♦ ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
♦ ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
“நாங்கள் கிராம மக்களிடம் பேசி இரு சமூகத்தினரையும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினோம். இந்த விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்பட்டதால் சர்ச்சைக்குரிய வீடியோவில் பேசும் இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று ராவ்தி போலீசு நிலையத்தின் டவுன் இன்ஸ்பெக்டர் ராம் சிங் கூறினார்.
அசான் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைக்கான அழைப்பாகும். இந்தியாவில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மசூதியிலிருந்து அசான் (பாங்கு) ஓதப்படுகிறது.
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி புகார்கள் சமர்ப்பிக்கப்பட்ட போலீசு நிலையம் ராவ்தி மட்டுமல்ல மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 29-க்கும் பிப்ரவரி 2-க்கு இடையில் இந்து ஜாக்ரன் மஞ்ச் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பிராந்தியத்தின் 15 மாவட்டங்களில் உள்ள 310 போலீசு நிலையங்களிலும் ஒரே மாதிரியான இரண்டு பக்க புகார் கடிதங்களை கொடுத்ததாக HJM-ன் மால்வா மாகாணத் தலைவர் ஆஷிஷ் பாசு கூறினார்.
जब से UP चुनाव की घोषणा हुई हैं, मध्य प्रदेश के दर्जनों जिलों जैसे खण्डवा, इंदौर, उज्जैन में "अज़ान" के खिलाफ़ मुहीम छेड़ कर दी गई हैं। रैलीयां निकाल कर भड़काऊ नारे लगाए जा रहे हैं।
बावजूद इसके, रैली की परमिशन मिल रही है
Thread-
वीडियो MP के रतलाम का हैं। @DGP_MP @SP_RATLAM_MP pic.twitter.com/nI3EBGvflO
— काश/if Kakvi (@KashifKakvi) February 4, 2022