பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக காவி கும்பல் !
பார்ப்பனிய எதிர்ப்பாளர்களின் முற்போக்கு கருத்துக்களை மாணவர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்வோம்!

2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பகவத்கீதை பாடத்திட்டமாக இருக்கும் என்று குஜராத் அரசு கடந்த மார்ச்-17 வியாழன் அன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் கல்விதுறைக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தின்போது கல்வி அமைச்சர் ஜிட்டு வாகனி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பகவத்கீதையில் பொதிந்துள்ள ’ஒழுக்க நெறிகளை’ பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது சம்பந்தமான முடிவு என்பது ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளது. புதிய கல்விக்கொள்கையானது நவீன மற்றும் தொன்மையான கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் அறிவு ஆகியவற்றை மாணவர்கள் பெருமையாக உணரும்படி இந்தியாவின் உயர்ந்த மற்றும் பன்முகத்தன்மையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது பற்றி பேசுகிறது.

படிக்க :

பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

குஜராத் கல்வித்துறை அமைச்சர் வாகினி பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்து பேசும்போது, “இந்திய சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களும் இந்து வேதத்தில் உள்ள கலாச்சாரங்ளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.

“எனவே நாங்கள் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் பகவத்கீதையை அறிமுகப்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்’’. 6-லிருந்து 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்காக ‘புனித கல்வி’ பாடப்புத்தகத்தில் வேதம் பற்றி அறிமுகப்படுத்தபடும். 9-லிருந்து 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் மொழி பாடத்திட்டத்தில் அது கதை சொல்லும் வடிவத்தில் அறிமுகப்படுத்தப்படும்’’ என்று வாகனி கூறினார்.

“உதாரணத்திற்கு கீதையை பற்றி மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற மிகச்சிறந்த ஆளுமைகள் அல்லது மற்றவர்கள் பகவத்கீதையை பற்றி என்ன பேசினார்கள் என்பது பற்றி சில பாடங்கள் இருக்கும். இது முக்கிய பாடங்களின் ஒரு பகுதியாக இருக்கும். மாணவர்கள் தேர்வு செய்யும் துணைப்பாட வாய்ப்பாக அது இருக்காது. இவை ஓர் ஆர்வத்தை உருவாக்குகின்ற முறையில் அறிமுகப்படுத்தப்படும். குஜராத்தி பாடத்தேர்வில் காந்தி கீதையை பற்றி என்ன விளக்கம் கொடுத்தார் என்ற கேள்வி இடம்பெறலாம்” என்று கல்வித்துறை செயலாளர் வினோத் ராவ், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.

9 முதல் 12 வகுப்புகளுக்கு கீதையில் உள்ள நிர்வாகம் மற்றும் தலைமை தாங்குவது உள்ளிட்ட பாடங்களோடு கீதையின் சாரமான மனிதாபிமானம், சமத்துவம், கர்மவினை பற்றிய கருத்துகள், தன்னலமற்ற சேவைபற்றிய கருத்துக்கள் குஜராத்தி பாடநூலின் ஒரு பகுதியாக இருக்கும் என்றார் அவர்.

படிக்க :

♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அதன் உள்ளடக்கம் அச்சு வடிவிலும், ஒளி, ஒலி வடிவிலும் கல்விதுறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குஜராத் கவுன்சிலால்(GCERT) தயாரிக்கப்படும். அதே நேரத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு குஜராத்தின் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தால் (GSHSEB) தயாரிக்கப்படும் என்று பத்திரிகையில் பிரசுரமானபடி அரசாங்கத்தின் தீர்மானம் கூறியது.

வழிபடுதல், சுலோகங்களை ஒப்பித்தல், அறிந்துகொள்ளுதல், நாடகம், வினாடி வினா, ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற வேதங்களின் அடிப்படையிலான நடவடிக்கைகளையும் பள்ளி ஒருங்கிணைக்கும். பாடநூல்கள், ஒளி, ஒலி குறுந்தகடுகள் முதலிய படிப்புச் சாதனங்கள் அரசாங்கத்தால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தியா டுடே இதழின்படி, காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பள்ளி பாடபுத்தகத்தில் பகவத்கீதையை இணைத்திருப்பதை வரவேற்றுள்ளன.


தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி :
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க