னோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து அருந்ததிராய் எழுதிய ”தோழர்களுடன் ஒரு பயணம்” (Walking with the Comrades) எனும் நூல், ஏ.பி.வி.பி குண்டர்களின் எதிர்ப்பையொட்டி நீக்கப்பட்டிருக்கிறது.

“அருந்ததிராயின் புத்தகம் கடந்த 2017-ம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்த நூலில் அருந்திராய் மாவோயிஸ்டுகளை புகழ்ந்திருப்பது ஒரு வாரத்திற்கு முன்னர் தான் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஆகவே இது தொடர்பாக விவாதிக்க ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தோம். அந்தக் கமிட்டி இந்த பாடத்திட்டத்தை நீக்குவதற்கு பரிந்துரைத்தது” என்கிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி

மேலும், “ஏபிவிபி-யைத் தவிர வேறு சிலரும் புகாரளித்திருந்தனர். இந்தப் பிரச்சினை பல்வேறு கோணத்தை எடுத்துள்ளது. ஆகவே நாங்கள் இந்தப் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளோம்“ என்று குறிப்பிட்டுள்ளார் பிச்சுமணி

படிக்க :
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !
♦ அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

கடந்த ஆண்டு தான் தமிழக கவர்னரும் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், பிச்சுமணியை  மனோன்மனியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்.

முதுகலை ஆங்கிலப் படிப்பின் மூன்றாவது செமஸ்டருக்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நூல் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் படித்து வரும் நிலையில் திடீரென ஞானோதயம் ஏற்பட்டு, இந்த நூலை நீக்கியுள்ளார் பிச்சுமணி.

அறிவுத்துறையினரின் நிழல் கூட மாணவர்கள் மேல் பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாகவும் துடிப்பாகவும் செயல்பட்டுவருகிறது சங்க பரிவாரம். அந்த அடிப்படையில்தான், பல்கலையில் செயல்படும் ஏபிவிபி மூலம் புகாரளிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பன்வாரிலாலுடன் பிச்சுமணி (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்)

இந்த நூலை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கவில்லை எனில் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகவும், தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும் ஏபிவிபி தெரிவித்திருந்தது.

இதே போல இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், அருந்ததிராய் கடந்த 2002-ம் ஆண்டு அமெரிக்காவில் பேசிய உரையை “கம் செப்டெம்பர்” என்ற தலைப்பில் கோழிக்கோடு பல்கலையில் ஆங்கிலத்துறையில்  பாடத்திட்டமாக வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள பாஜக கடந்த ஜூலை மாதம் கேரள கவர்னருக்கு மனு அனுப்பியது. ஆனால் கேரளாவில் அந்தப் பாடம் தடை செய்யப்படவில்லை.

ஆனால் தமிழகத்திலோ, சங்கிகளின் அடிமையின் ஆட்சி நடைபெறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு சூரப்பாவைப் போல, ஆங்காங்கே தமக்குச் சாதகமானவர்களை நியமித்து வைத்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இந்தியா முழுவதும் அறிவுத்துறையினரை பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையிலடைத்துவரும் அதே வேளையில், அவர்களின் படைப்புகள் மக்களிடம்  சேர்க்கப்படுவதையும் தடுத்துவருகிறது சங்க பரிவாரக்கும்பல். கல்வியில் முற்போக்கு சிந்தனைகள் துளியளவு கூட கலந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.


கர்ணன்
செய்தி ஆதாரம் :
The Hindu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க