மிழக அரசானது குடிசை மாற்று வாரியத்தின்கீழ் உள்ள 25 ஆண்டுகள் பழமையான மற்றும் பாழடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்படும் என்று அறிவித்தது. அதில் முதல்கட்டமாக 7500 குடியிருப்புகள் 1200 கோடி செலவில் இடிக்கப்பட்டு கட்டப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை சேத்துப்பட்டு (எம்.எஸ்.நகர்), சைதாப்பேட்டை (கோதாமேடு), தி.நகர் (லலிதாபுரம்) மற்றும் இதுபோன்ற குடியிருப்புகளில் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்புகளை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் 1 அல்லது 2 மாதங்களுக்கு முன்னாலேயே ஒட்டப்பட்டது.
குடியிருப்புகளை இரண்டு வருடத்தில் மறுகட்டுமானம் செய்ய முடியும் என்பதால், இந்த மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.24000 வழங்கப்படும் என்றும், அதுவும் இரண்டு தவனைகளாக வழங்கப்படும் ரூ.12,000 வீதம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
படிக்க :
திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !
மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
தினக்கூலிகள் என்று அழைக்கப்படும் சாதாரண உழைக்கும் மக்கள்தான் இதுபோன்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கின்றனர். தினமும் வேலைக்கு சென்றால்தான் மூன்று வேலையும் சோறு என்ற நிலைமையில்தான் அவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலைமையில் உள்ள இவர்கள் சென்னையில் வீடு வாடகைக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தது முன்பணம் ரூ.30,000 மற்றும் மாத வாடகை ரூ.4,000 இருந்தால்தான் செல்ல முடியும். மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை பற்றி யோசிக்காமல் மாதம் ரூ.1000 தருகிறேன் என்று கூறுவது அநியாயமல்லவா? இதை நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று அரசு மக்களை கைவிடுகிறது என்று தானே கூற முடியும்.
இப்படி புதியதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு ரூ.1.5 லட்சம் முன்பணமாக கட்டினால்தான் குடியிருப்புகள் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மக்கள் மத்தியிலிருந்து எழுந்த எதிர்ப்பால் அந்த அறிவிப்பை நைச்சியமாக 17.12.21 தேதியிட்ட GO.NO.54 மூலம் மாற்றியுள்ளது.
அதில் குறிப்பாக தற்போது உள்ளதைவிட 100% அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டால் மாதம் ரூ.250, 60% – 100% அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டால் மாதம் ரூ.400, 30% 60% அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டால் மாதம் ரூ.500 20 வருடத்திற்கு செலுத்த வேண்டும். தற்போது உள்ளதைவிட அதிகமான குடியிருப்புகள் 30% குறைவாக கட்டப்பட்டால் ரூ.1.5 லட்சம் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள குடிசை மாற்று வாரிய குடியுருப்புகளில் மக்கள் இயற்கையான மற்றும் காற்றோட்டமான சூழல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதில் இன்னும் குடியிருப்புகளை அதிகப்படுத்துவது மக்களின் சிரமத்திற்கே வழிவகுக்கும்.
அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் ரூ.1.5 லட்சம் கண்டிப்பாக செலுத்த வேண்டும். அதற்காக வாங்கிய கடனை அரசாகிய நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறுவது அரசு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைபோல செயல்படும் தோற்றத்தை ஏற்படுத்துகிறதா, அல்லவா?
படிக்க :
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு
இப்படி கட்டப்படும் குடியிருப்புகளையும் குடியிருப்பு நலச்சங்கங்கள் மூலம் மக்களாகிய நாம்தான் பராமரித்துக் கொள்ள வேண்டுமாம்! அதற்காகதான் அரசு “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ரூ.30,000-க்கு குறைவான செலவினங்களை குடியிருப்பு நலச்சங்கங்கள் சீர்செய்ய வேண்டும். ரூ.30,000-க்கு அதிகமான செலவினங்களை தான் அரசு சரிசெய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் இத்திட்டமானது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசானது விலகிப்போய் இருப்பதையே உணர்த்துகிறது. நம் உரிமையை நிலைநாட்ட சங்கமாய் திரள்வதுதான் ஒரேவழி.
அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க