கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !

பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.

0
ர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் வியாபார சந்தையில் முஸ்லீம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்கக்கூடாது என்று முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் காவிக் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
மாம்பழச் சந்தையில் இந்துக்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறது இந்துமதவெறி கும்பல். இந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம சேனையின் சித்தலிங்க சுவாமிஜி, “மாம்பழச் சந்தைகள் முஸ்லீம் வியாபாரிகளால் கட்டப்படுத்தப்படுகின்றன. ஏழை இந்து மாம்பழ உற்பத்தியாளர்களும் வணிகர்களும் பொறுப்பேற்க வேண்டிய நேரமிது. இது இந்து மாம்பழ உற்பத்தியாளர்களின் செழிப்பை உறுதி செய்யும். முஸ்லீம்களை வியாபாரம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இந்து இளைஞர்கள் சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறுகிறோம். மேலும் முஸ்லீம்கள் விலைவாசியை நிர்ணயிக்க முடியாது” என்று கூறுகிறார்.
இந்த வெறுப்பு பிரச்சாரத்தில் மூலம் இந்த காவிக் குண்டர்கள் முஸ்லீம் மக்களை கர்நாடகாவில் வாழவே விடமாட்டாரகள் போலும்! இந்த பிரச்சினை தொடர்பாக மாம்பழ உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பலர் இந்துமதவெறி அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

படிக்க :

ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்

ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!

கோலார் மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நீலத்தூர் சின்னப்ப ரெட்டி, “இதுபோன்ற பிரச்சாரங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலையையும் இலாபகரமான விலையையும் வழங்க முயற்சிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சந்தை வசதிகளை முஸ்லீம்கள் செய்து கொடுத்து வருவதால் இதுபோன்ற பிரச்சாரம் வெற்றியடையாது” என்று கூறினார்.
சீனிவாசபுரத்தில் உள்ள மாம்பழ வியாபாரி அனீஸ் அகமது, “இந்து மற்றும் முஸ்லீம் வர்த்தகர்கள் இருவரும் பரம்பரை பரம்பரையாக இணக்கமாக வியாபாரம் செய்து வருவதால் இந்த வெறுப்பு பிரச்சாரத்தில் எந்த அர்த்தமுமில்லை. சில சமயங்களில் முஸ்லீம் வியாபாரிகள் இந்து விவசாயிகளுக்கு தங்கள் பண்ணைகளில் மாம்பழம் பயிரிட விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.” என்று கூறினார்.
கோலார் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கியின் தலைவர் பைலஹள்ளி கோவிந்த கவுடா, சமூகங்களை பிளவுப்படுத்தும் முயற்சிகளை கேலிசெய்து, “இது கந்துவட்டிகாரனின் நடவடிக்கை. முஸ்லீம் வர்த்தகர்கள் பல வருடங்களாக விவசாயிகளுக்கு சந்தை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். இப்பிரச்சாரத்தை “சமூகங்களைப் பிளவுபடுத்தும்” முயற்சி என்று சாடினார்.
அரசியல் ஆதாயத்திற்காக பாஜக முஸ்லீம்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக பாஜக “அரசியல் ஆதாயத்திற்காக வகுப்புவாத பிரச்சினைகளை சமூகத்தில் கிளப்புகிறது” என்றார்.
முஸ்லீம் விற்பனையாளர்களிடம் இருந்து மாம்பழங்களை வாங்க வேண்டாம் என்று குழுக்கள் கூறுவது “தேச விரோதம்” என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் கிறித்துவ தேவாலையங்கள் மீது தாக்குதல் தொடுப்பது; வழிபாடு செய்யவிடாமல் தடுப்பது போன்றவற்றை சென்ற ஆண்டு இறுதியில் செய்தார்கள். இந்த ஆண்டு துவக்கம் முதலே ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய காவி குண்டர்கள் அதை வைத்து முஸ்லீம் வெறுப்பு அரசியலை மாநிலம் முழுவதும் தூண்டிவிட்டார்கள். கர்நாடக அரசையே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதிக்க வைத்தார்கள். அதன்பிறகு கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது என்றார்கள்; ஹலால் செய்யப்பட்ட உணவை முஸ்லீம் இறைச்சிக் கடைகளில் இந்துக்கள் வாங்கி உண்ணக் கூடாது என்றார்கள்; அதன்பிறகு மசூதிகளில் அசான் ஓது ஒலிப்பெருக்கிகளை தடை செய்வது குறித்து பிரச்சினையை கிளப்பிவருகிறார்கள்; இப்படி தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து கலவரங்களை தூண்டிவிட்டு வருகிறார்கள் கர்நாடக காவி குண்டர்கள்.

படிக்க :

கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!

முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?

பல ஆண்டுகளாக இந்து – முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.
இன்னும் முஸ்லீம் மக்கள் வியாபாரம் செய்யும் அனைத்தையும் தடை விதிக்க தயங்க மாட்டார்கள் இந்த காவிக் குண்டர்கள். நீதிமன்றம், போலீசு, அரசு என அனைத்து துறைகளையும் கைப்பற்றி ஓர் இந்துராஷ்டிரமாக மாறிவரும் கர்நாடகத்தில் முஸ்லீம், கிருத்துவ சிறுபான்மை மக்களை ஒடுக்கும் பாசிச சக்திகளை வீழ்த்த உழைக்கும் மக்கள் பாசிச எதிர்ப்பு படையாய் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

புகழ்
செய்தி ஆதாரம் : தி வயர், டைம்ஸ் ஆஃப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க