லிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர், தடயவியல் மருத்துவப் பிரிவில் பாலியல் வன்முறை குறித்த வகுப்பின்போது, புராணங்களில் கூறியுள்ள இந்து மதக் கடவுகளை குறிப்பிட்டு வகுப்பெடுத்ததற்காக, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகம். இங்கு மருத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ஜெதேந்திர குமார், மாணவர்களுக்கு “பாலியல் வல்லுறவு பற்றிய புராணக் குறிப்பு” என்ற தலைப்பில் புகைப்படங்களை திரையிட்டு வகுப்பெடுத்துள்ளார்.

அதில், பிரம்மா, இந்திரன், மகா விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்களின் பாலியல் வன்முறைகளை குறித்து பேசியுள்ளார். அத்துடன் நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்முறை, மதுரா பாலியல் வன்முறை வழக்கு போன்றவற்றையும் உதாரணம் காட்டி அவர் பாடம் எடுத்திருக்கிறார்.

இந்த வகுப்பின் வீடியோ கிளிப்பை ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பாஜகவுடன் தொடர்புடைய டாக்டர் நிஷித் சர்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படிக்க :

முசுலீம்களைக் கொல்ல ஆயுதப்படைக்கு கருக்குழு அமைத்த சங்கபரிவாரக் கும்பல்

புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !

கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வகுப்பின் போது அவரது விளக்கக்காட்சியின் “உணர்வுகளை தூண்டும் உள்ளடக்கம்” தொடர்பாக சிவில் லைன்ஸ் போலீசு நிலையத்தில் உதவிப் பேராசிரியருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153A (மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295A (அவமதிப்பு அல்லது மத நம்பிக்கைகள் மூலம் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டு வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்), 298 (வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரித்தல்) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஏப்ரல் 6 அன்று தெரிவித்துள்ளது. “அவர் நடந்து கொண்டதை விளக்கி ஒரு பதில அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளோம். இதற்கிடையில், நாங்கள் அவரை இடைநீக்கம் செய்துள்ளோம்,” என்று பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புப் பொறுப்பாளர் ஷாஃப் கித்வாய் கூறினார்.

AMU துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு, டாக்டர் குமார் ஏப்ரல் 6 அன்று எழுதிய கடிதத்தில், “எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினரின் மத உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல, பாலியல் வன்முறை நம் சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதை முன்னிலைப்படுத்த மட்டுமே இது செய்யப்பட்டது” என்று கூறினார். இது கவனக்குறைவாக நடந்த தவறு என்றும், “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காது” என்றும் அவர் உறுதியளித்தார்.

விஷ்வ ஹிந்து பரிஷத், பேராசிரியரின் இடைநீக்கத்தை “கண் துடைப்பு”-க்கு தான் என்று கூறியது. விஹெச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் ட்விட்டில், அவர் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மற்றொரு ட்விட்டில், AMU அதன் “இந்து எதிர்ப்பு” மற்றும் “தேச விரோத” மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்றிலும் துடைத்தெரிய வேண்டும் என்று அவர் கூறினார்.

புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வுப் புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.


காளி
செய்தி ஆதாரம் : NDTV, indianexpress, teekkathir (7.4.22)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க