ண்மையில், விருதுநகரில் பட்டிலியன வகுப்பைச் சார்ந்த இளம்பெண்ணை, எட்டுபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதேபோல வேலூரில் இரவு நேரத்தில் தன் நண்பருடன் ஆட்டோவில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை, ஓட்டுநர் உட்பட ஐந்துபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான தண்டனை வழக்கு வேண்டும், ‘தூக்கில் போட வேண்டும்’, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பலரும் பேசுகிறோம்.
இந்த பொதுமனசாட்சியை அரசும் உணர்ந்துதான் இருக்கிறது. வேலூரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, அம்மாவட்ட போலீசுத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இரவு 12 மணிக்கு மேல் இயங்கும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் தங்களின் பெயர், தொலைபேசி எண் முதலியவற்றை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும்; ஓட்டுநர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்டோவின் பின்புறம் பயணிகளுக்குத் தெரியும்படி ஓட்டவேண்டுமென்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
♦ நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி
ஏற்கெனவே, தெருமுழுக்க கண்காணிப்பு கேமராக்கள், காவலன் செயலி, இரவுநேர ரோந்து என பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் குற்றங்களை குறைக்க முடியவில்லையே ஏன்? மாறாக குற்றங்கள் பெருகியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளின் கருப்பொருளே ‘குற்றவாளிகளை எப்படி பிடிக்கலாம்’ என்றுதான் உள்ளதே தவிர போலீசோ, அரசு நிர்வாகமோ ‘குற்றங்களைத் தடுப்பது’ பற்றிப் பேசுவதில்லை.
விருதுநகர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எட்டு பேரில், நான்கு பேர் பள்ளிச் சிறுவர்கள் என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாக உள்ளது. வேலூர் சம்பவத்திலோ 17 வயதான சிறுவன் ஒருவனையும் சேர்த்து, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருமே 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பள்ளி செல்லும் வயதில், இவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளாக மாற்றியது யார் அல்லது எது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. மொத்த சமூகமே சீரழிக்கப்பட்டுவருகிறது, குற்றமயமாகிவருகிறது என்று சொல்வதற்கான சரியான எடுத்துக்காட்டுகள்தான் இவர்கள்.
வேலூரில் பெண் மருத்துவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்தார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதானே குற்றங்களின் ஊற்றுமூலம். பெரும்பகுதி குற்றங்களுக்கு போதைக் கலாச்சாரமே காரணமாகிறது. கஞ்சா, டாஸ்மாக், ஆபாச இணையதளம் போன்றவை ஏவிவிடும் வக்கிரம்தானே இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு காரணம். அதுகுறித்து யாரும் பேசுவதாக இல்லை.
படிக்க :
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
♦ பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
ஏனெனில் இதையெல்லாம் அவர்களால் ஒழிக்க முடியாது. உள்ளூர் போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் ஒருவன் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.
அதையே சாக்காக வைத்து குற்றங்களை ஒழிக்கப் போவதாக மக்கள்மீது ஒடுக்குமுறை செய்துவருகிறது. சமூக குற்றங்களைத் தடுக்க மக்களே தங்களை அமைப்பாகிக் கொண்டு நடவடிக்கையில் இறங்குவதுதான் தீர்வு!

இளவரசி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க