ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !

முஸ்லீம், கிருத்துவ, இந்து ஆகிய எந்த மதத்தை சார்ந்த பண்டிகையாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை முஸ்லீம் மக்களை தாக்கும் புதிய நடைமுறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது காவி பாசிசக் கும்பல்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது சங் பரிவார கும்பல்.

ஜோத்பூர், ஜலோரி கேட் பகுதியில் மே 2 சுதந்திர போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ராவின் சிலை அருகில் பரசுராமன் ஜெயந்தியை முன்னிட்டு அச்சிலை அருகே காவி கொடி ஏற்றியுள்ளனர். இந்துமத அமைப்பின் கொடியை அகற்றிவிட்டதாகவும், சுதந்திர போராட்ட வீர்ர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது முஸ்லீம்கள் கொடி ஏற்றினார்கள் என்ற வதந்தியை கிளப்பிவிட்டுள்ளது சங் பரிவார கும்பல். அதனை தொடர்ந்து கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு நள்ளிரவே கல்வீச்சு சம்பவத்தில் இடுபட்டுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த மாதிரி அப்பகுதி முழுக்க கலவரமாக மாற்றிவிட்டாரகள்.

அதன்பிறகு, அப்பகுதி முழுக்க சிறப்பு ஆயுதப்படை இறக்கி தடியடி நடந்துள்ளது. மேலும் கலவரத்தை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறி இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. காவல் எல்லைக்கு உட்பட்ட 10 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இச்சம்பத்தில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க :

♦ கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !

♦ வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !

இச்சம்பவம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர், அசோக் கெலாட் இந்து முஸ்லீம் கலவரத்தை தேர்தல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு தூண்டுகிறது பாஜக. வன்முறையில் ஈடுபட்ட அனைவரின் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கல் வீச்சு நடந்த சம்பவம் அம்மாநில முதல்வரின் சொந்த ஊராகும்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சுர்ஜேவாலா, ராஜஸ்தானிலும் மற்ற தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களிலும் திட்டமிட்ட வன்முறை செயல்களில் இட்டுப்பட்டு வருகிறது பா.ஜ.க என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ரம்சான் பண்டிகயின் முன்பு உத்தரப்பிரதேச அரசு மதவாத வன்முறைகள் நடக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 37,000-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றியுள்ளது யோகி அரசு. ஒலி மாசு ஏற்படும் என்று கூறி 54,000 ஒலிப்பெருக்கிகள் சத்தத்தை குறைக்க உத்தரவிட்டு இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்களை அகற்றவிட்டால் அனுமன் சாலிசா பாடல்களை பாடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

ராமநவமி, அனுமன் ஜெயந்தியின்போது திட்டமிட்ட முஸ்லீம்கள் மீது வன்முறையை நிகழ்த்தினார்கள் காவி பாசிஸ்டுகள். ஒவ்வொரு பண்டிகையின்போது கலவரங்களை தூண்ட முயற்சிப்பதும், இந்துதுவ மதவெறியையும் திட்டமிட்டு தீரமாக பரப்பி வருகின்றது காவி கும்பல்.

தற்போது ரம்சான் பண்டிகையில் பரசுராமன் ஜெயந்தி என்று கூறி திட்டமிட்டே வன்முறை வெறியாட்டம் போட காவிக் குண்டர்கள் முயற்சி செய்துவருகின்றனர். முஸ்லீம், கிருத்துவ, இந்து ஆகிய எந்த மதத்தை சார்ந்த பண்டிகையாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை முஸ்லீம் மக்களை தாக்கும் புதிய நடைமுறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது காவி பாசிசக் கும்பல்.

படிப்படியாக முன்னேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீதியிலிறங்கி வீழ்த்தாமல் விடிவில்லை.


ராமசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க