யிலாடுதுறை தருமபுர ஆதினம் சார்பாக வருகிற 22-ம் தேதி நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமக்க திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்ததையடுத்து சட்ட ஒழுங்கை காரணம்காட்டி பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமக்க தடைவிதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவுக்கு தமிழக மக்களின் காசை வைத்து தனது உயிரையும் தொப்பையும் வளர்த்து வரும் மதுரை ஆதினங்கள் உள்பட பல்வேறு ஆதினங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் மன்னார்குடி ஜீயர் தமிழக அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என்று கூறி தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து இருந்தார். அதேபோல் பாஜக அண்ணாமலையும் ஆதின கர்த்தரை தானே சுமப்பேன் என்று கூறி தனது சூத்திர இழிவை நிலைநாட்டிக் கொண்டார்.
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தமிழக அரசுக்கு தெரிவித்து இருந்தனர். எந்த பிரச்சினையை வைத்து தமிழகத்தில் மதக்கலவரங்களை உருவாக்கலாம், எப்படி செய்தால் அதில் அரசியல் ஆதாயம் தேடலாம் என தேடிக் கொண்டிருந்த சங்கப் பரிவார அமைப்புகளுக்கு பட்டினப் பிரவேச விவகாரம் நல்லவாய்ப்பாக அமைந்தது. இந்த நிலையில் பல இந்துத்துவ அமைப்புகள் இந்துமத நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்றும், இந்துமத விவகாரங்களில் யார் தலையிட்டாலும் அதற்கு இந்து மக்கள் ஒன்று கூடி போராட வேண்டும் என்றும் கூறிவந்தன.
சங்கப் பரிவார கும்பல்களின் மிரட்டலுக்கு அடி பணிந்த திராவிட திமுக அரசு தற்போது பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் தூக்கி செல்ல அனுமதி அளித்துள்ளது. இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள முடியாமல் பல்லக்கு தூக்கி செல்ல அனுமதி அளித்து உள்ளது பெரியாரை சொந்தம் கொண்டாடும் திமுக.
படிக்க :
♦ ‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !
♦ தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்க முயற்சிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதியை முறியடிப்போம் !
உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் இந்த நிகழ்விற்கு அனுமதி கிடைத்ததையடுத்து திருவாடுதுறை ஆதீனம் பலவாறு கருத்துக்களை கூறியுள்ளது. பட்டினப் பிரவேசத்தில் மனிதரை மனிதர்கள் சுமக்கிறார்கள் என தற்போது சிலர் குறை கூறுகின்றனர் என்றும், தாய் தனது குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தைதான் தமிழகத்தின் தீவிர சங்கியும் கேடுகெட்ட பேச்சுகளுக்கு சொந்தக் காரருமான கிஷோர் கே சாமியும் கூறி இருந்தார். அது சரி சங்கிகளின் இழிவான குரல்கள் ஒன்றாக தானே இருக்கும் என்று நாம் அதை கடந்து விட முடியாது. அவர்களின் கேடுகெட்ட செயலுக்கும் பேச்சுகளுக்கு இங்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில் தனது செயல்பாடுகளை தீவிரபடுத்தி வருகின்றனர்.
மேலும் திருவாடுதுறை ஆதினம், சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்தார் என்று கூறும்போது சிவனே மண் சுமக்கும் போது சிவனுக்கு மேலான பார்ப்பன மற்றும் ஆதின கர்த்தர்களை மனிதர்கள் சுமப்பது தவறல்ல என்ற அர்த்தத்தில் கூறி தமிழர்களை இழிபடுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
பல்லக்கில் ஆதின கர்த்தரை சுமப்பது என்பது காலம் காலமாக நடைபெறும் வழக்கம் என்பதால் அதில் அரசு தலையிட கூடாது என்று மதுரை ஆதினம் கூறியுள்ளது. அவ்வாறு வைத்துக்கொண்டால் ஆதினங்கள் மக்களிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவதுதான் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். அந்த வழக்கத்தை காப்பாற்ற தமிழக மக்களின் வீடுகளுக்கோ அல்லது தெருத்தெருவாகவோ பிச்சை எடுத்துதான் ஆதினங்கள் சாப்பிட வேண்டும்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. உழைக்கும் மக்களின் மீதான ஆதிக்கத்தை எது எல்லாம் காக்கிறதோ அதை எல்லாம் தொடர்ந்து காத்து வரும் இந்த ஆதினங்கள் தனது சுகபோக வாழ்வுக்கு எது எல்லாம் தடையாக இருக்கிறதோ அதை எல்லாம் தூக்கி எறிந்து விடுகின்றனர். மதங்கள் மக்களை ஒடுக்க மட்டும்தான் என்பதை மக்களுக்கும் உணர்த்து வேலையை தீவிரமாக செய்தால் தான் இவர்களை ஓட ஓட அடிக்க முடியும் என்பது நிதர்சனம்.
பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதியளித்ததையடுத்து தமிழக அரசு ஆன்மிக அரசு என்று நிரூபித்துள்ளது என தருமபுர ஆதினம் கூறியுள்ளது. ஆம்.. பா.ஜ.க தமிழகத்தை ஆட்சி செய்தால் ஆதின விவகாரத்தில் எந்த முடிவை எடுத்து இருக்குமோ அதைத்தான் திராவிட திமுக அரசு தற்போது எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஆன்மிக அரசாகதான் இந்த தமிழக அரசு உள்ளது.
தமிழக அரசிற்கும், அமைச்சர்களுக்கும் மிரட்டல் விடுத்த மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்காத இந்த திமுக, பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளித்தது என்பது தமிழகத்தில் பா.ஜ.க நுழைவதை தடுத்து அவர்கள் செய்யும் வேலையை தங்கள் வேலை என கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
படிக்க :
♦ எமது இதழை சொந்தம் கொண்டாடுகிற, சீர்குலைவு சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அனுமதி என்பது இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் வெற்றியை பெற்றுள்ளன என்பதையை காட்டுகின்றன. ஏற்கனவே மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு முட்டுகட்டை போட்டன பார்ப்பனர்கள். அயோத்திய மண்டப விவகாரத்திலும் பார்ப்பனர்களின் எதிர்ப்புகளுக்கு பணிந்தது தமிழக அரசு. தற்போது தருமபுர ஆதின விவகாரத்திலும் சங்கிளின் மிரட்டலுக்கு பயந்து சரணடைந்து விட்டது திராவிட திமுக அரசு.
பட்டினப் பிரவேச நிகழ்வு நடக்கும் மே 22 அன்று முற்போக்கு அமைப்புகள் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி இருக்கும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்து இருந்தால். ஆனால் தமிழக அரசே அனுமதி அளித்துள்ளதையடுத்து இனி போராட்டம் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது. நம்மை ஆளும் இந்த பிளைப்புவாத ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளால் இங்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது, தீவிரமான மக்கள் திரல் போராட்டங்களை கட்டியமைக்காதவரை.
பட்டினப் பிரவேச விவகாரத்தில் சங்கிகளின் எதிர்ப்புகளுக்கு பயந்து அவர்களிடம் சரணடைந்த இந்த திராவிட திமுகதான் தமிழகத்தில் பாசிசத்தை தடுத்து நிறுத்தும் என்று பல அமைப்புகள் கூறியது அதன்பின் சென்றது. மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்குவதை தடுக்க முடியாத இந்த விடியல் அரசுதான் பாசிசத்தை தடுக்குமா என்ன..!
பட்டினப் பிரவேச நிகழ்வை பொருத்தவரை தமிழக அரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது, “பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாம்” என்பதுதான்.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க