‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !

திராவிட கொள்கை பேசும் திமுக, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பல்லக்கில் சுமக்க விதிக்கப்பட்ட தடை (நாங்கள் எடுத்த முடிவு) சரியானதுதான் என ஆணித்தனமாக கூற திராணியற்று இருக்கிறது.

0
யிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் தருமபுர ஆதினமாக யார் இருகிறார்களோ அவர்களை மனிதனர்கள் ஒரு அடிமைபோல் பல்லக்கில் தூக்கி செல்லும் ஒரு இழிசெயல் ஆண்டுதோறும் நடைபெருகிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதேபோல் கடந்த ஆண்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் தூக்கி சென்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தருமபுர பட்டின பிரவேச நிகழ்வு வருகிற மே 22-ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லக் கூடாது என்றும், மனிதர்களை மனிதர்கள் சுமப்பது என்பது மனித உரிமை மீறல் என்றும் எனவே இந்த பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதிக்க வேண்டும், அவ்வாறு தடை விதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகம் உட்பட பல்வேறு திராவிட, இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுருந்தார்.
படிக்க :
கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !
கோட்டாட்சியரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுமட்டுமில்லாமல் தமிழக அரசை மிரட்டும் தொனியுலும் பேசி வருகின்றனர். பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக் கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை இந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது. இந்து தருமத்துக்கு எதிரான துரோகிகளை தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சாலையில் நடமாட முடியாது என்று தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பூநூல் போட்ட மன்னார்குடி ஜீயர் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆளும்கட்சியாக தி.மு.க.வினர் இந்த மிரட்டலுக்கு அடக்கி வாசிக்கின்றனர். ஒரு வேலை பூநூல் தனது கழுத்தை அறுத்துவிடும் என்ற பயமோ தெரியவில்லை.
இதேபோல் மதுரை ஆதினம், உயிரே போனாலும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம் என்றும் நானே பல்லக்கை எனது தோளில் சுமப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால், அரசின் தடையை மீறி பாஜக பட்டினப் பிரவேசத்தை முன்நின்று நடத்தும். நானும் அங்கே சென்று பல்லக்கை சுமக்க தயாராக இருக்கின்றேன் என்றும் கூறி தனது அடிமை புத்தியை சொறிந்து கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.
சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26-ன் படி வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தடை விதிக்க முடியாது. எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் ஜி.கே.மணி, பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் சட்ட மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுர ஆதினத்துடன் தமிழக முதல்வர் பேசி சரியான முடிவை எடுப்பார் என்றும் இந்த விவகாரத்தில் தி.மு.க.வை இந்து விரோத கட்சி என்று முத்திரை குத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினார். திராவிட கொள்கை பேசும் திமுக தன்னை பெரியாரின் வாரிசாக காட்டிகொள்ளும் இந்த திமுக ஆணித்தனமாக நாங்கள் எடுத்த முடிவு சரிதான் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பல்லக்கில் சுமக்கும் விதிக்கப்பட்ட தடை சரியானதுதான் எனக் கூற திராணியற்று இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இந்த விவகாரத்தில் சங்கிகளின் சத்தம் அதிகமாக இருப்பதைவிட அவர்களின் அடிமைகளின் கூப்பாடும் அதிகமாக இருக்கிறது.
சமுகநிதி ஆட்சி என்று சொல்லும் திமுக ஆதினங்களின் திமிரிதனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும், மன்னார்குடி ஜீயரின் திமீர் தனமான மிரட்டல் பேச்சுக்கு திமுக நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்ன? ஆதினங்களின் திமிர்தனங்களை உழைக்கும் மக்கள் வர்க்கமாக அணித்திரண்டு முறியடிப்பதை தவிர வேறென்ன தீர்வாக இருக்க முடியும்.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க