Tuesday, June 25, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

-

லங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.

ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.

நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எல்லா ஆணாதிக்கப் பன்றிகளின் வாயிலிருந்தும் வருகின்ற வழக்கமான டயலாக் இது. ரிசானா நடத்தை கெட்டவளாவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஷேக்கின் துணையாவது தேவை என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெரியாதா? அந்த ஷேக்கை கண்டு பிடித்து தண்டித்து விட்டார்களா? இத்தகைய குற்றம் செய்யும் ஆண்மகனுடைய உறுப்பை, எதைக் கொண்டு அறுப்பது என்று ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது “குருதிப்பணம்” மாதிரி ஏதாவது அபராதம் கட்டிவிட்டு அத்தகைய மைனர் குஞ்சுகள் எஸ்கேப் ஆவதற்கு இறைவன் தன்னுடைய சட்டத்தில் வழி செய்து கொடுத்திருக்கிறானா?

தங்கள் மதத்தையே சார்ந்த பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனை  ரகமதுல்லாக்களும் ஜெயினுலாபுதீன்களும் இப்படிக் குதறுவதற்கு காரணம், அவள் ஒரு பெண், அதுவும் ஏழைப்பெண், இலங்கை என்ற ஏழை நாட்டைச் சேர்ந்த ஏழை தமிழ்ப் பெண். இவர்களோ, சவூதி ஷேக்குகளின் பங்களா நாய்கள்.

ரிசானா நபீக்கை தமிழ் சீரியலில் வரும் வில்லி ரேஞ்சுக்கு சித்தரித்து, மொழி தெரியாத நாட்டில் தெற்கு வடக்கு அறியாத ஊரில்  பயங்கரமாகத் திட்டம் தீட்டி குழந்தையைக் கொன்ற கொலையாளி என்பதாக விவரித்து முழங்கிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா, ரிசானாவுக்கு அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்ற மிகச் சாதாரணமான கேள்விக்கு கூட கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கடமை ஷரியத் சட்டங்களின் படி யாருக்கு உள்ளது, வேலைக்காரிக்கா? பணக்காரப் பெண்களின் கடமைகள் என்ன, ஏழைப்பெண்களின் கடமைகள் என்ன என்று ஷரியத் சட்டத்தில் அல்லா தனித்தனியாக பிரித்து எழுதியிருக்கிறானா? எல்லாப் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான் என்றால், பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத தாயை அல்லவா முதலில் விசாரிக்க வேண்டும்? 3 மாதக் குழந்தைக்கு பால் கொடுப்பதற்குக் கூட ஆள் வைத்து விட்டு, ஷேக்கின் பொண்டாட்டி எங்கே போயிருந்தார்? பியூட்டி பார்லருக்கா, தொழுகை நடத்தவா?

ஆண்களின் துணையின்றி ரோட்டில் நடந்தாலே சாட்டையால் அடிக்கும் தலிபான்களை நியாயப்படுத்துகின்ற இந்த தமிழக தலிபான்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண் துணையின்றி ஏழைப் பெண்களை இறக்குமதி செய்கிறார்களே வளைகுடா ஷேக்குகள், அவர்களுக்கு ஷரியத் கூறும் தண்டனை என்ன என்று தெரிவிக்கவில்லை. இப்படி பெண்களை இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்யும் டிராவல் ஏஜென்சி முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை என்றும் கூறவில்லை.

ஒருவேளை, ஷரியத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், (பெண்களை ஆண் துணையின்றி தனியாக வரவழைக்க கூடாது) என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் 70 வயது ஷேக்குகள் 13 வயது சிறுமிகளை இந்தியாவிலிருந்து நிக்கா செய்து அழைத்துப் போகிறார்களோ?

கடுகளவாவது நேர்மையோ சொரணையோ இருந்தால், இவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை ரிசானா தான் கொலையாளி என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உறுதிப் படுத்தியுள்ளதாகச் சொன்ன ரஹ்மத்துல்லா, கடைசி வரை அதன் அறிக்கையின் நகலை கூட்டத்தில் படித்துக் காட்டவே இல்லை. அதிருக்கட்டும். பிரேதப் பரிசோதனை என்கிற பெயரில் இறந்த உடலைக் கிழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர். உயிரோடிருப்பவர்களை வெட்டித்தான் கொல்லவேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கும் இறைவன், பிணங்களை அறுப்பது, தைப்பது, ஆடோப்சி ரிப்போர்ட் எழுதுவது ஆகியவை பற்றி எதுவும் சொல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அல்லா பிறப்பித்திருக்கும் ஆணைகளையும் ரகமதுல்லாக்கள் விளக்குவது நல்லது.

அடுத்து இஸ்லாத்தை அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இழிவாகச் சித்தரிக்கிறார்கள் என்றும், இதை அந்த அல்லாவே முன்னின்று முறியடிக்கிறாரென்றும் பேசத் துவங்கினார் ரஹ்மத்துல்லா. அமெரிக்கா நடத்திய ‘ஆய்வு’ ஒன்றின் படி தற்போது உலகில் 175 கோடி(!?) முசுலீம்கள் இருப்பதாக சொன்னார்.

இஸ்லாமியர்களில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகை 150 கோடி என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. வகாபி தீவிரவாதிகளின் கருத்துப்படி ஷியாக்கள், அகமதியாக்கள் மற்றும் சுஃபி மார்க்கத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள். அந்த வகையில் அளவற்ற அருளாளனான அல்லாவின் திருக்கருணையால் எப்படியும் இவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பதால், இவர்களின் எண்ணிக்கையை மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்து கழித்திருக்க வேண்டும்.

ஆனால் ரஹ்மத்துல்லாவோ, இன்னும் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 350 கோடிகளாக உயரும் என்று சொல்ல, கூட்டம் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. நமக்கோ முல்லா ஜோக் நினைவுக்கு வந்தது.

இந்தியாவில் இன்றைக்கு சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றத்தின் மூலமும் பிள்ளை பெற்றுத் தள்ளுவதன் மூலமும் சீக்கிரம் பெரும்பான்மை பலம் பெற்றுவிடுவார்கள் என்பதே இந்து முன்னணி ராம கோபாலன்ஜீக்கள் காட்டும் பூச்சாண்டி.

இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா.

தொடர்ந்து பேசிய ரஹ்மத்துல்லா, “இஸ்லாத்தை தவறாகச் சித்தரிப்பவர்களின் வாயிலிருந்தே அல்லா இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் ‘மேன்மையைப்’ பற்றிப் பேச வைக்கிறான்” என்று சொல்லி அதற்கு சில சான்றுகளையும் கூறினார்.  “பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமியப் பெண்கள் போன்று பர்தா அணிவது மேலானது” என்று மதுரை ஆதினம் அருணகிரி சொன்னாராம். இதைச் சொன்னவுடன் நமக்கு குமட்டிக்கொண்டு வந்தாலும் கூடியிருந்த கூட்டம், அல்லாஹு அக்பர் என்று சொல்லி புல்லரித்தது.

நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!

பாரதிய ஜனதா கட்சி, பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் கண்ணியமான உடை உடுத்த வேண்டும் என்று கூறியது கூட அல்லாவின் பவர்தான் என்றார் ரஹ்மத்துல்லா. 2002 இல் குஜராத்தில் பர்தா போட்ட இஸ்லாமியப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார்களே, அங்கே அல்லாவின் பவர் “கட்”டாகி விட்டதா, ஷட் டவுனா என்று கூறவில்லை.

ரஹ்மத்துல்லா பேசிய உரையில் வரிக்கு வரி தவறான தகவல்களும் வெற்றுச் சவடால்களுமே நிறைந்திருந்தன.  “25 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வருட்த்திற்கு 24 கொலைகளும் 13 கற்பழிப்புகளுமே நடக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் .0001 சதவீதம் தான்” என்றார் ரஹ்மத்துல்லா. அதிகாரப்பூர்வமாக சவுதி வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் படியே அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி தான். இதில் சவுதி தேசத்தவர் வெறும் 1.8 கோடியினர் தான்; மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 84 லட்சம். கூடவே ஷரியத் அமுல்படுத்தப்பட்டும் குற்றங்களின் சதவீதம் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்பதற்காகவே குற்றங்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவதை 2011-ம் ஆண்டு முதலாக சவுதி அரசாங்கம் நிறுத்தியும் வைத்துள்ளது.

இத்தகைய பொய்களையெல்லாம் ‘எதிரி’களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டாவது இஸ்லாத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது போலும். அதுதான் அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் கரை புரண்ட வெள்ளம் போல பேச வைக்கிறது.

தொடர்ந்து சவுதியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியச் சட்டங்களின் படி யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்து விடுவார்கள் என்ற ரஹ்மத்துல்லா, அப்படிக் குற்றங்களில் ஈடுபட்டது சவுதி இளவரசன் குடும்பமாக இருந்தாலும், உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சீவிப்புடுவோம் சீவி என்றார் (இதற்கும் ஒரு அல்லாஹு அக்பர்).

ஆனால் இலட்சக் கணக்கான இராக், ஆப்கான் குழந்தைகளையும் மக்களையும் காவு வாங்கிய அமெரிக்க ஏவுகணைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்க சிப்பாய்களுக்குத் தேவையான “மேற்படி” ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரின் தலைகளை எந்த சீப்பை வைத்து தவ்ஹீத் காரர்கள் சீவிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது அல்லா சீவ இருக்கிறார் என்றோ ரஹ்மத்துல்லா சொல்லவில்லை.

பெண்களை பர்தா போட்டு மூடியோ, கல்லால் அடித்தோ, ஆண்களின் தலையை சீவியோ, சாட்டையால் அடித்தோ தான் சவூதி போன்ற நாடுகளில் பெண்களின் கற்பு காப்பாற்றப்படுகிறது என்றால், அப்பேர்ப்பட்ட நாட்டு ஆண்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று ரஹமத்துல்லா சிந்தித்துப் பார்க்கவில்லை. சாட்டையோ வாளோ கிடைக்காமல் போனால், அந்த நாட்டுப் பெண்களின் நிலை என்ன என்பதையும் அவர் சிந்திக்கவில்லை போலும்.

அடுத்து ரிசானா விவகாரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை விமரிசித்து எழுதிய ஜோசபின் பாபா எனும் பத்திரிகையாளரைக் குறித்துப் பேசிய ரஹ்மத்துல்லா,  அவர் கிருஸ்தவராகப் பிறந்த காரணத்தால் தான் இவ்வாறு எழுதி இருக்கிறார் என்றார். மேலும், கிருஸ்தவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா உங்கள் மதப் புத்தகமே ஆபாசக் குப்பை தானே என்றும் அதற்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து கதை ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசினார் (இதற்கும் கூட்டத்திலிருந்து ஒரு அல்லா ஹு அக்பர்).

ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்

ரஹ்மத்துல்லாவைத் தொடர்ந்து பீ.ஜே விஸ்வரூபம் விவகாரம் பற்றிப் பேசத் துவங்கினார் ஜெயினுலாபுதீன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டுமென்று பத்திரிகைகளில்  எழுதப்படுவது குறித்தும், சினிமாத்துறையினரும் அதே வகையில் கருத்துத் தெரிவித்து வருவதையும் விமர்சிக்கத் துவங்கிய பீ.ஜே,  திரைத் துறையினரைப் பற்றியும் பத்திரிகைகள் பற்றியும் நாலாந்தர மொழியில் வசைபாடத் துவங்கினார்.

பீ.ஜேவின் வாதத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு  எதிரானது என்பதை நிறுவும் நோக்கத்தை விட,  டைம்பாஸ் ரகத்திலான படுக்கையறைக் கிசு கிசுக்கள் மற்றும் புவனேசுவரியின் சாகசங்கள், நடிகையின் கதை போன்றவையே அதிகம் இடம் பெற்றிருந்தன. உள் விவரங்களுடன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். இவரை இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்று சொல்கிறார்கள். ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.

பாரதிராஜா வீட்டினர் விபச்சாரிகளா என்று தனது வசைபாடலைத் துவங்கிய பீஜே, ஒவ்வொரு நடிகர் நடிகைகளின்  படுக்கையறையாகப் புகுந்து புறப்படத் துவங்கினார். உச்சகட்டமாக, ஸ்ருதி ஹாசனையும் கமல்ஹாசனையும் பாலியல் ரீதியில் கீழ்த்தரமான முறையில் இணைத்துப் பேசிய போது கூட்டம் புல்லரித்துப் போனது. தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசும்போது, உடன்பிறப்புகள் விசில் அடிப்பார்கள். இது தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் என்பதால், விசிலுக்குப் பதிலாக ‘அல்லாஹு அக்பர்’  என்று கூட்டம் முழங்கியது. சும்மா சொல்லக் கூடாது, இறைவன் மிகமிகப் பெரியவன்தான்!

பீ.ஜேவின் பேச்சு இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும்.

விஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.

“நம்ம சார்பில் பி.ஜே பாய், பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் எதற்கு தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணவேண்டும்?” என்று ராம கோபாலன்ஜி மைக்கை ஆஃப் பண்ணியிருப்பார்.

000

குறிப்பு:

ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சவூதியில் நடந்த ரிசானா கொலையை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கு கண்டிக்கின்றன. தற்போது, விஸ்வரூபம் பிரச்சினையை ஒட்டி, அம்மாவின் ஆதரவும் மாநில அரசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால், மதச்சார்பற்ற சக்திகள் தங்களை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் கருதுவதையே அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் காட்டுகின்றன. சாதாரண முஸ்லிம் மக்களைத் தற்கொலைப் பாதைக்குள் இவர்கள் தள்ளி விடுகிறார்கள், என்று எச்சரிப்பது எங்கள் கடமை.

 1. எல்லா கீழ்த்தரமான பேச்சுக்க்ளையும் நானும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன், இந்த விசுவரூபம் பிரச்ச்னையில் மிகவும் கீழ்த்தரமானது கமலகாசனையும், ஸ்ருதியையும்(மகள்) இணைத்துப்பேசியது..கொடுமையின் உச்சம்..

 2. ஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.//

  மீன் பிடிக்கக் காத்திருப்பது காக்கி டவுசர்கள் அல்ல…னீர் தாம், அவர்கள் சும்மா இருந்தாலும் உமக்கு பிரச்சனையே

 3. again a nice article from you.

  But still i feel these muslim supporter will not understand this. they will blame you. they always try to defend the mistakes in their side.

  some people started understanding the back ground work played by current government. and they are slowing down their aggression.

  Recent news shows JJ also understood people got awareness about her play and she started vomitting the Play Script to the news media and asking KAAmal and Muslim leaders to discuss and come to a conclusion. (hope this drama get ends here). Here after we can see statements from Hinduthuvas.

 4. கமல் மீது அந்தமாவுக்கு என்னென்ன கோபம் என்று பலமுறை, பல சேனல்களில் விவாதித்தாயிற்று…இப்போது பிரச்சனை என்னவென்றால், தமிழக அரசு ஆதரிக்கிறதென்று, வாய் போன போக்கில் வாரத்தைகளை விட்டுக் கொண்டே போனால் அது இஸ்லாமியர்கள் மீது பொது மக்களுக்கு ஒரு வெறுப்புண்ர்வு வரக்கூடும்.
  இந்து அமைப்புகள் கமலினை அதாரிக்காததற்க்கு ஒரே காரணம்

  கமல் எண்ணிப்பார்க்கக்கூடிய அளவு தான் இஸ்லாமியர்களை வம்பிழுத்திருக்கிறார்….

  எண்ணிக்கையே இல்லாத அளவிற்க்கு இந்துக்களினை தன் படங்களில் வம்பிழுத்திருக்கிறார்….

  • //////////

   கமல் எண்ணிப்பார்க்கக்கூடிய அளவு தான் இஸ்லாமியர்களை வம்பிழுத்திருக்கிறார்….

   எண்ணிக்கையே இல்லாத அளவிற்க்கு இந்துக்களினை தன் படங்களில் வம்பிழுத்திருக்கிறார்….

   //////////

   hahaha, liked it.

 5. அந்தக் அறுவெறுப்பான கூட்டத்தினைப் பற்றி விளக்கும் நல்ல பதிவு.

 6. ஆகா என்ன அருமை ஒரு இயக்கத்தை பற்றியும் ஒரு தனி நபரை பற்றியும் இவ்வளவு கீழ்த்தரமாக எழுத எப்படி முடிகிறது? நடு நிலையாளர் போர்வையில் உள்ள காவி பயங்கரவாதி பீ ஜெயினுலாப்தீன் ஒன்னரை மணி நேரங்கள் பேசிய பேச்சில் குறை சொல்ல முற்பட்டு இதற்கும் ரிசானா தண்டனைக்கே அதிக நேரம் கட்டுரை எழுதியதிளிருந்தே உங்கள் நேர்மை புரிகிறது பாரதி ராஜாவை பற்றி அவர் ஏன் பேசினார் பாரதி ராஜா பேசியது சரியா? கருத்து சுதந்திரம் பற்றி பேசும் அயோக்கியர்களை ப்பற்றி எழுத உங்களுக்கு துணிவில்லை இரட்டை வேடம் போடும் கருத்து சுதந்திர வாதிகளிக்கு ஆதரவாக எழுத எப்படி உங்களுக்கு மனம் வருகின்றது? கமலையும் கமல் மகளைப்பற்றியும் அவதூறாக ஒன்னும் சொல்ல வில்லையே? கமலைப்பற்றி அவரது மகளும் மகளைப்பற்றி கமழும் சொன்னதைத்தான் சொன்னார் இதில் என்ன தவறு இருக்கிறது?

  • 99% of vinavu’s article will be bashing RSS, Hindutva (I too agree with vinavu). But when it comes to Islam, you expect vinavu to support whatever it does. You do not have a mentality to accept the criticism. That is why you refer vinavu as Kavi Bayangaravadhi. What the **** do you know about vinavu? Should they always back you. Is that what is your expectation? They are not a muslim organisation. First of all understand that. They are rationalists. They bash every God and every religion. You were enjoying when vinavu is bashing RSS and hindutva. But you became very sensitive when it comes to your religion!! YOU FOOL!! Can you atleast justify 1% of the speech made by PJ?

  • // பாரதி ராஜாவை பற்றி அவர் ஏன் பேசினார் பாரதி ராஜா பேசியது சரியா?… //

   இதற்கு பதில் பதிவிலேயே இருக்கிறது :

   // அவருடைய (PJ-ன்) பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும். //

   அண்ணன் PJ தன் நாவன்மையால் தமிழகம் முழுவதையும் காக்கி டவுசர், கருப்புத் தொப்பிகளால் ரொப்பி விடுவார் போலிருக்கிறதே பாய்…

 7. இந்தப்பதிவில் வைக்கப்பட்டுள்ள தர்க்க வாதங்களுக்கு அந்த அல்லாவே வந்தால்கூட வாய்மூடித்தான் ஆக வேண்டும்.

  இதே பாணியில்தான் இந்து மதவெறியர்களையும் வினவு அம்பலப்படுத்தி வந்துள்ளது.

  மிகச் சிறந்த பதிவு.வாழ்த்துகள்!

 8. “”இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா””

  ஒரே விசயத்தை ராமகோபாலன் சொன்னால் அது நச்சு பிரச்சாரம் தவ்ஹீத் சொன்னால் சொந்த சரக்கு அமெரிக்கா சொன்னால் அது ஆய்வறிக்கை என்று தாஸ் கேபிடல் சொல்கிறதா.

  மற்ற படி வினவு சொல்வது சரியே

 9. இஸ்லாத்தினை புண்படுத்திதான் நிங்கள் இணையத்தளம் நடத்தி உங்கள் வயிறுகளை வளர்க்க வேண்டுமென்ற கட்டாயம் என்னவென்று தெரியவில்லை.

  ரிஷானா என்ற ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்கும் மக்கள், காவிகள் குஜராத்தில் கர்பிணி வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து அந்த பெண்ணிண் வயிற்றில் வெடி பொருட்களை நிரப்பி வெடிக்க வைத்து துடிதுடிக்க வைத்த கொடூரங்களை எதிர்க்க முன் வரவில்லை.

  அப்பாவி பெண் இர்ஸாத், முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லி எண்கவுண்டர் செய்த போது மக்கள் குரல் கொடுக்கவில்லை.

  பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஆயிஷா என்ற பெண் பலமுறை நீதிமன்றங்கள் ஏரியும் தீர்ப்பு தள்ளிக் கொண்டு போகிறது, ஆர்.எஸ்.எஸ், வகையறாக்களின் கடுமையான மிரட்டலுக்கு பயந்து கேஸை வாபஸ் வாங்கினார், அதனை வெளியிட ஊடகம் தயாராக இல்லை.

  புர்கா அணிந்த பெண்களை எல்லாம், ஆயிஷா என்ற தீவிரவாதியை சோதிப்பதாக சொல்லி மன உளைச்சலை தந்த போதெல்லம் யாருக்கும் கண் இல்லை போல

  விசாரனை கைதிகளாகவே தமிழ்நாட்டில் சிறைக்கைதிகளாக அப்பாவி இளைஞ்சர்கள் பல ஆண்டுகளாக அழைகழிக்கப் படுகிறார்கள் இதை எழுத துப்பில்லை

  ரிஷானா என்ற பெண்மணிக்காக இப்போது வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது.

  பிஜே என்ற மதவெறி கும்பல், சகோதரரே! உண்மையிலேயே அவர் மதவெறியை போதிக்கும் தலைவனாக இருந்திருந்தால் அவரைப் பற்றி தவறாக எழுதிய முதல் பதிப்பிலேயே நீங்கள் பரலோகம் சென்றிருப்பீர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர். ஆனால் நாங்கள் இப்போதும் தங்களுக்கு கண்ணியம் தவறாமல் கருத்துக்களை சொல்வதிலிருந்து அவர் நடத்துவது சிவசேனா போன்ற பாசறை அல்ல, பண்பாட்டினை போதிக்கும் பாடசாலை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

  பொதுவாக பத்திரிக்கை துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள்தான் பொறுமையை போதிப்பார்கள், மாறாக வாசகர்களாகிய நாங்கள் போதிக்கிறோம் உணர்ச்சிவச படாதீர்கள்.

  தவறு செய்பவரை தண்டிக்காமல் விட்டதன் விளைவுதான், காரைக்கால் வினோதினிக்கு நடந்தது போல் இன்று இன்னொரு பெண்ணுக்கு சென்னையில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது, அன்றே வினோதினி மீது ஆசிட் வீசிய கள்வனுக்கு தண்டனை கொடுத்திருந்தால் அதனை பார்த்து பயத்தில் அடுத்தவன் செய்ய தயங்குவான், இது நீதியா ?

  அல்லது டெல்லி பெண் விவகாரத்தில் குற்றவாளிகளை வயது காரணம் சொல்லி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பதும், மற்ற குற்றவாளிகளை அரசு செலவில் கவுரவிப்பதும் முறையா ? தகப்பனின் குமுறலை கண்டுகொள்ளாத சட்டம்.

  மன்னர் குஞ்சுகளை பணம் வாங்கிக் கொண்டு விடுவதுக்கு சரீஅத் சட்டம் கேட்கிறீர்கள் :

  முன்னால் ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி ராஜ்பவனில் பெண்களுடன் காம ஆட்டம் ஆடியதை வீடியோ ஆதாரத்துடன் காட்டியும் சட்டம் என்ன செய்தது, சட்ட மன்றங்களில் புளூ ஃபிலிம் பார்த்த சட்டமன்ற உறுப்பினர்களை என்ன செய்தது.
  இயற்கைக்கு மாறாக உறவு கொண்டு கொல்லப்பட்ட சண்டிகார் முதலமைச்சரின் காதலி விஷயத்தில் அந்த முதலமைச்சரை என்ன செய்தது.

  ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ஷரீஅத் காரணத்தினால் நடு ரோட்டில் தூகில் போட்டும், தலை வெட்டு தண்டனையும் கொடுப்பதால் , இந்திய பெண்களும் தைரியமாக வெளியில் நள்ளிரவிலும் வெளியே செல்கிறார்கள் வேண்டுமென்றால் துபார், கத்தார், சவூதியில் வசிக்கும் இந்து குடும்பங்களை கேட்டுப் பாருங்கள், கிணற்று தவளையாக நீங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு உளரவேண்டாம்.

  கவுகாத்தியில் ஒரு பெண் பல ஆண்களினால் அலைகழிக்கப்பட்ட போது பெண்ணுரிமை எங்கே போனது, சம்பவம் நடந்த 2 நாட்களுகு அது தலைப்பு செய்தி பிறகு சாவுமணி தான்.

  ரிஷானா மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் ரஹ்மத்துல்லாஹ் வாசிக்கவே இல்லை. ரிஷானா சம்மந்தமாக மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் அந்த நாட்டின் எம்பசி சவூதி எம்பஸியுனுடன் பேசினால்தான் கிடைக்கும், இது ஒவ்வொரு வெளி நாட்டிலும் நடக்கும் நடப்பு. இந்த மாதிரி பிரச்சினைகளுக்காகத்தான் அந்த அந்த நாடுகளிம் தூதரகம் நிறுவப்படுகிறது. உங்களுக்கு தமிழ் நாட்டில் அரசு மருத்துவ மனையில் பேசி வாங்குவது போல் எந்த நாட்டிலும் 10 அல்லது 20 கொடுத்து எல்லாம் வாங்க முடியாது, திரும்பவும் சொல்கிறேன் வெளிநாடு போனவர்களை கேட்டுப் பாருங்கள், கிணற்று தவளையாக நீங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு உளரவேண்டாம்.

  அறுப்பது, தைப்பது பற்றி குர்ஆனில் சொல்ல வாய்ப்பிப்லை : எங்கள் உயிரிலும் மேலான வேதத்தை நீங்கள் கேலி செய்தும் நாங்கள் அமைதியாக பேசுவதிலிந்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் உணர்ச்சிவசத்தையும் , எங்கள் தலைவர்கள் போதித்த பொருமையினயும்.

  இஸ்லாமியர்கள் பெரும்பாண்மையினராக இருப்பது பற்றி ரஹ்மத்துல்லாஹ் சொல்லவில்லை, போன வருடம் செப்டம்பரில் போப் ஆண்டவர் வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய கணக்குப்படி முஸ்லிம்களே உலகத்தில் அதிகம், கிருஸ்தவர்களைக் காட்டிலும் 3 கோடி அதிகம் என்ற அறிவிப்பை தட்ஸ்தமிழ் மற்றும் பிற இணையத்தளங்களில் நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் உங்கள் இணையத்தளாத்தை மட்டும் பார்வையிடால் போதாது ஏனென்றால், இதனை பார்ப்பவர்கள் மொத்தத்திற்கு 100 பேர் இருப்பதே கஷ்டம்.

  பெண்களை மூடி வைத்திருக்கிறார்கள் என்றால் அங்குள்ள ஆங்களை பற்றி என்ன சொல்வது, திறந்த மேனியாக அழையும் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார தாக்கத்தினால் இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை இரவு பார்ட்டிகளில் கற்பு படு சீப்பாக விலை போவதை தாங்கள் ஆதரிப்பதால், பர்தா கேலியாகத்தான் தோன்றும், அவையெல்லாம் ஒழுக்கம் என்பதை உணர்ந்த இந்திய மக்களுக்கு தெரியும்.

  ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.பிஜே : தமிழகமே தெரிந்து கொள்ளும் அளவிற்கு நாறிய ஒரு விஷயத்தை இவர் தெரிந்து வைத்திருப்பது வியப்பாக எழுதியுள்ளீர்கள், உங்கள் கருத்திற்கு வழு சேர்க்க இப்படி செய்தால்தான் வியாபாரம் ஆகு, என்ன செய்வது உயிர விட மானம் பெரிது மனசுக்கு தெரியும் வயிறு கேட்குமா ? பிச்சை எடுப்பது கவுரவக் குரச்சல் இப்படி செய்தாவது உங்கள் வயிற்றை கழுவுங்கள்.

  இதில் இறுதியாக விளக்கம் : முஸ்லிம்களை தற்கொலைக்கு தள்ளும் வேலையை தடுக்கிறோமே என்று. முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும், மாட்டை பிடித்து மரத்தில் கட்டும் பழமொழிக் கதைகளை வேறு எங்காவது சொல்லவும்.

  100 கோடி பட்ஜெட் படம் முடங்குவது தேச ஒற்றுமைக்கு குந்தகம், கருத்து சுதந்திர பறிப்பு, ஜனநாயக விரோத நடவடிக்கை, இங்கு கருத்து எழுதும் மக்கலுக்கு 4500 கோடி பணத்தை சேது சமுத்திர திட்டதில் போட்டதற்கு பிறகு நிறுத்திய செயல் தேச நலன் காக்கும் செயலா ? அல்லது ஒற்றுமையை ஓங்கச் செய்யும் விஷயமா ?

  வினவு என்ற பெயரில் இஸ்லாமிய கொள்கைகள் மீது விசத்தை, எந்த அளவிற்கு கேவலமாக பேச முடியுமோ அந்த அளாவிற்கு பேசும் ஆசிரியரே! வன்முறையை போதிக்கவில்லை, அதனால் நாங்கள் ஆத்திரப்படவில்லை, இதே நீங்கள் சிவசேனாவை பற்றி எழுதியிருந்தால் உங்கள் குடும்பமே உலகை விட்டு பிரிந்து நாட்கள் ஆகியிருக்கும். ஆனால், எந்த அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அடைப்புக்குறி போட்டு நகைதீர்களோ அதே அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம், இறைவன் நாடினால் (மறுமையில்) நியாயத் தீர்ப்பு நாளில் சந்திப்போம், எங்கள் மனங்களிள் ஏற்பட்ட ரணம் ஆறாது,

  • அந்தக் கூட்டத்தின் ரஹ்மத்துல்லா மற்றும் பீஜேவின் பேச்சுக்கள்தான் இஸ்லாத்தின் அடையாளம் என்றால் மன்னிக்கவும் நீங்களும் ஏன் காபிராக இருக்கக்கூடாது?

   • சகோதரர் அபுபக்கரே! ஆசிரியரின் தவறான இஸ்லாமிய புரிதல்குக்கான கருத்துக்களுக்கே நான் பதி கூறினேன். எனது 2 கருத்துக்களையும் பார்த்து விட்டு பேசுங்கள், நான் காஃபிரா ? இல்லையா ? இறைவன் அறிவான்.

  • இந்த தளத்த இப்பத்தான் பாக்கிறீங்களா இல்லை இதுவரை இந்த தளத்தில் எதையும் படிக்காம இதை மட்டும் படித்துவிட்டு கருத்து சொல்றீங்ளான்னு தெரியல? பெஸ்ட் பேக்கரி விசயத்தைப் பற்றி நீங்க கேட்டிருப்பதைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை தமிழகத்தில் மிக விரிவாக எடுத்துச் சென்று இந்தத்துவா கும்பலை தமிழக மக்கள் மத்தியில் புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படத்தியதை தமிழக மக்கள் அறிவார்கள்.

   “நீங்கள் சிவசேனாவை பற்றி எழுதியிருந்தால் உங்கள் குடும்பமே உலகை விட்டு பிரிந்து நாட்கள் ஆகியிருக்கும்”.

   வினவைப்பார்த்து நீங்கள் அடித்திருக்கும் இந்தக் காமெடிதான் 2013ன் ஆண்டின் ஆகமிகச்சிறந்த காமெடியாக்கும்!

   “அதே அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம், இறைவன் நாடினால் (மறுமையில்) நியாயத் தீர்ப்பு நாளில் சந்திப்போம்,”

   அது சரி! எல்லாத்தையும்தான இறைவன் பார்த்துக்கொள்வாரே. நீங்கள் எதற்கு இறைவனை மீறி மூக்கை நுழைக்கிறீர்கள்?

   பாவம்! போய் ஓய்வெடுங்கள். எல்லாத்தையும் அந்த இறைவன் பார்த்துக் கொள்வார்.

   • சகோதரர் ஊரான் அவர்களே! மன்னிக்க வேண்டும் சொந்த பெயரில் முதலில் தைரியமாக வெளியே வாருங்கள் பிறகு உங்கள் கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்கிறேன். எங்கள் பெண்கள் பர்தா அணிவது பற்றிய உங்கள் ஆசிரியரின் கருத்துக்கு பதில் கூற நீங்கள் முக்காடோடு வருவது வெட்கக்கேடு. போங்க! ஓய்வெடுங்க! வீட்ல பெரியவங்க, முக்கியமா தைரியம் உள்ளவர்களை வரச்சொல்லுங்க! முகவரி தெரியப்படுத்துங்கள், பர்தா அனுப்பி வைக்கிறோம் சரியா ?

    • வினவு தளத்துக்கு புதுசு போல. “முகமது இப்னு அப்துல்லா” யாருன்னு தெரியுமா? மொதல்ல முக்காடு போடாம சொந்த பெயரின் எழுதுங்கப்பா 🙂

     • Ashwin!! கலாய்சிட்டாராமா ! நாங்க தைரியமாகத்தான் சொல்வோம், ஏனென்றால், கதவுகளை பூட்டிக்கொண்டு நான்கு சுவற்றுக்குள் சொல்ல இது சாந்தி முகூர்த்தமல்ல, சத்திய மார்க்கம்.

    • சகோதரர் அப்துல் அவர்களே, ஊரான் உங்களை தனிமனித விமர்சனம் செய்தது தவறு. ஆனால் அவர் பதிலில் ஒரு பகுதி மட்டும் உங்களின் கேள்விக்கான பதிலாக உள்ளது, வினவு இணைய தளம் நீங்கள் கூறிய குஜராத் கலவரங்கள், ஆர். எஸ். எஸ், இந்து தீவிரவாதம் போன்றவற்றை பற்றி பக்கம் பக்கமாக எழுதி அவற்றை சாடியுள்ளது. நீங்கள் கூறிய மற்ற சட்ட ஓட்டைகளை பற்றியும் கண்டித்துள்ளது. அதை எல்லாம் செய்துவிட்டு தான் இந்த கட்டுரை வந்துள்ளது. இவையாவும் இவ்வளவு காலம் தமிழ் இணையதள உலகில் உலவும் பலருக்கும் தெரிந்த விடயங்கள். ஆனால் நீங்கள் இந்த ஒரு கட்டுரையை வைத்து அதையெல்லாம் கண்டிக்காமல் இந்த பேச்சை மட்டும் கண்டித்தது தவறு என்பது போல எழுதியுள்ளீர்கள்.

     தவறு எவர் செய்தாலும் தவறு தான். எனக்கு மத நம்பிக்கை கிடையாது ஆனால் அதற்காக மனம்போன போக்கில் வாழலாம் என்று நினைக்கவில்லை. எவரையும் மரியாதை அற்று பேசுவது தவறு தான் என்பது என் எண்ணம், என்னுடன் பழகிய படித்த இசுலாமிய நண்பர்கள் பலரும் மிக அன்பாக மிக மரியாதையாக நடந்துகொள்பவர்கள். இசுலாமியர்களை பற்றி என்னிடம் பேசும்போது எவரனும் தவறாக பேசினால் கூட அப்படி எல்லாம் பொதுமைபடுத்தி தவறாக பேச கூடாது என்று கடிந்து கொள்வேன். என்னை போன்ற சாதாரண மக்கள் இசுலாமியர்கள் மீது வெறுப்போடு இருப்பதில்லை, ஆனால் இந்த படத்திற்கான தடை, அங்கு பேசிய ஐயா திரு. ஜைனுலாபுதீன் போன்றோரின் நாகரீகமற்ற பேச்சுகள் ஆகியவை தமிழகம் போன்ற அமைதியான மாநிலத்தில் வசிக்கும் மிக சாதாரண மக்களின் மத்தியில் தவறான எண்ணவோட்டத்தை தான் உருவாக்கும். ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருக்கின்றன. இப்படியான ஒரு மாநிலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தேவையில்லாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன் நான் இந்த படத்தை அமெரிக்காவில் பார்த்தேன், உண்மையை சொன்னால் இங்கே நண்பர் ஒருவர் சொல்லியுள்ளது போல, தமிழகத்தில் திரையிட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே, ஏனென்றால் ஹே ராம் போல இந்த படத்தினையும் வெகுஜனம் புரிந்துகொள்ள மாட்டார்கள், மேலும் இந்த படம் முழுவதும் ஆப்கன் தலிபான்களை பற்றிய படம், அதில் கமல் மட்டும் தான் இந்திய உளவாளி, நேரம் தவறாமல் தொழுகும் நல்ல இசுலாமியர் என்று காட்டியிருப்பார்கள், படத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஆப்கன் பஸ்தூன் மொழிகளையும் பேசியிருக்கிறார்கள், தமிழில் வசனம் உள்ள பல படங்களே நம்மவர் பலருக்கு புரியாத போது இதை பார்த்து தான் தமிழ்நாட்டில் இந்துக்கள் இசுலாமியர்கள் மீது வெறுப்பு கொள்வார்கள் என்று கூறுவது சிறுபிள்ளைதனமாக இருக்கிறது, இந்த படம் பார்த்த பலரும் இசுலாமிய அமைப்புகள் பலவும் எந்த எந்த காட்சிகளை சொன்னார்கள் என்று கூர்ந்து கவனித்ததே தமிழகத்தில் நடந்த கூத்துக்களின் விளைவாகத்தான். ஆனால் நான் சொல்லவந்தது அதை பற்றி அல்ல, இடைவேளையின் பொது அங்கு உள்ள திரையரங்கு கடையில் காபி வாங்க காத்திருந்தபோது, அருகில் ஒரு சிலர் (நண்பர்கள் என்று நினைக்கிறேன்)நின்றுகொண்டு கதையை பற்றி விமர்சித்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் மிக சாதரணமாக “இந்த படத்தை ஏன் நம்ம ஊரில் தடைசெய்தனர், இதில் முஸ்லீம்களை பற்றி தவறாக சித்தரிக்கவில்லையே?” என்று பேசிகொண்டிருந்தார். இதற்கு மறுமொழியாக அந்த குழுவிலிருந்து இன்னொரு பெண் “இசுலாமியர்கள் எல்லாரும் மிகவும் முரட்டுத்தனமானவர்கள் என்று எங்கள் ஊரில் சொல்லி கேட்டிருக்கிறேன், அவர்கள் எதற்கெடுத்தாலும் தகராறு செய்பவர்கள் என்று சொல்வது உண்மைதான் போல..” என்றார்… இவர்களெல்லாம் இந்து மத வெறியர்களோ ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரோ அல்ல, சாதாரண தமிழ் பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஒரு சனிகிழமை சாயங்காலம் படம் பார்க்க வந்தவர்கள். இவர்களா இந்தியா வந்து பிரச்சனை செய்ய போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இவர்கள் எல்லோரும் இன்னும் தமிழகத்தில் உள்ள தங்களின் நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பங்களோடு தொடர்பில் இருப்பவர்கள் தான். இப்படியான சாதாரண மக்களின் பேச்சுக்கள் தான் பலவாறாக திரிந்து கடுமையான இன அல்லது மத வெறிக்கான நுண்ணிய நூலிழையாக ஆரம்பிக்கிறது. இவ்வாறான கருத்துகளை தான் பி.ஜே போன்றவர்கள் மேலும் வலுபெற செய்கிறார்கள்.
     ஆகவே தாங்கள் இப்படியான வெறுப்பு பேச்சுகளுக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம். இது உண்மையில் தேவையே இல்லாத பிரச்சனை.

     • சகோதரர் சேந்தன் அவர்களே! கருத்துக்கு அழகிய மறுப்பு வாதம் நீங்கள் வைக்கிறீர்கள், இதுதான் உண்மையான முதிர்ச்சி மற்றும் பொதுநலத்தின் அடையாளம், நான் எனது 2 வது மறுப்புறையிலேயே அந்த பேச்சும், இந்த தேவையற்ற தடையும் தவறு என்பதை எழுதியுள்ளேன், ஆனால் பல சகோதரர்கள் முழுமையான அனைத்து கருத்துக்களையும் பார்க்கவில்லை என்பது என்னால் உணரமுடிகிறது.

     • “ஊரான் உங்களை தனிமனித விமர்சனம் செய்தது தவறு” இது குறித்து தாங்கள் சற்று விளக்கினால் தேவலாம்! நான் எப்போதும் தனிநபர்களை விமர்சிப்பதில்லை. விமர்சிப்பவர்களையும் ஆதரிப்பதில்லை. நிற்க! 13.3.1 ல் திரு.அப்துல் அவர்களின் மறுமொழியைப் பாருங்கள். யார் தனிநபர் விமர்சனம் செய்துள்ளார்கள் என்பது புரியும். இதை எல்லாம் உலகமே படித்துக்கொண்டுதானே இருக்கிறது, புரியாமலா போகும்?

    • ” பர்தா அனுப்பி வைக்கிறோம் சரியா ?” அப்படின்னா பர்தா அணிவது கேலம் என்கிறீர்கள் போலும்!

     எழுப்பப்படும் வினாக்களுக்கு பதில் ஏதும் தங்களிடம் இல்லை என்றால் சும்மா இருக்கலாம். அதை விடுத்து இவ்வாறு எழுதுவதுதான் தங்களின் பதில் போலும்! எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனில் அது உங்கள் விருப்பம். வினவு வெளிப்படையாகத்தானே இருக்கிறது. வினவு எழுப்பி இருக்கிற கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு மற்றவர்களுக்கு பர்தா அனுப்புவது பற்றி யோசியுங்கள்!

   • ஐய்யா ஊரான் அவர்களே சகோதரர் பீஜெ அவர்கள் தைரியமாக ரோட்டில் இறங்கி காவிபயங்கரவாதிகள் பற்றி பேசுகிறார்.உங்களை போல் இணயதளத்தின் மூலம் மறைந்து கொண்டு பேசவில்லை.

  • ///பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஆயிஷா என்ற பெண் பலமுறை நீதிமன்றங்கள் ஏரியும் தீர்ப்பு தள்ளிக் கொண்டு போகிறது, ஆர்.எஸ்.எஸ், வகையறாக்களின் கடுமையான மிரட்டலுக்கு பயந்து கேஸை வாபஸ் வாங்கினார், அதனை வெளியிட ஊடகம் தயாராக இல்லை.////
   முடிக்கும்போது

   ///அதே அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறோம், இறைவன் நாடினால் (மறுமையில்) நியாயத் தீர்ப்பு நாளில் சந்திப்போம், எங்கள் மனங்களிள் ஏற்பட்ட ரணம் ஆறாது,//

   ///இதில் இறுதியாக விளக்கம் : முஸ்லிம்களை தற்கொலைக்கு தள்ளும் வேலையை தடுக்கிறோமே என்று. முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்,///

   மேற்படி மூன்று பத்திகளையும் படிக்கும் போது வினவு சொல்லும்
   \\ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. \\

   என்பது உண்மைதான் என்று தெரிகிறது

   இந்த படத்தை எதிர்த்தால் நீயும் திவிரவாதி என்பதிற்கு பதில் சொல்ல ,ஏன் அவர் குடும்பத்தில் உள்ள பெண்களை இழுக்க வேண்டும் .வேற மேற்கோளே கிடைக்களையா

   இத்தனைக்கும் பெண்களை இவர்கள் மதிப்பார்களாம்

   அது சரி ஒருவரின் ஊனத்தை வைத்து கிண்டல் செய்யும் மனித இனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் தானே (பீ ஜே சொல்வது போல்)
   அப்பறM அதை சத்தமே இல்லாமல் நீக்குவது
   பண்பாட்டினை போதிக்கும் தலைவனே இப்படி தான் இருக்கிறார்

   • ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லா நாங்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் ஏன் நடத்துகிறோம் ? எங்களை ஏன் மன்மோகன் சிங் மற்றும் சோனியா அழைத்து பேசவேண்டும். நான் குறிப்பிட்ட 3 விஷயங்களை குறிப்பிட்டு, ஜனநாயகம் பற்றி பேசுகிறீர்கள், அதில் என்ன தவறு, எனக்கு புரியவில்லை.

    ஒருவரின் ஊனம் பற்றி பேசினால் நிச்சயமாக தவறுதான், ஆனால் பல நல்ல விஷயங்கள் அவர் பேசியிருக்கிறார், அதில் இதை மட்டுமே நீங்கள் அனைவரும் குடைவதேன்.

    பெண்கள் மதிக்கிறோமா ? இல்லையா ? என்பதை பெண்களிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

    இந்த படத்தை எதிர்ப்பவரும் தீவிரவாதி என்றால் இவருக்கு ஏன் கோபம் வருகிறது ? நான் கம்யூனிஸ்ட் பற்றி எழுதிய சில கருத்துக்களை வெளியிட மறுக்கிறார்கள், ஏன் ? அப்போ இவர்களுக்கும் அதில் கூட்டா ? உங்களிடம் வெளியிட்டால் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்ற எண்ணமா ?

    ஏன் என்றால் சுடுகிறது, அதேபோல் எங்களை தீவிரவாதி என்ற சொல் சுடாதா ? பார்ப்பவருக்கு அதன் வலி விளங்காது ? அனுபவித்தால்தான் தெரியும், அதன் வெளிப்பாடே அந்த வார்த்தைகள்.

    • ///நான் குறிப்பிட்ட 3 விஷயங்களை குறிப்பிட்டு,///

     முதலில் ஆயிஷா விசயத்தில் யாரும் வந்து உதவவில்லை என்பீர்கள்
     அப்புறம்
     ///இதில் இறுதியாக விளக்கம் : முஸ்லிம்களை தற்கொலைக்கு தள்ளும் வேலையை தடுக்கிறோமே என்று. முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்,///
     என்பீர்கள்

     • எல்லா கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதாக கூறும் நீங்கள், குஜராத் கொடுமைகளுக்கு ஏதோ புரட்சி இயக்கம் நடத்தி அம்பலப்படுத்தியதாக சொல்கிறீர்கள், நாங்களும் அதே தமிழகத்தில்தான் இருக்கிறோம், தொடர்ந்து 1996 லிருந்து நான் எங்கள் சமுதாய ரீதியான தொடர்பில் இருக்கிறேன், அப்படி நீங்கள் செய்து அம்பலப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.

      நாங்கள் குஜராத்தில் நடந்த கொடுமைகளை வீடியோ தொகுப்பாக அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்திருக்கிறோம். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடந்த எங்கள் இனக்கருவறுப்பு மற்றும் அராஜகங்களை நாங்கள் பல முறை போராட்டம், தர்ணா, முற்றுகை மற்றும் சிறைவாசங்கள் என போராடியே இந்த நிலைக்கு இன்று வந்திருக்கிறோம்.

      விடுதலை சிறுத்தைகள் கூட அம்பேத்கார் பிறந்த நாளான டிச. 6-ல் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எங்களுடன் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறது.

      அதனால்தான் நான் கூறினேன்,

      நாங்கள் அநீக்கு குரல் கொடுப்போம் என்று சொல்லும் நீங்கள் அந்த விஷயங்களில் உதவவில்லை, ” அன்று முதல் இன்று வரை நாங்கள் எங்களுக்காக போராடி வருகிறோம், இனியும் எங்களை காக்க எங்களால் முடியும் இறைவன் நாடினால் என்பதுதான் அதன் விளக்கம் ”

      எத்தனையோ விஷயங்களுக்கு மறியல் மற்றும் போராட்டம் செய்யும் நீங்கள் குஜராத் விஷயத்தில் எங்கே அப்படி செய்தீர்கள் என்றும் அதன் ஆதாரம், புகைப்படமோ அல்லது பத்திரிக்கை செய்திக்கான ஆவணமோ தந்தால், நான் எனது கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

      • A central fact-finding team of CPI(ML) comprising General Secretary Dipankar Bhattacharya, Member of Parliament Dr. Jayanta Rongpi and incharge of the Party’s Gujarat unit Ranjan Ganguly visited riot-torn curfew-bound Ahmedabad on 4-5 March. The team, one of the earliest to visit Gujarat after the carnage began, was accompanied by Ahmedabad-based trade union leaders HJ Pagare, Dasrathbhai Sinhali, and KL Dabhi. Apart from visiting several riot-affected parts of the city, the team also spoke to a number of injured riot-victims in the Ahmedabad Civil Hospital and groups of survivors living in the shadow of fear in the dozen-odd relief camps of the city.

       THE SECOND investigation-cum-relief team of CPI(ML) visited riot-affected areas of Ahmedabad, Gujarat on 11-12 April 2002.This had been the first visit to the riot-torn state by a political party. The team comprised Comrade Swapan Mukherjee, General Secretary of the AICCTU and member of the Central Committee of the Party, Comrade Prem Singh Gehlawat, member of the Central Secretariat of CPI(ML). Comrade Tapas Ranjan Saha, a member of the Delhi University Teachers’ Association and Comrade Mohammad Salim, National Vice-President of the RYA. The team carried Rs. 1,00,000 relief for the victims, especially belonging to the minority community. This relief fund had been collected by comrades in Bihar and Jharkhand on an appeal by the General Secretary in the 14 March Save Democracy rally.

       The team demanded:

       1) Narendra Modi be dismissed immediately;
       2) Discrimination in distribution of relief and providing rehabilitation be stopped;
       3) Stopping raids of Muslim houses and arrests of innocent Muslims, particularly youth and unconditional release of all those arrested under false charges;
       4) It was suggested that a panel of legal experts and advocates be formed under the leadership of Comrade Laxmanbhai Patanwadia, advocate, to provide legal aid and counseling to victims;
       5) Immediately dismantling the Shah Committee formed to enquire into the communal holocaust in Gujarat, since it does not enjoy the confidence and faith of common Muslims. The circumstances of the Gujarat genocide be investigated by a sitting judge of the Supreme Court;
       6) The guilty officials and rioteers be brought to book immediately and tried for murder, loot and rioting.

       • Sangeerani! thanks for your kind reply (records), what you mentioned above, its happened at Gujarat, i accept it. HATS OFF. But what i asking, can you show your records for protest against the gujarat riots in tamilnadu.

        Can you please one more time read my 1 st para. we are also living in Tamilnadu, we doesn’t know that.

        Again i confirm you, if you show your records in tamilnadu state, I retract my comments.

        If you don’t mind, can you read my all comments, then you know, why i asking tamilnadu records.

      • 2002 – குஜராத் இஸ்லாமிய மக்களின் மீதான கொலை வெறியாட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ( ம.க.இ.க) மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 2003-ல் தஞ்சையில் (வருடா வருடம் நடத்தும் ” தமிழ் மக்கள் இசை விழா ” வை குஜராத் இஸ்லாமிய மக்களின் மீதான கொலை வெறியாட்டத்தை எதிர்க்கும் விதமாகப் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடாக நடத்தினர் ) ” பார்ப்பன பயங்கர எதிர்ப்பு மாநாடு “நடத்தப் பட்டது.

       அதில் ம.க.இ.க பொதுச் செயலாளர் தோழர்.மருதையன் ” தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! ” என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையாற்றினர். அந்த உரையில் சாதி அமைப்பைக் கட்டிக்காப்பதையும், இஸ்லாமிய எதிர்ப்பையையும் மூலதனமாகக் கொண்ட இந்துத்துவப் பயங்கரவாதிகளை ( பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ் , வி.எச்.பி , சங் பரிவார், சிவ சேனா உள்ளிட்ட இந்துதுவ பயங்கரவாத அமைப்புகள் ) எப்படி முறியடிப்பது என்று விளக்கிப் பேசினார்.

       தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3851:maruthayan91&catid=111:speech&Itemid=111

       தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -2
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3850:maruhtayan92&catid=111:speech&Itemid=111

       தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -3
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3849:maruthayan81&catid=111:speech&Itemid=111

       தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -4
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3848:maruthayan82&catid=111:speech&Itemid=111

       அந்தக் கூட்டத்தில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்காக இன்றும் நீதி மன்றத்தில் போராடிக் கொண்டிருக்கும் ” தீஸ்தா செதல்வாத் ” உரையாற்றினர்.

       மேலும் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களின் நேருரையும் மாநாட்டில் இடம்பெற்றது.

       குஜராத் மக்களின் நேருரை
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3971:-01&catid=194:documentaryindia&Itemid=111

       குஜராத் படுகொலையைக் கண்டித்து… தோழர் மருதையன் உரை பாகம் -1
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1977:gujrat1&catid=111:speech&Itemid=111

       குஜராத் படுகொலையைக் கண்டித்து… தோழர் மருதையன் உரை பாகம் -2
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1976:gujrat2&catid=111:speech&Itemid=111

       குஜராத் படுகொலையைக் கண்டித்து… தோழர் மருதையன் உரை பாகம் -3
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1975:gujrat3&catid=111:speech&Itemid=111

       குஜராத் படுகொலையைக் கண்டித்து… தோழர் மருதையன் உரை பாகம் -4
       http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1974:gujrat1maru&catid=111:speech&Itemid=111

       1992-ல் தங்களது ஒட்டுப் பொறுக்கி அரசியலுக்காக ” அயோத்தியில் ராமர் கோயிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. அந்த பாபர் மசூதியை இடித்து நாம் மீண்டும் அங்கே ராமர் கோயிலைக் கட்டுவோம் ” என்று இந்துத்துவப் பயங்கரவாதக் கும்பல்கள் முழங்கின. அதற்கு அவர்கள் பயன்படுத்திய முழக்கம் ” நாம் அனைவரும் இந்துக்கள் “. சாதிப் பாகுபாடு கடந்து இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பதே அந்த முழக்கத்தின் நோக்கம். அதன்படி டிசம்பர்-6 அன்று இந்துத்துவ வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த கலவரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

       அதை எதிர்த்து ” நாம் அனைவரும் இந்துக்கள் ” என்ற முழக்கத்தை உடைக்கும் விதமாக ” நாம் அனைவரும் இந்துக்கள் அல்ல “. இந்து மதத்தின் ஆன்மாவே சாதி தான் என்பதை மக்களுக்கு விளக்கும் விதமாக திருவரங்கத்தில் 1993-ல் கருவறை நுழைவுப் போராட்டம் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்பட்டது.
       “ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் “ காவிப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துகிற நாடகங்களும், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவற்றை கீழ்க்காணும் வலைப்பக்க முகவரியில் பெறலாம் .

       http://www.tamilcircle.net/index.php?option=com_sectionex&view=category&id=9&Itemid=111#catid111

       • ““ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு“ நடத்தப்பட்டது கோவையிலா? தஞ்சையிலா?

        • தஞ்சையில்தான். கோவையில் நடந்தது ” மறுகாலனிய எதிர்ப்பு மாநாடு “.

  • இசுலாத்தை பற்றி எழுதினால் “சங்பரிவார்களை பற்றி எழுத தைரியம் இருக்கான்னு” பத்து கமன்ட் வருது.. இந்து மதத்தை பற்றி எழுதினால் “முஸ்லிம் தீவிரவாதமெல்லாம் உன்னோட கன்னுக்கு தெரியாதா”ன்னு பத்து கமன்ட்.. உஙகள பாத்தா ரொம்ப பாவமா இருக்கு வினவு.

   (ஆனா கடைசி வரைக்கும் உங்க கேள்விக்கு மட்டும் நேரடியான பதில் மட்டும் வருவதே இல்லை. இரண்டு பக்கம் இருந்தும்!!)

  • இன்றைய செய்தியில் மிக முக்கியமாக இடம்பெற்ற செய்தி ஒரு கொடூர மதவாதி ஐந்தே வயதான சொந்த மகளை வன்புணர்ந்து, கொலை செய்துவிட்டு, இன்று வெறும் சில மாத சிறை வாசமும், 50, 000 டாலர் பணத்தையும் செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டான். இது மனிதர்களால் உண்டாக்கிய சட்டமில்லையாம், இது தெய்வச் சட்டமாம்.

   சவுதி தொலைக்காட்சிகளில் மதப் பிரசங்கம் செய்யும் பிரபல மதவாதி பகான் கம்தி ( Fayhan Ghamdi ) என்பவன் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டான்.

   http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html

   ///எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, February 05, 2013 ///

   • இதுதான் எதார்த்தம். வெளியில் வராத எத்தனையோ அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிறது சவுதியில்.

   • இந்த விஷயம் கண்டிக்கத்தக்கது, நிச்சயமாக அவன் நடுரோட்டில் அடித்தே கொல்லப்பட வேண்டிய கொடூரன். இந்த விஷயத்தில் அவனை கண்டித்து எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரசாங்கமே அறிக்கைவிட்டுள்ளது, அவன் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வேலையை செய்துள்ளான். இவன் பஹ்ரைனில் பிரச்சாரம் செய்து வந்த சவூதி வம்சாவளியை சேர்ந்தவன், இவனை கண்டிப்பாக தண்டிக்க வேண்டுமென 2 அரசாங்கமும் அறிவிப்பு செய்துள்ளது. அதற்கான பத்திரிக்கை செய்தி

    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/tougher-verdict-sought-for-preacher-in-rape-case-1.1141634

    சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இப்படி ஒரு சட்டம் இல்லை. தனிமனிதனின் தவறுக்கு இஸ்லாம் தவறாகாது. ரத்த பணம் என்பது எதை வைத்து தீர்ப்பு கொடுத்தார்கள் என்று விசாரனை நடந்து முடிவு வந்தால்தான் தெரியும். எனக்கு தெரிந்து அப்படி இல்லை.

    தவறு செய்தால் சவூதி அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும், முஹம்மது என்ற மனிதர் கொண்டு வந்த நற்கருத்துக்களுக்குத்தான் மதிப்பே தவிர, எந்த தனி நபருக்கும் அல்ல

  • இந்த ரத்தப்பணத்தை பற்றி essay எழுதலாமே

   இன்றைய செய்தியில் மிக முக்கியமாக இடம்பெற்ற செய்தி ஒரு கொடூர மதவாதி ஐந்தே வயதான சொந்த மகளை வன்புணர்ந்து, கொலை செய்துவிட்டு, இன்று வெறும் சில மாத சிறை வாசமும், 50, 000 டாலர் பணத்தையும் செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டான். இது மனிதர்களால் உண்டாக்கிய சட்டமில்லையாம், இது தெய்வச் சட்டமாம்.

   சவுதி தொலைக்காட்சிகளில் மதப் பிரசங்கம் செய்யும் பிரபல மதவாதி பகான் கம்தி ( Fayhan Ghamdi ) என்பவன் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டான்.

   http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html

   ///எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, February 05, 2013 ///

 10. 1 படுக்கையறை விஷயங்கள் பற்றி பேசியது தவறில்லை , ஆனால் பேசிய இடம் தான் தவறானது.

  at the end of the day , அவரும் ஒரு மனிதர் தானே !!!. ஒரு curiosity….

  2 இஸ்லாமிய வாழ்கை நெறி பற்றி பேசும் பீஜெ , அடுத்தவர்கள் பற்றிய அந்தரங்கத்தை பொது மேடையில் பேசுவது எந்த வகை இஸ்லாமிய கொள்கை என்று தெரியவில்லை.

  3 இஸ்லாமிய நெறி படி வாழும் இவர்கள் எப்படி ஒரு பொது இடத்தில் முன்றாந்தரமாக பேச முடிகிறது என்று தெரியவில்லை

  இதுதான் இஸ்லாமிய நெறியா???????

  அல்லாஹு அக்பர் !!!!!!!!

 11. இவனுங்க சும்மா இருந்திருந்தா இந்த படம் ஒரு நாலு நாள் ஓடிட்டு பொட்டிக்கு போயிருக்கும். இப்போ பெரிசா பில்டப் கொடுத்திட்டானுங்க.

 12. பி.ஜெ வுடன் விவாதிக்க தயாரா என்ற கேள்வியை இந்த கட்டுரையை படித்த பின்பாவது இசுலாமிய நண்பர்கள் இம்சிக்காமல் இருக்கட்டும். பி.ஜெ இடமிருந்து நல்லதொரு பதிலை இங்கு வந்த மூன்று கட்டுரைகளுக்கு பெற்று தரட்டும், அவர்கள்.

  2004–ஆம் வருடம் PEACE என்றொரு கூட்டத்திற்கு என்னை ஒரு இசுலாமிய நண்பன் அழைத்து போனார். ஜாகிர் நாயக் எனும் மார்க்க அறிஞர் உரை நிகழ்த்தினார். உரைக்கு பிறகு நடந்த கேள்வி–பதில் நிகழ்ச்சியில், நான் சில எளிமையான கேள்விகளை முன் வைத்தேன். எனது குறிப்பான கேள்விக்கு பூடகமாக 15 நிமிடங்கள் பதிலளித்தார். உண்மையில், சமூகத்தின் நேரடியான பிரச்சினைகள் எதற்கும் அவரிடம் பதில் இருக்கவில்லை.

  கம்யூநிஸ்ட்களின் ஒரு சிறிய தெருமுனை கூட்டம் என்பது ஒரு மாலை நேர கல்லூரி. பி.ஜெ வின் கூட்டத்துக்கு செல்லும் ஈக்கள் ஒரு மாற்றத்திற்காக ஒரு முறை ஒரு தெருமுனை கூட்டத்திற்கு வாருங்கள். தோழர் மருதையனின் ஒரு உரைவீச்சை கேளுங்கள். பிறகொரு முடிவுக்கு வாருங்கள்.

 13. எனது உற்ற நண்பன் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த்தவர், 30 வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். இந்த படப்ப்ரிச்சனைக்கு பிறகு நட்பில் சிறு விரிசல் விட்டது போல உணருகிறேன்.
  எங்கே எனக்கும் மத வெறியை ஏற்றி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்.
  RSS /BJP போன்ற கட்சிகளை எதிர்த்தவன்..
  என் உற்ற நண்பன் பீர்மொஹம்மத், 30 வருட பழக்கம்..
  இது போல சில சம்பவங்கள் எங்களை பிரித்து விடுமோ என்று பயமாக உள்ளது.
  என்னையும் மதவெறிக்கு ஆளாக்கிவிடுவார்களோ என அச்சமாக உள்ளது.
  நீங்களும் PJ போன்ற மதவியபரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…
  நாகரிகமாக பேச சொல்லுங்கள்…
  மனிதம் தழைக்கட்டும்.
  நன்றி

 14. விசுவரூபம் திரையிடப்படாததால்தான் இங்கு உள்ள முஸ்லிம்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை அறிய முடிந்தது.எல்லா ஆன்மீக நூலும் மாறாதது பற்றியும் மாறும் வாழ்க்கை பற்றியும் கலந்தே இருக்கும்.இதில் ‘மாறுவது’ அந்த நூல் வந்த காலகட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்.இதை உணராமல் மத்தவன் உசிரை வாங்குபவன் எந்த மதத்தினராக இருந்தாலும் அந்த ‘மதக்குரங்குகளை’ அதனதன் கூண்டுகளில் அடைக்க கத்த வேண்டியதா இருக்கிறது…

 15. ஆரம்ப காலங்களில் பீ ஜே வின் பால் இளைஞர் கூடடம் திரள அவர் கொண்டிருந்த

  முற்போக்கு கொள்கைகளே காரணமாக இருந்தது.இஸ்லாத்திற்கு புறம்பான

  அடக்கஸ்தலத்தை வழிபடும் கூட்டத்தை ஓரளவு மாற்றியும் இருக்கிறார்.

  ஆனால் இந்த பேச்சு! ஒரு நல்ல முஸ்லீமால் இது போன்ற நாலாந்தர பேச்சை

  வெளிபடுத்த இயலாது.கண்ணிய குறைவான இந்த பேச்சை எந்த முஸ்லீமும்

  நியாய படுத்தவும் முடியாது.அதிகபட்ச கோபத்தின் வெளிப்பாடாய் தெரிகிறது.

  இனிவரும் காலங்களில் இவரை போன்றவர்கள் நா காப்பது தமிழக

  முஸ்லீம்களுக்கு நல்லது.வினவு,காவி கும்பலுக்கு காயடித்து விட்டதை

  கணக்கில் கொண்டால் இஸ்லாம் எதிர்ப்பு பதிவு பத்து பர்சென்ட் தேறாது.

  நீண்ட கால வாசகனாக இதை நானறிவேன்.

  a.m.சயீது மற்றும் முகமது கனி இவர்களின் பேரனும்

  பாவா மரைக்காயர் ஆயிஷா இவர்களின் மகனுமாகிய

  பஷீர் அஹமது.

  (இல்லேன்னா எனக்கும் காக்கி டவுசர் கன்பார்ம்.)

 16. நான் பல கேள்விகளை முன்வைத்து பேசினேன், பதில் இல்லை, ஆனால் பிஜே அப்படி பேசலாமா ? என்ற கேள்விதான் பதிலாக வருகிறது.

  புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தணிக்கை குழு உறுப்பினர் மற்று நீர்ப்பறவை இயக்குனர் வரை ஆனைவரும் கூறியது. முஸ்லிம்களை சினிமாவில் தவறாக சித்தரிக்கும் போக்கு எம்.ஜி.ஆர் காலம் முதல் உள்ளது, ஆனால் விஸ்வரூபத்திற்கு இத்தனை எதிர்ப்பு தேவையற்றது என்றே கூறினார்கள். அந்த நடுநிலைமை கூட கம்யூனிஸம் பேசும் உங்களிடம் இல்லை.

  பிஜே பொது இடத்தில் பேசியிருக்கக் கூடாது, பேசியதை மட்டும் கூறும் நீங்கள், அதற்கு மறு நிமிடமே எங்கள் சகோதரர்கள் கண்டித்து கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்தது ஆன்லைன்பிஜே இணையதளத்தை பார்ப்பவர்களுக்கு தெரியும். தலைவர் சொல்லிவிட்டார் என்று கும்மியடிக்கும் கும்பலோ அல்லது சுயமரியாதை என்று சொல்லி ஜெயின் காலடியில் சுயமரியாதை தேடும் பாண்டியங்களோ அல்லது ராஜங்களோ நாங்களல்ல. அதற்காக மொத்த கம்யூனிஸ்டு சகோதரர்களையும் நான் குறை சொல்லமாட்டேன், அப்படி செய்தால் உங்களுக்கு, எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

  பொது இடத்தில் அதும் பெண்கள் மத்தியில் பேசுவதற்கும் கண்ணியம் பேணுதல் முக்கியம் மறுக்கவில்லை. ஆனால், சேக்குகளின் குஞ்சுகள் வெட்டப்படுவதை // என்று கொச்சையாக எழுதும் இந்த ஆசியருக்கும் எடுத்து சொல்லுங்கள், பெண்களும் பார்வையிடுவார்கள், பத்திரிக்கைகாரருக்கான கண்ணியம் கொஞ்சமும் இல்லை.

  கம்யூனிஸ மீட்டிங்கிற்கு நாங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக கேராளாவிலும், மேற்கு வங்கத்திலும் நீங்கள் செய்த கம் இங்கம் ஆட்சியும், கேரளாவில் பி.ஜே.பி யுடன் கெவல அரசியலுக்காக செய்த கம்யூனிஸ கொலைகள், கலவரங்கள், தீக்கீரையாக்கப்பட்ட சம்பவங்களும் எங்களுக்கும் தெரியும், ஏனென்றால், கொல்கத்தா மற்றும் மலையாளிகள் எங்களுடம் வேலை செய்கிறார்கள், வேண்டுமென்றால் ஆதாரத்தை வாங்கி தரவும் நான் தயார்.

  ஜாகிர் நாயக் கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை என்று நீங்கள் சொல்லியே நான் கேள்வி படுகிறேன். சகோதரரே! முதலில் பார்வையையும், மனதையும் விசாலமாக்குங்கள், நல்லதே நடக்கும்.

  சகோ. வெங்கடேசன் சொன்னதை போல் படம் திரையிடப் பட்டிருந்தால் அதாகவே காணமல் போயிருக்கும் இது வேண்டாத வேலை என்பதை நாங்களும் அறிவோம், விஸ்வரூபம் பார்த்தவர்கள் கூறியது படம் புரியவில்லை என்று.

  • // பொது இடத்தில் அதும் பெண்கள் மத்தியில் பேசுவதற்கும் கண்ணியம் பேணுதல் முக்கியம் மறுக்கவில்லை. ஆனால், சேக்குகளின் குஞ்சுகள் வெட்டப்படுவதை // என்று கொச்சையாக எழுதும் இந்த ஆசியருக்கும் எடுத்து சொல்லுங்கள், பெண்களும் பார்வையிடுவார்கள், பத்திரிக்கைகாரருக்கான கண்ணியம் கொஞ்சமும் இல்லை. //

   அப்துல் பாய்,

   கட்டுரை ஆசிரியர் “மைனர் குஞ்சுகள்” என்று மேற்படி சேக்குகளை குறிப்பிட்டதை “சேக்குகளின் குஞ்சுகள்” என்று எழுதியதாக தவறாகப் பொருள் கொண்டிருக்கிறீர்கள்..

   இதே போல்தான்,

   “தயவு செய்து சகோதரர்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தங்களை தவறாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று தங்களை பணிவோடு, பண்போடும் பாசத்தோடும் கேட்டுக் கொள்கிறேன். யார் எந்த அடையாளங்களை கொண்டிருந்தாலும் இந்த மண்ணில் உள்ளவரை அவன் இந்தியனே.”

   என்று பாரதிராஜா கூறியதை, குறிப்பாக “தவறாக, (சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகளுடனோ/தீவிரவாதிகள் ஆதரவாளர்கள் போலவோ) அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதை கவனத்தில் கொள்ளாமல் அவர் மீது இது போன்று ஒரு அரசியல்வாதி போல் பாய்வது PJ போன்ற, குரான்/ஹதீதுகளை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யும், மார்க்க அறிஞர்களுக்கு அழகா..?! தேவையில்லாமல் மேலதிகம் எதிர்ப்பாளர்களை உருவாக்குவது சரியா..?!

 17. வினவு
  அடிக்கடி கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவே அது போன்ற பேச்சுக்கள் .கருத்து சுதந்திரத்தின் அளவு கோள் என்ன?சொல்லுங்கள் .எப்படி கமல் அவர் மகள் பற்றிய பேச்சு ,பாரதிராஜா குடும்பம் பற்றி பேச்சுக்கள் எப்படி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்குமோ அதே போன்றே அமைதியாக வாழும் எங்கள் மீது அடிக்கடி நடத்தும் மீடியாகளின் தாக்குதல் வலியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே அந்த மேடையில் அவ்வாறான பேச்சுக்கள் ..எப்படி கமலுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? இந்து மதத்தைப் பற்றி கமல் பேசவில்லையா? பேசட்டும் அவர் ஹிந்து .மருதநாயகம் தடை செய்யப்படவில்லையா? அதற்காக ராமகோபாலன் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்திவில்லையா?அப்போது கண்டன குரல்கள் எங்குமறைந்தன?
  பாரதிராஜாவும் கமலும் ஆபாச சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்களா?அவர்கள் படங்களில் படுக்கையறை காட்சிகள் காட்டுவது இல்லையா? இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படவில்லையா ? குடும்பத்துடன் சினிமா பார்க்கும் மக்கள் நிலாகாயுது பாட்டில் முக்கல் முனகல் களில் எப்படியெல்லாம் நெளிந்திருப்பார்கள் .சக்கர வள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி என்று ஊரெல்லாம் கேட்டுத்தான் கவி வல்லமை காட்டுவதா? அந்தபாடலை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட இசைக்கப்படுகிறதே ,அதைவிடவா ஆபாசம்பீஜெ பேசிவிட்டார்.ஆபாசமே சினிமா ,சினிமாவே ஆபாசம் .அப்படிப்பட்ட சினிமாக்காரர்களை மனதில் உரைக்க எப்படி பேசுவது? துப்பாக்கி படத்தில் வரும் காட்சிகளுக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அப்போது இந்த ஜட்டி நாயகன் கமலுக்கு புரிந்திருக்க வேண்டும்.ஆனால் அவர் எனது படத்தை முஸ்லிம்கள் பார்த்தால் எனக்கு பிரியாணி போடுவார்கள் என்று நக்கல் வேறு.பிறகு சிக்கல் வராதா?
  கண்ணியத்திற்கு கண்ணியம் .ஆபாசத்திற்கு ஆபாசம் .மாணவன் திருந்த ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள் .திருடன் திருந்த போலீசார் லத்தியால் அடிப்ப்பார்கள்.மாணவனை லத்தியால் அடித்தால் உங்களது கண்டன குரல் ஏற்புடையதே .
  பீஜே ,இந்துக்கள் பற்றியோ இந்து தெய்வங்கள் வேதங்கள் சம்பிராதயங்கள் பற்றி பேசவில்லை .இந்துமதத்தை விட்டு வெளியேறிவிட்ட தமிழ் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைத்து விட்ட கமல் என்னும் பிற்போக்குகாரர் எங்களைப் பற்றியும் எங்களது குர்ஆன் பற்றியும் பொய்யுரைத்து இருப்பதால் ஆவேசம் வரவே செய்யும் .இதில் வார்த்தைகள் கனத்தால் பாதிப்பு கமலுக்கு இந்துக்களுக்கோ மடர்வர்களுக்கோ அல்ல .அவ்வாறு இருக்க சாதாரண இந்துக்கள் ஏன் கொதிப்படைய வேண்டும் ?அவர்களை கொதிப்படைய வினவே முன்னின்று பேசுவது ஏற்புடையதா?
  பீஜேவின் பேச்சுக்கள் கமலை தாக்கியதைவிஞ்சி நீங்கள் பீஜேவை தாக்கிடும் நோக்கம் என்னவோ?

 18. மதவெறியர்களுக்கு முட்டு கொடுக்கும் அறிஞர் அ.மார்க்சின் சந்தர்ப்பவாதம் பற்றி மனுஷ்யபுத்திரன் முகநூலில் விரிவாக எழுதியுள்ளார்.

  இந்து அடிப்படை வாதத்தை எதிர்த்துக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அண்டியிருக்க வேண்டிய அவசியம் அ.மார்க்ச்சிற்கு இருக்கலாம்.எனக்குஅத்தகைய அவசியம் எதுவும் இல்லை……
  https://www.facebook.com/notes/manushya-puthiran/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/10151262666076725

  • எதிர்ப்பு கருத்துக்கள் எழுதுகிறோம் .ஆனால் தினமணி வெளியிடுவதில்லை

   • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

    ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

 19. இந்துத்துவ பயங்கரவாதிகளை தமிழ்நாட்டில் வினவைத்(ம.க.இ.க) தவிர வேறு யாரும் தீவிரமாக அம்பலப்படுத்தவில்லை, எதிர்க்கவும் இல்லை. அப்படி எதிர்ப்பதற்குக் காரணம் ஏதோ முஸ்லீம் அமைப்புகளும், மக்களும் சந்தோசப்படுவார்கள் என்பதற்காக அல்ல. இந்தியாவில் மார்க்சிய அடிப்படையில் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக இயங்கும் ஒரு புரட்சிகர அமைப்பு இந்து, முஸ்லீம், கிறித்தவம் ஆகிய மதங்களின் மீது என்ன பார்வை கொண்டிருக்க வேண்டுமோ, அந்தப் பார்வை வினவிடம் சரியாகவே இருக்கிறது. மார்க்சியம் எந்த மதத்தின் மீது போர் தொடுக்கவில்லை. ஏனென்றால் மதம் மேற்கட்டுமானமாக இருக்கிறது. அடிக்கட்டுமானமாக இருக்கின்ற உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் தகர்க்கபப்டும் போது மேற்கட்டுமானத்தில் இருக்கும் மதத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதே மார்க்சியம்.

  ஆனால் இந்தியச் சூழலைப் பொறுத்தவரையில் இந்து மதம் தொழில் பிரிவினையாக, உற்பத்தி முறையாகவே இருக்கிறது. ஆகவே வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, இந்து மதத்தை எதிர்த்துப் போர் தொடுப்பது அவசியமாகிறது. மற்ற மதங்கள் அப்படியில்லை. மேலும் இந்தியாவில் இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்கள் ஒடுக்கப்பட்ட மதங்களாக இருக்கின்ற காரணத்தினால் அம்மதத்தைச் சார்ந்த மக்களுக்காக வினவு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், சுரண்டல் நிறுவனமாக இருக்கின்ற மதத்திற்கு எதிராக, அறிவியல் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகிற அனைத்து மதங்களிலும் உள்ள அறிவியலுக்கெதிரான மூடக் கருத்துகளை, மக்களை அடிமைப்படுத்துகிற தவறான நடைமுறைகளை சமரசமின்றி எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் வருகிறது.

  அதனடிப்படையில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகளே வினவில் அதிகம். மற்ற மதங்களைப் பற்றிய கட்டுரைகளும் கணிசமாக அளவில் இருக்கின்றன. தேவையின் அடிப்படையில் தொடர்ந்து எழுதுவார்கள்.

  இந்துமதத்தை அம்பலப்படுத்தும் பெரும்பாலான கட்டுரைகளில் பார்ப்பன இந்துமதத்தின் செம்பு தூக்கிகள் ” இந்து மதத்தைப் பற்றியே எழுதுறியே? மற்ற மதத்தைப் பற்றி எழுவதற்குத் தெம்பிருக்கிறதா? ” என்று கூறுவார்கள். அவர்கள், மற்ற மதங்களை அம்பலப்படுத்தி வினவில் எழுதப்பட்ட கட்டுரைகளைப் படிப்பதில்லை. படித்தாலும் நேர்மையாகப் பரிசீலிப்பதில்லை. மற்ற மதங்களை எவ்வளவு விமர்சித்தாலும் பத்தாது, நம் மதத்தை விமர்சிக்கக்கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.

  இதே எண்ணம்தான் இஸ்லாமிய மதவாதிகளிடமும் இருக்கிறது. இந்துத் தீவிரவாதத்தைப் பற்றி வினவில் எழுதப்பட்ட ஏராளமான கட்டுரைகளை மறந்து(மறைத்து) ” முஸ்லீம்களை மட்டும் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். இந்துக்களை ஏன் அப்படி அழைப்பதில்லை ? ” என்று அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்டு வினவை மடக்குகிறார்(?) அபுபக்கர் என்பவர். அதற்கு நாகராஜ் என்ற நண்பர் வினவில் இந்துத் தீவிரவாதிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் இணைப்பை அளிக்கிறார். அதையும் பொருட்படுத்தாமல் வினவைப் பற்றிய அவதூறைத் தொடர்கிறார் அபுபக்கர். வினவின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருபவர் எவரும், வினவு எப்பொழுதுமே இஸ்லாமியர்களின் நண்பனாக. இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

  இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய மக்களின் அன்றாடப் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. அதைச் செய்பவர்கள் புரட்சிகர அமைப்புகள்தான். அதனடிப்படையில் இஸ்லாமிய மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் பீ.ஜெ, போன்ற மதவாதிகளின் பின்னால் செல்லாதீர்கள் என்று வினவு எச்சரிப்பதில் என்ன தவறு இருக்கிறது? முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும், கர சேவைக்கு தமிழகத்தில் இருந்து ஆள் அனுப்பிய, முஸ்லீம் மக்களை நர வேட்டையாடும் மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் சென்று வாழ்த்துச் சொன்ன பாசிச ஜெயாவை, தனது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்காக விஸ்வரூபம் படத்துக்கு தடைவிதித்ததை “அல்லாதான் ஜெயாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறார்” என்று கூறும் மூடத்தனத்தை வினவை அவதூறு செய்யும் முஸ்லீம் அறிவாளிகள் ஏன் கண்டிக்கவில்லை?. பாசிச ஜெயா மோடியுடன் நட்பாக இருக்கிறார் என்பது தெரிந்தும், ஜெயா ஒரு பெண் மோடிதான் என்பது தெரிந்த பிறகும்( கோவைக் கலவரத்தில் இந்து முண்ணனிக் காலிகளுடன் இணைந்து போலீசும் முஸ்லீம்களைக் குதறியதெல்லாம் மறந்திருப்பார்களோ? ) ஜெயாவுடன் கூட்டணி வைத்திருக்கும் முஸ்லீம் அமைப்புகளை மேற்சொன்ன முஸ்லீம் அறிவாளிகள் ஏன் கண்டிக்கவில்லை?. சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தா.பாண்டியன், ராமதாசு உள்ளிட்டு பல பேரைப் பற்றிப் பேசிய பீ.ஜெ இப்பிரச்சனையின் மீதான வினவின் நிலைப்பாட்டைப் பற்றி ஏன் பேசவில்லை?

  ஆக முஸ்லீம் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று கூறும் பெரும்பாலான அமைப்புகள் முஸ்லீம்களை வைத்துப் பிழைப்புதான் நடத்துகின்றன ( தலித் மக்களின் ஆதிக்க சாதி எதிர்ப்புணர்ச்சியை தங்களது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் தலித் பிழைப்புவாதிகள் போல).

  ஆதிக்க சாதிகளில் உள்ள ஜனநாயகச் சக்திகளின் துணையின்றி, ஜாதியாகத் திரண்டு எப்படி ஜாதியை ஒழிக்க முடியாதோ? அது போல முஸ்லீம் மக்கள், இந்து மதத்தில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையின்றி, ஜாதி, மதமற்ற பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி, இந்து மதவெறிப் பயங்கரவாததை எதிர்த்து வீழ்த்த முடியாது.

  இந்த நிதர்சனமான உண்மையை உணர்ந்த ஜனநாயக உணர்வுள்ள, நேர்மையான இஸ்லாமிய நண்பர்கள், இஸ்லாமிய மக்களுக்கு இதை உணர்த்த வேண்டும். இஸ்லாமிய மக்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பீ.ஜெ. போன்ற மதப் பிழைப்புவாதிகளை இஸ்லாமிய மக்களிடம் அம்பலப்படுத்தித் தனிமைப் படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், பீ.ஜெ வின் பேச்சுக்களால் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் பின்னால் சென்றால், வரலாற்றுப் பிழை இழைத்தவர்கள் ஆவீர்கள்.

 20. // ஆனால் இந்தியச் சூழலைப் பொறுத்தவரையில் ஆனால் இந்தியச் சூழலைப் பொறுத்தவரையில் இந்து மதம் தொழில் பிரிவினையாக, உற்பத்தி முறையாகவே இருக்கிறது. ஆகவே வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, இந்து மதத்தை எதிர்த்துப் போர் தொடுப்பது அவசியமாகிறது. மற்ற மதங்கள் அப்படியில்லை. . //

  போர் தொடுப்பதற்கு முன்னால், எப்படி இன்று ”இந்து மதம் தொழில் பிரிவினையாக, உற்பத்தி முறையாகவே இருக்கிறது” என்பதை விளக்கமுடியுமா..?

 21. ..இவனுங்க சும்மா இருந்திருந்தா இந்த படம் ஒரு நாலு நாள் ஓடிட்டு பொட்டிக்கு போயிருக்கும். இப்போ பெரிசா பில்டப் கொடுத்திட்டானுங்க//உண்மை

 22. ” மதம்- ஒரு மார்க்சியப் பார்வை ” என்ற புத்தகத்தில் உங்கள் கேள்விக்கான விடை இருக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். படியுங்கள் விவாதிக்கலாம்..

 23. ஆஹா…. பிஜேயின் மேல் செம காண்டு ஆயிடிச்சி வினவுக்கு என்பதை இந்த பதிவு அப்பட்டமாக காட்டிவிட்டது. உங்களின் இந்த பதிவு அற்ப கோழைகளாக காட்டுகிறது. கூட்டத்தோடு கூட்டமாக கூச்சல் போடும் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. தவ்கீத் ஜமாத் எத்தனையோ பிரச்சனைகள் சம்பந்தமாக பல பேருடன் பல குழுவுடன் விவாதம் நடத்தி தனது நிலையை பலமுறை அழகிய முறையில் அமைதியான முறையில் விடியோ பதிவுகளாக பதிய வைத்திருக்கிறது. அந்த விவாத பதிவுகள் எப்போதும் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.இதன் நோக்கம் சிந்திக்கும் மக்கள் நியாய அநியாயங்களை இதன் மூலம் தெரிந்துகொள்வார்கள் என்று தான். உங்களின் ஒவ்வொரு இஸ்லாம், மற்றும் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட பதிவிற்கும் இஸ்லாமிய சகோதரர்கள் விளக்கம் அளித்து கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இது போன்ற பெரும்பாலான விளக்க பதிவிற்கு வினவு பதிலேதும் சொல்லாமல், கண்டுக்கொள்ளாமல் அடுத்த அடுத்த இஸ்லாம் பற்றிய விமர்சன பதிவுகளுக்கு போய்க்கொண்டே இருக்கும். இதை இந்த தளத்திற்கு அதிக காலமாக வரும் மாற்றுமத சகோதரர்களுக்கும் நன்றாக தெரியும். குற்றம் மட்டும் வகை வகையா சொல்லுவேன் அதற்கான விளக்கம் கூறினால் காதை பொத்திக்கொள்வேன் இப்படித்தான் இருக்கிறது உங்களின் செயல். இஸ்லாமை பற்றி ஆரிய யூத மீடியாக்கள காழ்புணர்ச்சியுடன் சித்தரித்திற்கும் மாயையில் சிக்கி இருக்கும் மற்ற ஏனைய பொது மக்களின் மனநிலையில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனவே உங்களின் எல்லா (இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றிய) சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க கடமை பட்டிருக்கோம் ஒரு வாரம் ஒதிக்கி அது சம்பந்தமாக எங்களுடன் விவாதம் செய்யுங்கள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? சகோதரத்துவத்துடன் விவாதம் செய்து தெளிவு பெறுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ? அமைதியான முறையில் சகோதரத்துவத்துடன் நூற்றுக்குமேல் விவாதம் செய்த முன்மாதிரி எங்களிடம் பதிவுகளாக உள்ளது. இல்லை என்றால் எழுத்து விவாதத்திற்கு வடிவேலு போல் அழைப்பீர்கள். அது மக்கள் தெளிவு பெற வாய்ப்பே இல்லை. என்பதை விளக்கி சொல்லியாச்சி. அந்த எழுத்து விவாதத்திற்கு சாத்தியமில்லாத காரணங்களை பாமரன் கூட அறிவான். ஆனால் நீங்கள் அறியாதது போல் நடிப்பீர்கள். இப்போது உங்கள் கையாலாகாத தனம் கோபமாக உருமாறி பிஜே பக்கமும் இஸ்லாம் பக்கமும் திரும்பி இருப்பதை நாங்கள் நன்றாக உணருகிறோம். உங்கள் நிலை கேலிக்குரியதாக இருக்கிறது. உங்களின் இந்த இஸ்லாமை பற்றிய கட்டுரைகள் எங்களுக்கு எந்த மாற்றத்தையும் தராது. மாறாக உங்களின் இந்த நிலை நகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது.

  • எழுத்தில் எழுதி வைத்தால் எல்லோரும் படித்து விடுவார்கள் என மந்திரங்களை பரம்பரைகளுக்கு மாத்திரம் சொந்தமாக்கியது இந்திய பார்ப்பன சாதி. இப்போது எல்லோரும் படிக்க ஆரம்பித்த பிறகும் எழுதி விவாதிக்க மறுப்பது தர்க்கரீதியாக யோக்கியமானது அல்ல• உண்மையில் எதாவது எழுதி பிரச்சினை வந்து விடுமோ என அஞ்சுபவர்கள்தான், அதாவது தனது வாதம் சரியாக இருக்க முடியாது என நினைப்பவர்கள்தான் விவாதிக்க எழுத்து எனும் வடிவத்தை மறுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் கோரும் யோக்யமான வார்த்தை பிரயோகங்கள் உள்ளிட்ட பல விசயங்களை முன்நிபந்தனையாக நீங்களே முன்வைத்து விவாதிக்க வருவது சரிதானே ஐயா.

 24. இன்று கூட ஒரு இஸ்லாமிய சகோதரருடன் நேரடி விவாதம் திருச்சியில் நடைபெறுகிறது. இன்று, நாளை, நாளை மறுநாள் இவ்விவாதம் நடைபெறுகிறது. இதை onlinepj.com ல் நேரடி ஒளிபரப்பில் காணலாம். நன்றி.

 25. BJ யின் பேச்சு அருவருக்கதக்கது, அதுவும் ஒறு “மதபோதகர் ” இவ்வாறு வக்கிரமாக பேசுவது கேவலமானது.இது அவரின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகின்றது! கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தனி மனித உறவுகளை ஒரு சாட்டிஸ்ட்டை ஐ (sadist) போல் வசை பாடுகிறார். தந்தை, மகள் உறவை கேவலப்படுத்தும், இவர் ஒரு மனநோயாளி.

  மதங்கள் தனி மனிதனையும் , சமுகத்தையும் “நல்வழிப்படுத்துவதாக” கூறி திரிகிறார்கள், ஆனால் நிஜத்தில் BJ ,அருணகிரி இன்னும் பல பல மனித இரத்தத்தில் உயிர் வாழும் கழுதைபுலிகளையே (Hyena) வரலாற்று காலம் முழுவதும் உருவாக்கியிருக்கிறது.

  விஸ்வருபம் மாற்று மத சமுகத்திற்கு, அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என பிழையாக அடையாளப்படுத்தும் என கோசமிடும் BJ , இயக்குனர் ஒருவரின் குடும்பத்தை விபச்சாரிகள் என வசைபாடுகிறார், “அதிஉத்தம அதிமேதகு” அம்மாவின் கணக்கின்படி ஏழரை (சனியன் அல்ல) லட்சம் உருப்பினர் உடைய கூட்டம் அல்லாஹு அக்பர் என கோசமிடுகிறது, இது விபச்சாரத்திற்கு “அளவற்ற அன்பாளன்” அல்லாவின் கருனை அவசியம் என மாற்று சமுகத்திறகு பிழையாக அடையாளப்படுத்தாதா?

  BJ க்கு என்ன நினைப்பு வெண்டிகிடக்கிறது தன் மதத்தை பற்றி மற்ற மதம்
  என்ன நினைக்கும் என்று: மதங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல மக்களுக்கு “சேவையாற்ற” என தெரியாதா , கிருஸ்துவம் எரிக்காத சூனியகாரிகளா ? இந்துக்கள் மூட்டாத சதியா? பௌத்தம் பார்க்காத இரத்தமா? இஸ்லாம் செய்யாத அடிமை வியாபாரமா? யூதத்திற்கு தெரியாத சிலுவையின் அளவா? பூச்சியத்தை எவ்வளவு பெரிதாக போட்டாலும் பெருமதி ஏனோ பூச்சியம் தான். எனன வித்தியாசம் என்றால் சில மதங்கள் மக்கள் சேவையில் ஓய்வு பெற்றுவிட்டன சிலது இன்னும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என தெடர்ந்து கொண்டிருக்கிறது.

  • வெல்கம் சுந்தர்! இதைத்தான் எதிபார்த்தோம், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவன் குடும்பத்தை வசைபாடுகிறார் என்று வரிந்து கட்டும் நீங்கள், அதே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எங்கள் வேதவசனங்களை இன்னும் வணக்க வழிபாடுகளை கேலி கூத்தாக்கிய விஷயத்தில் வீரம் காட்டவில்லையே, ஏன் ? கமல் மதங்களின் மீது நம்பிக்கை இல்லை
   என்று கூறுவதாலா ? மதம் சாராத உங்கள் பேச்சாளர்கள் ஆவடி மனோகர் போன்றோரெல்லாம் பேசாததையா ? இவர் பேசிவிட்டார்.

   உங்களை சாடாத ஒரு விஷயத்திற்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்து அடுத்தவரை கழுதைப்புலி என விமர்ச்சனம் செய்கிறீர், இதே போல் ஏன் அவரும் பேசியிருக்கக் கூடாது, பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், அவர் பேச்சை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை, ஆனால் உங்களைப் போல் ஏன் பிறரும் உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாது.

   இஸ்லாம் என்ன அடிமை வியாபாரம் செய்தது என்பதை தெளிவாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன், அடிமை வம்சமாக இருந்தவர்களை சகோதரர்களாக ஆகியதை நான் கேள்விபட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன், பெரியார் கூட 7 மணிக்கு ஒருவன் இஸ்லாத்தை தழுவினால் 7:05 க்கு அவனது தீண்டாமை தகர்ந்துவிடுகிறது என்று கூறியுள்ளார், தாங்கள் விளக்கினால் அது சரியாக இருக்கும்.

   வெள்ளையனிடம் அடிமை சாசனம் செய்த மக்களுக்கிடையில் நென்சை நிமிர்த்திய திப்புசுல்தாங்கள்தான் இங்கு உண்டு, இன்று வரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெறு சவாலாய் விளங்குவது நாங்கள்தான்.

    • அதை நீங்கள் பெரியாரிடம்தான் கேட்கவேண்டும் ஏனென்றால் அவரின் குறிப்பை நான் மேற்கோளாக காட்டிள்ளேன், அவருடைய கருத்துக்கு நான் விளக்கம் தரமுடியாது, வேண்டுமென்றால் அய்யா கி.வீரமணியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

   • திரு அப்துல் அவர்களே

    இஸ்லாத்தின் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் திருகுரான் என நம்புகிறீர்கள், அதனையே நடைமுறைப்படுத்துகிறீர்கள். பிறப்பிற்கும், இறப்பிற்கும் திருகுரானில் இருந்தே வேத வசனங்களை ஓதுகிறீர்கள். திரைப்படத்தில் மரணதன்டனை நிறைவேற்றுவது போல் ஒரு காட்சியில் மரணதன்டனைக்கு முன் வேத வசனங்கள் ஓதப்படுகிறது. ரீசானாவின் படுகெலையின் முன்னும் வேதவசனங்கள் ஓதப்பட்டது, அதை உலகமெ பார்த்து கொண்டிருந்தது. நிற்க சவுதி அரேபியா நிஜத்தில் நிகழ்த்தினால் சரி, அதை படத்தில் காட்டினால் பிழையா ?

    சில வேளைகளில் சரத்தை மாறி ஓதியிருக்கலாம். நரகத்திற்கு போ என்பதற்கு பதிலாக சொர்க்கத்திற்கு போ என்று. (மதங்களின் கொள்கைபடி நலிவுற்றவருக்கு நரகத்தில் தானே இடம் இருக்கமுடியும்)

    வழிபாடு தலங்களில் அவர் அவர் மதத்திற்கு ஏற்றபடி மந்திரங்களை சொல்லி வணங்குவீர்கள். இதை படம்பிடுத்து காட்டுவதில் என்ன தவறு?

    மற்றொரு காட்சியில் ஒரு சிறுவன் கண்களை கட்டிய படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் பெயரை சரியாக சொல்லுவான். இது மத நிந்தனையா? இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் சிறுவர்கள் வானத்தில் பறக்கும் விமானத்தின் சத்தத்தை கொண்டு பெயரில் இருந்து அதனுடைய குணாதிசயங்கள் வரை சரியாக சொல்லுவார்கள்.

    இது சமூகத்தின் அவலம்!.

    இது இவர்களின் மேல் மதத்தின், இனத்தின் , நிறத்தின், பொருளதாரத்தின் பெயரால் நடக்கும் மானிடத்திற்கு எதிரான கொடுரம். இதற்கு நாங்கள கையாலாகதவர்களாக மௌன சாட்சியாக இருக்கிறோம். இதை மறைப்பதில் என்ன பயன்? இதற்கு நான் நீங்கள், கமல், BJ, அம்மா, அய்யா, வினவு, மறறும் 600 கோடி மக்களும் அவர் அவர் முகத்தில் அவர் அவர்களே காறி உமிழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு மனிதரின்,அவர்களின் சமுதாய கருத்திற்கு ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க நாங்கள் யார் ? ; BJ தனிப்பட்ட வாழ்வை அல்லவா கேவலமான முறையில் விமர்சிக்கிறார். BJஒரு தனி மனிதர் அல்ல; அவரை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள், இது பிழையான முன் உதாரணம் ஆகாதா ? யாராக இருந்தாலும் அது பிழை ஆவடி மனோகர் என்றால் என்ன ஆண்டவன் என்றால் என்ன, பிழை பிழையே.

    கழுதைப்புலி ஒரு கோழை மிருகம், அதன் உருவ அமைபபு மற்ற விலங்குகளுக்கு அருவறுப்பை ஏற்படுத்தும். பலசாலியான சிங்கங்களே இதை கண்டால் ஒதுங்கி போய்விடும். சிங்கம் துணிந்து மோதி பார்க்கும் வெற்றியும் பெறும், தோற்று அழிந்தும் போய்விடும், ஆனால் கழுதைப்புலி மோதுவதும் இல்லை,தோற்று போவதும் இல்லை காலங் காலமாக அடுத்தவரின் பலவீனத்தில் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.
    உதாரணம். மதங்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்

    இஸ்லாத்தின் அடிமை வியாபாரம் பற்றி என்னைவிட திரு சாகித் நனறாக அறிவார். அவர் தொடர்பில் இருந்தால் பதில் கூறலாம், அல்லது கீழ் கண்ட சுட்டியில் போய் பார்க்கவும்.

    http://paraiyoasai.wordpress.com/

    திப்புசுல்தான் ஒரு மாவீரர். ஏவுகனை தொழில்நுட்பத்தின் முனனோடி. அவர் மத உணர்வுகளை மூலதனமாக வைத்து ஆட்சி செய்யவில்லையே! அவர் என்ன ஷரியாத்தின் ஆட்சியா நடத்தினாரா்? மனிதத்தின் பெயரில் அரசாண்டார்.

    மீண்டும் ஒரு முறை இக்கட்டுரையை இதயத்தின் வாயிலாக படிக்காமல் மூளையின் வாயிலாக படியுங்கள். ஏகாதிபத்தியத்திற்கு சிறு விளக்கம் கிடைக்கலாம்.

    ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

    • திரு.சுந்தர் அவர்கள் கருத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார்,

     மரண தண்டனையை படத்தில் காட்டினால் தவறா ? என்றால், ரிஷானா விஷயத்தில் ஒரு அரசாங்கம் தண்டனை வழங்குகிறது அதனை காட்டுவதற்கும் ஒரு கும்பல் மதவெறியை மனதில் வைத்துக் கொண்டு மதச்சாயம் பூசுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

     ரிஷானா விஷயத்தில் அந்தப்பெண் தவறு செய்ததாக அரசாங்கம் அறிவித்து இறுதி நேரத்திலும் சம்மந்தப்பட்ட குடும்பத்தை நாடியுள்ளது. அந்தப் பெண்ணுக்காக இறந்த பிறகு அனுதாபம் தேடும் மக்கள் தண்டனை உறுதி செய்தவுடன் ஏன் தூதரகம் சார்பாக வளுவாக எதிர்க்கவில்லை. அன்றே, ஒவ்வொருவரும் இப்படி கண்டனக்குரல்களை சம்மந்தப்பட்ட நாட்டின் தூதரகங்கள் சென்று கொடுத்திருந்தால் ( ஏறக்குறைய பல மாநிலங்களில் கூட சவூதி தூதரகம் உள்ளது ) அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும் அல்லவா ? செத்த பிறகு மாலை அணிவிப்பதில் என்ன பயனென்று தெரியவில்லை.

     பல இஸ்லாமிய நாடுகளில், பணம் மற்ற நாடுகளில் செய்யும் வேலையை செய்கிறது என்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. எவருக்கும் வால்பிடிக்க நான் விரும்பவில்லை. எந்த ஒரு நாட்டிலும் இயற்றப்பட்ட சட்டம் கடுமையானதே, ஆனால் அதை ஏமாற்றுபவர்களையும், தவறாக பயன்படுத்துவோறும்தான் கண்டனத்திற்குறியவர்கள்.

     ரிஷானா விஷயத்தில் முறையாக விசாரனை செய்ததாக ஒரு அரசாங்கம் சொல்கிறது, அவர்கள் சரியான விசாரனை செய்யாமல் ஒற்றைச் சார்பாக நடந்திருந்தால் அவர்களும் தண்டிக்கப்பட கூடியவர்கள், அதற்காக சட்டம் தவறு அல்ல.

     ஆப்கனில் தாலிபான்கள், தங்கள் குடும்பங்களை அமெரிக்க நாய்கள் சூரையாடியதால் தங்கள் உணர்ச்சிக்கு இடமளித்து விட்டார்கள். பதிலிக்கு களத்தில் இறங்கி போராடுவது தங்கள் கடமையாக அவர்களே நியமித்து கொண்டார்கள். வெளி நாடுகளில் ஆப்கானிஸ்தானியர்களுடம் வேலை செய்பவர்களுக்கு தெரியும், அவர்கள் படிப்பறிவு இல்லாமல் எவ்வளவு பாமரராய் வாழ்கிறார்கள் என்று, ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அரை வயிற்று கஞ்சிக்கு அடிமை சாசனம் செய்யும் அடிமாடுகள்.

     கண் முன்னே! துப்பாக்கி முனையில் ராணுவம் தன் மனைவியை, மகளை, கூட்டாக கற்பழித்து விட்டு, பெண்ணுறுப்பை சொல்ல முடியாத வார்த்தைகளால் வாட்டி குற்றுயிராக கிடத்திவிட்டு போகும் காட்சியை கண்ணெதிரே பார்த்து விட்ட எவரும் எப்படி முடிவெடுப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதற்காக அவர்களின் உணர்ச்சி வசத்திற்கு மார்க்கம் பொறுப்பாகாது.

     இதை எல்லாம் தெளிவாக சொல்லி படம் எடுத்திருந்தால் அனைத்து காட்சிகளும் ஒளிபரப்பப்படட்டும், அதை விடுத்து பெண்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று கருத்தை திணிப்பதும், அப்படி நடந்தால் அதற்கு வருந்துவார்கள் என்றும் பொய் சொல்லி படமெடுத்து அமெரிக்கர்களை திருப்திபடுத்த எங்களை பயன்படுத்த நாங்கள் விடமாட்டோம் என்றுதான் சொல்கிறோம்.

     இதை கம்யூனிஸம் பேசும் எவரும் ஏன் கமலிடம் கேட்கக்கூடாது.

   • திரு அப்துல் அவர்களே

    இஸ்லாத்தின் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் திருகுரான் என நம்புகிறீர்கள், அதனையே நடைமுறைப்படுத்துகிறீர்கள். பிறப்பிற்கும், இறப்பிற்கும் திருகுரானில் இருந்தே வேத வசனங்களை ஓதுகிறீர்கள். திரைப்படத்தில் மரணதன்டனை நிறைவேற்றுவது போல் ஒரு காட்சியில் மரணதன்டனைக்கு முன் வேத வசனங்கள் ஓதப்படுகிறது. ரீசானாவின் படுகெலையின் முன்னும் வேதவசனங்கள் ஓதப்பட்டது, அதை உலகமெ பார்த்து கொண்டிருந்தது. நிற்க சவுதி அரேபியா நிஜத்தில் நிகழ்த்தினால் சரி, அதை படத்தில் காட்டினால் பிழையா ?

    சில வேளைகளில் சரத்தை மாறி ஓதியிருக்கலாம். நரகத்திற்கு போ என்பதற்கு பதிலாக சொர்க்கத்திற்கு போ என்று. (மதங்களின் கொள்கைபடி நலிவுற்றவருக்கு நரகத்தில் தானே இடம் இருக்கமுடியும்)

    வழிபாடு தலங்களில் அவர் அவர் மதத்திற்கு ஏற்றபடி மந்திரங்களை சொல்லி வணங்குவீர்கள். இதை படம்பிடுத்து காட்டுவதில் என்ன தவறு?

    மற்றொரு காட்சியில் ஒரு சிறுவன் கண்களை கட்டிய படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் பெயரை சரியாக சொல்லுவான். இது மத நிந்தனையா? இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் சிறுவர்கள் வானத்தில் பறக்கும் விமானத்தின் சத்தத்தை கொண்டு பெயரில் இருந்து அதனுடைய குணாதிசயங்கள் வரை சரியாக சொல்லுவார்கள்.

    இது சமூகத்தின் அவலம்!.

    இது இவர்களின் மேல் மதத்தின், இனத்தின் , நிறத்தின், பொருளதாரத்தின் பெயரால் நடக்கும் மானிடத்திற்கு எதிரான கொடுரம். இதற்கு நாங்கள கையாலாகதவர்களாக மௌன சாட்சியாக இருக்கிறோம். இதை மறைப்பதில் என்ன பயன்? இதற்கு நான் நீங்கள், கமல், BJ, அம்மா, அய்யா, வினவு, மறறும் 600 கோடி மக்களும் அவர் அவர் முகத்தில் அவர் அவர்களே காறி உமிழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு மனிதரின்,அவர்களின் சமுதாய கருத்திற்கு ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க நாங்கள் யார் ? ; BJ தனிப்பட்ட வாழ்வை அல்லவா கேவலமான முறையில் விமர்சிக்கிறார். BJஒரு தனி மனிதர் அல்ல; அவரை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள், இது பிழையான முன் உதாரணம் ஆகாதா ? யாராக இருந்தாலும் அது பிழை ஆவடி மனோகர் என்றால் என்ன ஆண்டவன் என்றால் என்ன, பிழை பிழையே.

    கழுதைப்புலி ஒரு கோழை மிருகம், அதன் உருவ அமைபபு மற்ற விலங்குகளுக்கு அருவறுப்பை ஏற்படுத்தும். பலசாலியான சிங்கங்களே இதை கண்டால் ஒதுங்கி போய்விடும். சிங்கம் துணிந்து மோதி பார்க்கும் வெற்றியும் பெறும், தோற்று அழிந்தும் போய்விடும், ஆனால் கழுதைப்புலி மோதுவதும் இல்லை,தோற்று போவதும் இல்லை காலங் காலமாக அடுத்தவரின் பலவீனத்தில் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.

    உதாரணம். மதங்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்

    இஸ்லாத்தின் அடிமை வியாபாரம் பற்றி என்னைவிட திரு சாகித் நனறாக அறிவார். அவர் தொடர்பில் இருந்தால் பதில் கூறலாம், அல்லது கீழ் கண்ட சுட்டியில் போய் பார்க்கவும்.

    http://paraiyoasai.wordpress.com/

    திப்புசுல்தான் ஒரு மாவீரர். ஏவுகனை தொழில்நுட்பத்தின் முனனோடி. அவர் மத உணர்வுகளை மூலதனமாக வைத்து ஆட்சி செய்யவில்லையே! அவர் என்ன ஷரியாத்தின் ஆட்சியா நடத்தினாரா்? மனிதத்தின் பெயரில் அரசாண்டார்.

    மீண்டும் ஒரு முறை இக்கட்டுரையை இதயத்தின் வாயிலாக படிக்காமல் மூளையின் வாயிலாக படியுங்கள். ஏகாதிபத்தியத்திற்கு சிறு விளக்கம் கிடைக்கலாம்.

    ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

    • எளிய மக்களுக்கு நரகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், எங்கள் இறைத்தூதரும் அவருடன் இருந்த நண்பர்களும் ஏழைகள்தான். அவருக்கு சொர்க்கம் என்று நாங்கள் நம்புகிறோம்.

     வழிபாட்டு தளங்களில் நடக்கும் வணக்க வழிபாடுகளை தாரளமாக படமெடுக்கட்டும் யாரும் எதிர்க்கவில்லையே !

     // சிறுவன் கண்களை கட்டிய படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் பெயரை சரியாக சொல்லுவான். இது மத நிந்தனையா?

     நாங்கள் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களில், நாட்டில் நடக்கும் எங்களுக்கு சம்மந்தமில்லாத பிரச்சினைகளில் எங்களை மாற்றுமத சகோதரர்கள் தீவிரவாதி என்று சொன்ன தருணங்களில் உள்ளளவு வெந்ததை உங்களால் உணரமுடியாது, அதே காயம் எங்களுடன் போகாமல் எங்கள் பிள்ளைகளையும் தொடரக்கூடாது என்பதே எங்களின் நிலை.

    • பிஜே செய்த தனிமனித விமர்ச்சனத்தை நாங்கள் கண்டித்த விஷயங்களை நான் பலமுறை குறிப்பிட்டு விட்டேன், இதே கேள்விகள்தான் மறுபடியும் வருகிறது. மன்னிக்கவும் நாங்கள் பிஜே-வை பின்பற்றவில்லை முஹம்மது நபி (ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறோம், பிஜே என்பவர் நபியின் போதனைகளை எங்களுக்கு எடுத்து சொல்லும் ஒருவர் அவ்வளவுதான். நபியின் போதனைகளை சரியாக சொல்லாத பலரை நாங்கள் தூக்கி எறிந்திருக்கிறோம் இவரும் அப்படி செய்தால் இவரையும் தூக்கி எறிவோம்.

     திரு.சாகித் அவர்களின் தொகுப்பை படித்துவிட்டு பிறகே என்னால் பேசமுடியும்.

     நான் மூளையின் வாயிலாகத்தான் படிக்கிறேன், தங்களின் அறிவுரைப்படி மீண்டும் ஒருமுறை படிக்கிறேன், இறைவன் நாடினால்.

   • neengala?

    appo russia ellam onnum seyyalayya?

    aprom yen russia afghanistana invade pannappo neenga america kitta stinger missile vaangi sandai potteenga?

    Tipu sultan yen france kitta porul vaangi sandai pottaru?

    • துலுக்கன் கடையில் பொருட்கள் வாங்காதே என்று சொல்லக்கூடிய ராமகோபாலனும் அரேபிய பெட்ரோல், டீசலை நிரப்பித்தான் பயணம் செய்கிறார், அதற்காக அவர் பயணம் செய்யக்கூடாது என்று சொன்னால், அது வாதத்திற்கு சரியாகுமே தவிர, சாத்தியமாகாது, அதை போல் திப்புசுல்தான் நிலையும் அதுதான்.

     ரஷ்யா ஆப்கனை தாக்க வந்தபோது என்ன நடந்தா வந்தார்கள், அவர்கள் எந்த எண்ணெய் வளத்தை உபயோகித்தார்கள், இன்றும் எதை உபயோகிக்கிறார்கள், அது இல்லாமல் நடந்து வரஸ் கொல்லுங்களேன் பார்ப்போம், மீண்டும் சொல்கிறேன், மறுப்பு தரவேண்டும் என்பதற்காக பேசவேண்டாம்.

      • ரஷ்யா (!) வெனிசுலா (!) நைஜீரியா (!) ஓகே. 63,760,000 பிபிஎல்/ ஒரு நாள் உலக ஏற்றுமதி அளவு , இதில் சவூதி 21,304,469 பிபிஎல்/ ஒரு நாள் ஏற்றுமதி அளவு. ஏறக்குறைய 3 ல் 1 பங்கு, மற்ற நாடுகளின் ஏற்றுமதியை காண

       http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_oil_exports

       இதில் ரஷ்யா, தனது ராணுவ தளத்தை நிறுவியுள்ள மேற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்தே எண்ணெய் பெற்று வருகிறது. அது மட்டுமல்ல, வீட்டோ பவர் கொண்ட நாடுகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நாடுகளும், ராணுவ தளங்களுக்கு இங்கிருந்தே பெறுகின்றன், நன்றாக இணைய தளங்களை பாருங்காள் தெரியும்.

       ஈரான் என்ன கிருஸ்தவ நாடா ?

      • நான் திப்புசுல்தான் சம்மந்தமாக சொன்ன கருத்துக்களை மறுபடியும் பாருங்கள், அவர் வெள்ளையர்களை எதிர்த்த துணிச்சலைத்தான குறிப்பிட்டேன், அவரும் சராசரி ராஜா என்றால் புரியவில்லை. ராஜாவில் என்ன சராசரி, விகிதாச்சாரங்கள்.

   • ஆற்காடு நவாப் பரம்பரையை விட்டுவிட்டீர்களே. துரோகத்தில் எல்லோரும் ஒன்றுதான். அங்கு ஒரு மீர்ஜாபர், இங்கு ஒரு எட்டப்பன். அங்கு ஒரு ஆற்காடு நவாப், இங்கு ஒரு சரபோஜி, தொண்டைமான்

 26. வினவு ஒரு கலுசடை

  கிணற்று தவளை சரியாக சொன்னீர்கள் அப்துல் அவர்களே ………
  சிலருக்கு தினமும் யாரைபற்றியவது உளறவில்லைஎன்றால் தூக்கம் வருவதில்லை . எங்காவது அறிதுகொண்டே இருக்கும். நம்ம வினவு ஆசிரியருக்கும் அப்டிதான் இஸ்லாத்தை பற்றி கேவலமாக பேசவில்லை என்றால் அவர்களின் அரிப்பு தீர்வதில்லை. போலி சமத்துவம் பேசும் இதுபோன்ற கேடுகேட்டவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை.

 27. MR. ABDUL

  இன்று வரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெறு சவாலாய் விளங்குவது நாங்கள்தான்.

  what does this mean? who are that WE?

  • இதில் என்ன சந்தேகம்? இதைப் படிக்கும் போது இரட்டைக் கோபுரம்தானே எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது!

   • இரட்டை கோபுரத்தை தகர்த்தது ஒஸாமா அல்ல யூதர்கள் என்று அந்நாட்டு மக்களே போர்க்கொடு தூக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் கிணற்று தவளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை, வேண்டுமென்றால் மின்னஞ்சல் முகவரி தந்தால் அனுப்பி வைக்கிறேன்.

    நானும் கட்டிட கலை நிபுனராகத்தான் பணி புறிகிறேன், எனக்கு தெரிந்து மேலை நாடுகளில் ஒரு கட்டிடம் அதுவும் 100 மாடிகள் உள்ள கட்டிடம் என்றால் நிச்சயமாக, குறைந்த பட்சம் 3 அடுக்குகளுக்கு ஒரு முறை பாம் வைக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் ஒரே சீராக உடைந்து விழாது. உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்பீர்கள், நான் வெளி நாடுகளில் வேலை செய்தவன், அங்கு பொதுவாக 20 வருடங்களுக்கு மேல் ஆன இன்னும் காலாவதியான கட்டிடங்களை இப்படி செய்து உடைப்பது வழக்கம்.

    ஆனால் 2 சிறிய விமானங்கள் மோதுகிறது அதும் 70 அடுக்குகளுக்கு மேலே, அதில் கீழ் வைரை அடுக்கடுக்காக உடைகிறது என்றால், பாமர மக்களை ஏமாற்றலாம். அதற்கு ஒரு பதில் அதில் பாம் இருந்தது, அப்படி இருந்திருந்தால் அந்த தளத்திலிருந்து கீழே 10 அடுக்குகள் விழலாமே தவிர அனைத்தும் விழாது.

    இன்னும் அந்த நேரத்தில் பணியில் யாரும் இல்லை, பணி நேரத்தில் 8000 யூத பணியாளார்கள் சொல்லி வைத்தார்போல் வேலைக்கு சொல்லாமல் இருந்தது, உங்களைப் போல் முஸ்லிம்களை வெறுப்பவர்கள் நம்பலாம், ஆனால் அமெரிக்க கிருஸ்தவர்களே நம்பவில்லை. அது உங்களுக்கு எப்படி தெரியும் என்பீர்கள், தெரிய விரும்புவோம் மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சயமாக அனுப்பி வைக்கிறேன், இறைவன் நாடினால்.

     • Conspiracy theories are nice to hear. But won’t live up to facts. //

      of course , but we are not teaching conspiracy, they (anti islamic group) trap conspiracy on us.

      We don’t care \\ mohammad is a Catholic conspiracy or Jewish conspiracy \\ Bcaz we don’t have ambiguity. He is great Roll Model for all

     • Dear! i am also advising you don’t eat american’s shit! ok, Bcaz i clearly mentioned there, foreign countries how to demolishing high raised buildings, what are the things need. 9/11 possible or what ? you can check websites or youtube regarding to demolish bldg. then you know.

      But you just gave a link, if you need thousands of links about 9/11 jews work, can you just type this word to google and search it, then you know. Don’t try to prove your silly thoughts, Like this. US authorized website & authorized circular confirmation.
      we won’t bcaz that criminals are trying to hide their’s mistake.

      Osama didn’t accept this. What he said, 9/11 – we were not done this, i congrats who was done this.

      where muslims celebrating that, show me your proofs. venom is not in our mind, rise this same question to Christians & Jews

      Read my comment 33.2.1.2

  • That means Muslims, what else. In our leaders, earlier sadham, king Faizal, recently Iran.
   அமெரிக்காவின் ஒரு கடித மிரட்டலுக்கு பயந்து ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பல நாடுகள் நிறுத்த, அமெரிக்க போர் கப்பல்கள் ஹோர்மூஸ் அருகே நிறுத்தப்பட்டும், துணிச்சலாக நிற்கும் நிஜாத்தியை கூறுகிறேன். அமெரிக்க தூதரகத்தை பாதுகாப்பது தங்கள் தேசபக்தி என்று நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில், அந்த தூதரகங்களை துச்சமாக என்னிய எங்களை சொன்னேன்.

   • //That means Muslims, what else. In our leaders, earlier sadham, king Faizal, recently Iran.// ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல.கமல் சொல்லுறது சரி தான் போல.
    அமெரிக்கா – இஸ்ராயில், முஸ்லிம் நாடுகளின் உதவி,பங்களிப்பு இல்லாமலா மற்ற முஸ்லிம் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது.

    • முஸ்லிம் நாடு என்ற சொல்லிக் கொள்ளும் சவூதி, இன்னும் பல நாடுகள் அமெரிக்காவின் தூதரகமாகத்தான் செயல்படுகின்றன, இதில் எனக்கும் மாற்று கருத்து கிடையாது, அதனால்தான் நான் சவூதி என்று கூறாம கிங் பைசல் என்று குறிப்பிட்டிருந்தேன். முழு நாட்டையும் குறிப்பிட்டு சொல்ல எனக்கு தெரியாதா என்ன ?

     கிங் பைசல் அமெரிக்க எதிப்பின் போது கூறியது:

     என் நாட்டு எண்ணெய் உற்பத்தியை நிர்ணயம் செய்ய நீ யார் ? மற்ற நாடுகள் எங்களுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என சட்டம் போடப்போடுவதாக கூறுகிறாய், போட்டுக் கொள், ” எங்கள் முன்னோர்கள் ஈத்தம் பழத்தையும், தண்ணீரையும் உண்டு வாழ்ந்தவர்கள், நாங்கள் அதற்கு தயார், முடிந்ததை செய்துக் கொள் ” என்று தைரியமாக கூறினார்.
     அந்த தைரியத்தை நான் பார்க்கிறேன், நாட்டை அல்ல.

     எங்களை பொறுத்த வரை மக்கா, மதீனா என்ற இடங்கள்தான் புனிதமானவையே தவிர, அந்த மக்கள் அல்ல

    • ஒஸாமாவை வளர்த்து விட்டதும் அமெரிக்காதான், அவரை அழித்ததும் அமெரிக்காதான். ஈரானை தாக்க சதாமுக்கு போர்தளவாட உதவி செய்ததும் அமெரிக்காதான், அதே அணுகுண்டுகள் அங்கு உள்ளதாக சொல்லி அழித்ததும் அமெரிக்காதான். அதனால்தான், இனி அவர்களை ஆதரிக்கும் நாடுகள் தெரிந்து கொள்ளட்டும், அவன் பிறரை பயன்படுத்துவது அவனது நாட்டின் வளர்ச்சிக்காகவே, காரியம் முடிந்துவிட்டால் கருவேப்பிலைதான். கமல் கூஜா தூக்கினாலும், யார் தூக்கினாலும் அவரது நிலை இதுதான்.

   • please dont include yourself amongst arabs and persians and turks,for them u r a brown man and a slave.nothing more.

    Iran is not alone,they r supported by Russia and China as a counter balance.

 28. அப்துல் நீங்கள் கூறுவதைத்தான் சுந்தரும் கூறுகிறார் (அப்படி நினைக்கிறேன்). எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உள்ளன, அதை அம்மததுகாரர்கள் தான் களையவேண்டும். வெளி ஆட்கள் வந்து இது செரியில்லை அது செரியில்லை என்பது அசிங்கம். உங்கள் BJ போல எங்கள் மதத்தில் நிறைய கிறுக்குகள் இருக்கின்றன. வினவில் தற்பொழுது வரும் விஸ்வரூபம் பற்றிய பதிவுகளில் ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களை ‘நீங்கள் பெரிய ஒழுக்கமா?’ என்று கேட்பது தான் காமெடி! இன்றைக்கு இஸ்லாமில் உள்ள பெண் சுதந்திர மறுப்பு நூற்றாண்டுகளாக ஹிந்து மதத்திலும் கிருஸ்துவத்திலும் இருந்து கொண்டிருக்கிறது, காலம் தான் ஒரே பதில்.

  குடிக்க தண்ணி கிடையாது இந்த வருடத்தில். எந்த சாமியாவது அருள் புரிஞ்சா சரி!

  • for me the worst thing PJ ever said was that,it is allowed to marry your straight cousin like chitti’s daughter because the fathers DNA is different.

   that was atrocious.

 29. மதமும், கடவுளும் எவனோ ஒரு முட்டாள் தன்னுடைய சுய நலத்துக்காக உண்டாக்கியது. ஒரு முட்டாள் உண்டாக்கிய கடவுளுக்கும், மதத்துக்கும் சகமனிதன் அடித்துக்கொண்டு சாக வேண்டியதில்லை.கமல் சினிமா படம் எடுக்கிறான் விருப்பம் இருந்தால் ரசி இல்லை என்றால் விடு. ஒருவனின் படைப்பை மதச்சாயம் பூசபட்ட கண் கொண்டு காண்பது தவறு.

 30. “That means Muslims, what else. In our leaders, earlier sadham, king Faizal, recently Iran.
  அமெரிக்காவின் ஒரு கடித மிரட்டலுக்கு பயந்து ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பல நாடுகள் நிறுத்த, அமெரிக்க போர் கப்பல்கள் ஹோர்மூஸ் அருகே நிறுத்தப்பட்டும், துணிச்சலாக நிற்கும் நிஜாத்தியை கூறுகிறேன். அமெரிக்க தூதரகத்தை பாதுகாப்பது தங்கள் தேசபக்தி என்று நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில், அந்த தூதரகங்களை துச்சமாக என்னிய எங்களை சொன்னேன்.” Should Indian Muslims be proud of what other country Muslims do (good or bad)?” This is like many Indian tamilians being/trying to be proud of LTTE acts in srilanka!

 31. கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுள்ளாக அடித்துக் கொள்கிறார்கள், சரிதான், ஆனால் கடவுள் இல்லை என்று சொன்ன திராவிட கழகமும் அடித்துக் கொண்டு பல இயக்கங்களாக சிதறவில்லையா, சமீப நிகழ்வு, சுப.வீரபாண்டியன் புதிய இயக்கம் தொடங்கவில்லையா ?

  பெரியார் சிலையை உடைத்ததாக சொல்லி சாலை மறியல் மற்று போராட்டம் நடத்த வில்லையா ?

  ஒரு கல்லுக்கு ஏன் 5 ரூபாய் பூஜைப்பொருளை வீண் செய்கிறீர்கள் அதனை ஏழை மக்களுக்கு கொடுக்கலாமல்லவா ? என்று கேட்டார் பெரியார், ஆனல் அவரது சிலைக்கே 1000 ரூபாய் மதிப்பிலான பல மாலைகள் போடப்படுகிறது இதை ஏழகளிடம் கொடுத்தால் அவர்கள் பசியாறமாட்டார்களா ?

  அதே பகுத்தறிவை கூறிதான், அண்ணாவும், பெரியாரும் பிரிந்தார்கள், அதே பகுத்தறிவு குடும்பத்தில்தான் பதவி சண்டை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

 32. Hi all,

  please read the below news carefully . This is an example of justice in GULF.

  This is news on(2013-01-31).

  PROSECUTORS have dropped a rape case against a Bahraini sponsor because his alleged victim waited five months to file a complaint. The Nepali housemaid claimed she was repeatedly harassed by the retired school teacher, 64, and sexually
  assaulted twice.

  However, prosecutors said the rape charge had been dropped because she did not report the attack immediately.The maid stated she had been too scared to inform police, according to court documents.
  “My father was always coming on to the maid,” the sponsor’s 33-year-old son told prosecutors. “He then confessed to me once that he had raped her twice before.” The son said his father was in the maid’s room when his mother walked in and caught him as he was touching her body.

  “My mother entered the maid’s room and found her husband sexually harassing the victim,” he said.“She told the maid that her husband was not a good man and that she should stay away from him because he would hurt her.” The maid then told her sponsor’s wife, 62, that her husband had already raped her twice, according to court documents.

  “My mother became crazy when the maid told her my dad raped her twice,” said the son.“She went into the kitchen grabbed a big spatula and hit the maid on the head until she was bleeding heavily.“My father and my sister then came rushing and grabbed the maid and beat her up too.”All three suspects were released on bail and the trial was adjourned to February 12.

  for full reference please visit the below link:
  http://gulf-daily-news.com/source/XXXV/317/pdf/page07.pdf

 33. பி.ஜெய்னுலாபிதீன் போன்ற ஆட்களின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு தங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நிறைய நடுநிலை முஸ்லீம்களுக்கு இவரை கொஞ்சமும் பிடிக்காது. ”பொய்யுடைய ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே” என்பது போல் பொய்யை அழுத்திச்சொல்லி உண்மையாக்குபவர்.

 34. முன்னொரு காலத்தில் இவ்வளவு துணிச்சலான கட்டுரைகளை வெளியிட்ட வினவு இப்பொழுது, மறுமொழிகளில் இஸ்லாம் என்ற சொல் இருந்தாலே மட்டுறுத்தல் செய்து விடுகிறது, அப்படியானால் இந்த இடைக்காலத்தில் வினவுக்கு என்ன நடந்தது, என்பதையறிய எனக்கு ஆவலாக உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க