’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

கடந்த பிப்ரவரி 2022-ல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார் ஹரிபூஷன் தாக்கூர்.

0
சரா பண்டிகையின் போது இந்துக்கள் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது போல் முஸ்லீம்களையும் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் கடந்த மே 7 அன்று கூறினார்.
“நம்முடைய இளைஞர்கள் வலுவாக இருக்க, நம் நாட்டு மக்கள் வலுவாக இருக்க, நமக்கு ஒரு அனுமன் ஜி தேவை. ராவணனின் இலங்கையை அனுமன் எரித்தது போல், பீகாரிலும், நாட்டையும் சுற்றித் திரியும் அரக்கன் போன்ற ராவணன்களும் எரிக்கப்பட வேண்டும். அரக்கன் போன்ற ராவணன்கள் என்பது நாட்டில் உள்ள மத மற்றும் பிற சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை குறிப்பதாக பலரால் பார்க்கப்படுகிறது” என்று அவர் தனது முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற “காஷ்மீர் இந்துக்களின் சொல்லப்படாத கதை” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் இந்த வெறுப்பு பேச்சுக்களை பேசியுள்ளார். நிகழ்ச்சியில் அனுமன் சாலிசா ஓதப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.
பீகாரில் உள்ள சீமாஞ்சல் பகுதி நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. கிஷன்கஞ்ச் அராரியா, பூர்னியா மற்றும் கதிஹார். இப்பகுதியில் 47 சதவிதம் முஸ்லீம்கள் உள்ளனர். பாதிக்கு பாதி முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் இந்த காவி பாசிஸ்டுகள் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
படிக்க :
’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !
கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் பாட்னா உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக குடியேறியவர்களை தங்க வைக்கும் தடுப்பு முகாம்களை பற்றி மாநில அரசிடம் கேட்டது. “சட்டவிரோத” புலம்பெயர்ந்தோரை குறிப்பாக வங்கதேசத்தை சார்ந்தவரக்ளை பற்றி புகார் செய்வது குறித்து கேட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வங்காளதேச எல்லையை ஒட்டிய வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் உள்ள மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதினார்.
கடந்த பிப்ரவரி 2022-ல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் அளித்த அறிக்கையில் கூறியுள்ளார். “இந்தியாவில் பயப்படுபவர்கள் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லுங்கள்… பெட்ரோல், டீசல் விலை குறைவு அங்கு சென்றால் இந்தியாவின் மதிப்பு அவர்களுக்குப் பிரியும்” என்று மேலும் கூறினார். அவரின் முஸ்லீம் விரோத கருத்துக்கு எதிராக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பீகாரி தொடர்ந்து முஸ்லீம் மக்களை ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்றும், அவர்களை ராவணன் பொம்மையை எரிக்கும் தசரா பண்டிகையை போல், எரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர்.
முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் மூலம் இந்துமதவெறியை தூண்டி கலவரங்களை நடத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். வெளிப்படையாகவே முஸ்லீம் மக்களை கொளுத்த வேண்டும் என்று பேசித் திரிகிறார் காவி பாசிஸ்ட் தாக்கூர். காவிக் கும்பலின் காணவு உலகமான இந்து ராஷ்டிரம் நிறுவப்பட்டு பாசிசம் அரங்கேற்றப்படுமானால், இந்த கொலைகள், சித்திரிவதைகள் மிகவும் கொடூரமாக இந்த காவி பயங்கரவாதிகளால் ஏவப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆகவே, நாடு முழுவதும் இந்துமதவெறி விஷங்களை கக்கிவரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளை, உழைக்கும் மக்களை அணித்திரட்டி, வீழ்த்துவதே நம் உடனடிப் பணியாக இருக்க முடியும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க