மத்திய பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் பாஜக ரவுடியால் அடித்துக்கொலை!
இது ஹிட்லரின் இன அழிப்பை போல் ஒரு முன்னோட்டம்!
டந்த மே 21 அன்று மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், முதியவரைப் பார்த்து ‘உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்’ என்று கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொல்லப்பட்ட முதியவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற எண்ணத்தில் தினேஷ் குஷ்வாஹா தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாஜக பிரமுகரால் அடித்தே கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் நீமுச் பகுதியைச் சேர்ந்த பன்வர்லால் ஜெயின் என அடையாம் காணப்பட்டுள்ளார்.
இந்த பிரச்சினையை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் அசோக் ஸ்வைன் (ஸ்வீடன், உப்பாசல் பல்கலைக்கழகம்) அவர்கள் பேசியது மிகவும் பொருத்தமாக இருக்கும். “முன்பெல்லாம் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர்களை அடித்துக் கொலை செய்தார்கள். பிறகு, இந்துப் பெண்களை திருமணம் செய்ததாக கூறி அடித்துக் கொலை செய்தார்கள். இப்போது முஸ்லீம்கள் போல் தோற்றம் அளித்தாலே கொலை செய்கிறார்கள்” எனக் கூறினார்.
படிக்க :
♦ தமிழகத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மற்றும் கொட்டடிக் கொலைகள் !
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
ஆம்! முதியவர் யாரென்றே தெரியாது! அப்படி இருக்கும்போது அவரினுடைய தோற்றத்தை வைத்தே பாஜகவை சேர்ந்த இந்தக் கிரிமினல் அவர் இஸ்லாமியர் என முடிவு செய்கிறான் பாஜக காவிக் குண்டர். பிறகு அவர் இஸ்லாமியர் என நினைத்துக்கொண்டு அவருடைய அடையாள அட்டையை கேட்டு அடித்து கொலை செய்கிறான்.
ஆம்! இது காவி பாசிசத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்தான்.
ஒரு தனி மனிதனை யார் என்று தெரியாமலே விசாரித்து அடித்துக் கொள்ள முடியுமென்றால் இவருக்கு இந்த அளவுக்கு துணிச்சலை யார் கொடுத்தது.
இதே மத்தியப் பிரதேசத்தில்தான் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் அதைத்தொடர்ந்து இந்து மதவெறிக் கும்பலின் அட்டகாசம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அரசானது இஸ்லாமியர்கள் மீது பழியைபோட்டு இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்தது. முன்பெல்லாம் இந்த இந்துமதவெறி கலவர கும்பல்தான் பல்வேறு தீ வைப்புகள் கலவரங்களில் ஈடுபடும் தற்போது அந்தப் பணியை மத்தியப்பிரதேச அரசே கையில் எடுத்துள்ளது.
முதியவரை அடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் குண்டர்களுக்கு துணிச்சலை கொடுத்தது இதே மத்தியப் பிரதேச அரசும் அதன் நடவடிக்கையும்தான்.
இதேபோன்ற நடவடிக்கைகள்தான் ஹிட்லரின் இனவெறி யூதர்களை கொள்ளவும்  பயன்படுத்தப்பட்டது. யூதர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள பல சோதனைகள் வைத்துள்ளார்கள் அதில் ஒன்று, யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவார்கள்.
எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிப்பார்களாம். இன்னும் இதுபோல் பல வழிமுறைகளை கையாண்டு யூதர்கள் யார் என கண்டுபிடிப்பார்கள் நாஜிகள்.
இப்படிப்பட்ட வேலையைத்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரக் குண்டர் படை தொடங்கி வைத்துள்ளது என்பதையே மேற்கண்ட முதியவரை கொன்ற சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த வன்முறையும் இனஅழிப்பும்தான், மக்களை மேலும் மேலும் பிளவுபடுத்தவும் மதவெறி போதையில் அழுத்தவும் இந்த காவி – கார்ப்பரேட் கும்பலுக்கு பயன்படப் போகிறது.
இந்த மதவெறி போதையானது, நம் நாட்டைப் பீடித்துள்ள தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் போன்ற கார்ப்பரேட் சுரண்டலைப் பாதுகாக்கவும் அதை மக்களிடமிருந்து மறைக்கவும்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கண் முன் உள்ள உதாரணம் இலங்கையில் நடக்கும் சம்பவம். ஆகவே, இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை எடுத்துக்கொண்டு மக்களிடம் செல்வோம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம். பாசிசத்தை வீழ்த்துவோம்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க