90 சதவீதம் உடல் ஊனமுற்றவர – நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாய்பாபா, நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சி மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சாய்பாபாவுக்கு 2007-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தனக்கு ஏற்படும் அடக்குமுறைகளை எதிர்த்து சிறையில் போராடி வருகிறார் பேராசிரியர்.
தனது சிறை அறையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள பரவலான காட்சிகளை பதிவுசெய்யும் சிசிடிவி கேமராக்களை அகற்றக் கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார் போராசிரியர். அந்த கேமராக்கள் அவரது குளியல் இடம், இயற்கை உபாதைகளுக்கான இடம் ஆகியவற்றை பதிவு செய்யும் நோக்கில் பொருத்தப்பட்டுள்ளன.
மே 21 அன்று சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பேராசிரியர் சாய்பாபா-வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேராசிரியர் சாய்பாபா பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“24 மணி நேர கேமரா கண்காணிப்பு என்பது அவரது தனியுரிமை, வாழ்க்கை, சுதந்திரம் ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும்” அதாவது, நிறுவப்பட்ட சிசிடிவி கேமராவில் கழிப்பறை, குளித்தல் மற்றும் அவரது உடல் செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் (24×7) பதிவு செய்கிறது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. தண்டிக்கப்பட்ட நபரின் உரிமைகள் கூட நிலைநிறுத்தப்பட வேண்டும்” என்று குழு கூறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியும், சகோதரரும் இதே கோரிக்கையுடன் மகாராஷ்டிர உள்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
பேராசிரியருக்கு பரோல் வழங்கப்படாதது, முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாதது, சிறைக்கு வெளியே தங்கும் இடம் அமைத்துதராதது, ஹைதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறைக்கு மாற்றுதல் போன்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, (கொரோனா ஊரடங்கின் போது) தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் வழங்கிய மருந்துகளையும், அவர்கள் பேராசிரியருக்கு அனுப்பிய புத்தகங்கள் மற்றும் கடிதங்களையும் உடனடியாக ஒப்படைக்கக் கோரி இதேபோன்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் பேராசிரியர் சாய்பாபா. அப்போதும் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உண்ணாவிரதப் போராட்டத்தின் முதல் நான்கு நாட்களில் சிசிடிவி கேமராவின் திசையை மாற்ற சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சாய்பாபாவின் வழக்கறிஞர் ஆகாஷ் சோர்டே கூறியுள்ளார்.
“சிறைத்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் வரம்பில் உள்ள கோரிக்கைகளை தீர்க்க, சாய்பாபா கடிதம் எழுத வேண்டும், அதை சிறை அதிகாரிகள் ஏடிஜிக்கு அனுப்புவார்கள்; சாய்பாபா, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருக்கு மற்றொரு கடிதம் எழுத வேண்டும் – சிறை அதிகாரிகள் அதை அனுப்ப ஒப்புக்கொண்டனர் – இதனால் அமைச்சரின் எல்லைக்கு உட்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும்; அதிகாரிகள் முன்பு மறுத்த தண்ணீர் பாட்டிலை அவருக்குக் கொடுக்க இப்போது தயாராக உள்ளனர்; மற்றும் மற்ற அனைத்து கோரிக்கைகளும் “சரியான நேரத்தில் ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்று போராசிரியரின் நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது உடல் மோசமடைந்த பிறகு கூறியுள்ளனர் சிறை அதிகாரிகள்.
பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர பேராசிரியரை இத்தனை கொடுமை செய்வதை யாவராலும் சகித்துக் கொள்ள முடியாது. சமூக விரோதிகள் அனைவரும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் பேராசிரியர் சாய்பாபா போன்றவர்களை சிறையிலும் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.