ந்தியன் ரயில்வே, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் அளித்த பதிலில், பராமரிப்புப் பணிக்காகவும் கட்டுமானப் பணிகளுக்காகவும் மட்டுமே 6,995 ரயில் சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் முதல் மே வரை 1,934 சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கு நிலக்கரி இயக்கமே காரணம் என தெரிவித்துள்ளது இந்தியன் ரயில்வே.
கடுமையான மின் பற்றாக்குறை காரணமாக, பயணிகள் சேவையை விட நிலக்கரி ரேக்குகளை நகர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் ரயில்வேக்கு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1,15,000 கோடி மதிப்பிலான 58 சூப்பர் கிரிட்டிகல் மற்றும் 68 முக்கியமான திட்டங்களை வழங்க தேசிய போக்குவரத்துக் கழகம் தயாராகி வருகிறது. இச்செயல்பாடுகள் நாடு முழுவதும் பயணிகள் ரயில்களின் இயக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது.
ஜனவரி முதல் மே வரை, ரயில்வே 3,395 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது. 3,600 பயணிகள் ரயில் சேவைகள் பராமரிப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது உச்ச கட்டத்தை அடைந்த மே மாதத்தில் கட்டுமானப் பணிகள் காரணமாக 1,148 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும், 2,509 பயணிகள் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
படிக்க :
♦ வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !
♦ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நிலக்கரி இயக்கம் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில் நிலக்கரி ரேக்குகளுக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக 880 அஞ்சல்/எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மற்றும் 1,054 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி ரேக்குகளுக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக, மே 2022-ல் மாதாந்திர சரக்கு ஏற்றுதல் 131.6 மில்லியன் டன்களை பதிவு செய்துள்ளது. பவர் ஹவுஸ்களுக்கு நிலக்கரி ஏற்றுமதி – உள்நாட்டு இறக்குமதி ஆகிய இரண்டும் – மே மாதத்தில் 11 மெட்ரிக் டன்களாக உள்ளது. இருப்பினும், 2019-2020-ம் ஆண்டில் ரயில் பயணிகளின் காத்திருப்போர் பட்டியலில் சராசரி வீழ்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. பயணிகள் துறையின் தேவை 8.4 பில்லியனாக இருந்தது.  பரபரப்பான நாட்களில், 13.3 சதவீத பயணிகளால் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைப் பெற முடியவில்லை.
ரயில்களில் பற்றாக்குறை, கடந்த சில ஆண்டுகளாக பணிகளின் டிக்கெட்டுகளுக்கான தேவை கடுமையான அதிகரித்துள்ளது. புதிய ரயில்கள் இல்லாததால் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வழக்குவதற்கு இந்தியன் ரயில்வே திணறி வருகிறது.
2021-22-ம் ஆண்டில், டிக்கெட் வாங்கிய 1.60 கோடி பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் பயணிக்க முடியவில்லை. இது பரபரப்பான அதிக பயணிகளை கொண்ட வழித்தடங்களில் ரயில்களின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.
பயணிகளிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான ரயில்களுக்கான கோரிக்கை எழுத்து வருகிறது. ரயில்வே பட்ஜெட் 2016-ல் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 800 புதிய ரயில்கள் மட்டுமே ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. சராசரியாக, ரயில்வே ஒரு நாளைக்கு 11,000 ரயில்களை இயக்குகிறது.
படிக்க :
♦ பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
♦ நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை
ஆனால் மேற்கண்ட புள்ளிவிவரங்களில் இருந்து பார்க்கும் போது இதில் 9000 ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. முன்பதிவு செய்யும் நடுத்தர பயணிகளை தவிர்த்து, முன்பதிவு செய்ய பணம் இல்லாமல், குறைந்த விலைக்கான பயணச்சீட்டை பெற்று தங்களுக்கு ஒதுக்கப்படும் பெட்டிகளில் குப்பைகளாக அடைபட்டு பயணிக்கும் மக்களின் நிலை இன்னும் மோசமானது.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் இந்த சூழ்நிலையில், ரயில்வே துறையும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, இந்திய ரயில்வே துறை நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு போராட வேண்டியது அவசியம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க