1977ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் இரு நகரங்களுக்கும் இடையிலான 497 கி.மீ. தூரத்தை முதல் நாளில் 7 மணி 5 நிமிடத்தில் கடந்தது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மற்றொரு அதிவிரைவு வண்டியான தேஜஸ், இந்த இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 6.30 மணி நேரத்தில் கடக்கும். இந்த அரை மணி நேரம் குறைய 42 வருடங்களாகியிருக்கிறது.

வைகை எக்ஸ்பிரசில் ஏசி சேர் கார் கட்டணம் 665 ரூபாய். தேஜஸ் ரயிலில் சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் 1035 ரூபாய். எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2110 ரூபாய். வைகையில் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் 180 ரூபாய்.

மீட்டர் கேஜ் தண்டவாளத்தில் 7 மணி நேரத்தில் இரு நகரங்களையும் இணைத்த வைகையின் வேகம் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டது. இப்போது அகலப் பாதையில் செல்லும் வைகை, 7 மணி 40 நிமிடங்களில் இலக்கைச் சென்றடைகிறது.

வைகை 9 இடங்களில் நின்று செல்கிறது. தேஜஸ் திருச்சி, கொடை ரோடு என இரண்டு இடங்களில் மட்டுமே நின்று செல்லும். தேஜஸிலும் இன்னும் இரண்டு மூன்று இடங்களைச் சேர்த்தால், அதன் வேகமும் கிட்டத்தட்ட வைகைக்கு இணையாகிவிடும். தேஜஸின் இந்தக் கட்டணம், அதிலிருக்கும் வசதிகளுக்காக மட்டும்தான் போலிருக்கிறது.

♦ ♦ ♦

மறுமொழிகள்:

Vediyappan M Munusamy நாடு போற போக்கே சரியில்லை.

Saravanan திமுக ஆட்சியில் மன்னார்குடி டூ சென்னை க்கு விடப்பட்ட ரயிலின் பெயர் உழவன் எக்ஸ்பிரஸ். ( உழவன் தமிழ் பெயர்,). தேஜசாம். சமஸ்கிருத பெயர்…

Ravi Senrayan முதலில் நம்மை ஆள்பவர்கள் நம்மை கெஞ்சும் நிலையில் வைத்திருப்பதே சிறப்பு அதற்குரிய ஆளுமை தலைவனை தெரிந்தாலும் தேர்வு செய்ததில்லை செய்வதுமில்லை.கண்டவன் காலில் விழுபவனை நாம் தேர்ந்தெடுக்காமல் விடுவதுமில்லை. நம் முதுகில் பயணம் செய்யும் தகுதி ” வடபுலத்தவனுக்கே இருக்கிறது என்பதே நமது தகுதி இழுக்கு என்பது நமக்கு என்று தெரிகிறதோ அன்றுதான் நமக்கு விடிவு .காங். பாஜகவை யார் ஆதரித்தாலும் “நாம்” ஒதுக்க வேண்டும். சமீபத்திய மத்திய அரசு வேலை வாய்ப்பில்1700 பேரில் 1600 பேர் வட இந்தியர்.தமிழக இளைஞர்கள் தூக்கத்திலிருந்து விழித்து வீர்கொண்டு எழுந்து போராடினால் மட்டும் தமிழும் தமிழகமும், தமிழ்நாடும் ” விளங்கும் “அதிமுக அரசு மண்டியிட்டு வேண்டும் தை விட “அம்மா” வழியில் உரிமையுடன் போராடினால் மட்டுமே தமிழ்நாடு காக்கப்படும். உரிமைக்கு குரல் .ஓங்கி ஒலிக்கட்டும். வேதனையில்…

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

Raja Rajendran முக்கியமான தகவல்கள். இதனால் அறியப்படும் இன்னொரு சேதி, இவன்கள் குறைத்த பல ஸ்டாப்பிங்க்ஸ் & 45 நிமிடங்களுக்காக நாம் பல நூறை எக்ஸ்ட்ராவாகச் செலவழிக்க வேண்டும். பணக்காரனா இருந்தா வண்டில ஏறு. போக, சென்னை மதுரைக்கு இடையே மட்டும் ஓடும் ரயிலுக்கு இவன்கள் வைத்த பெயர் தேஜஸ்.

Dakshinamurthy Kamatchisundaram எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் 2110.
அதற்கு விமான பயணம் சாலசிறந்த ஒன்று . நேரம் குறைவு.

Jaffersam Sathik பாஸ் எல்லாம் டிக்கெட் விலையை ஏத்துறதுக்கு பிளான். இன்னும் கொஞ்ச நாளில் இரண்டும் ஒரே பயண நேரம் மற்றும் ஒரே விலை.

Pro Moth 10 வருடம் முன்பு வைகையின் நிறுத்தங்கள் எக்மோர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி பின்னர் மதுரை.. அரசியல் வாதிகள் தங்கள் தொகுதிக்கு வசதியாக தாம்பரம், செங்கல்பட்டு, அரியலூர் போன்ற பல நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்… நிறுத்தங்கள் அதிகமானது பயண நேரமும் முறையே….

Samson Raja நடப்பது சேட்டு மார்வாடி அரசு -அவனுக சொகுசா போறதுக்கு தான் ரயில்விடுவானுக .சொகுசு ரயில் எல்லாம் சேட்டு மார்வாடிக்கே பிகானிர் மதுரை, திருச்சி, கங்காநகர் ,தேஜாஸ் அனைத்துமே AC

Hari Haran P S இந்த டிரயின் கொஞ்ச நாள் ல போயிடும்.. இல்லைனா, இன்னும் நாலு ஸ்டாபிங் போட்டு ரேட்ட கம்மி பன்னு வாங்க…!!

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்  முகநூல் பதிவிலிருந்து…