தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

0

ம்மு & காஷ்மீர் போலீசுத்துறையால் ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்ட “தேடப்படும் பயங்கரவாதி” மற்றும் “லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்” தலிப் ஹுசைன் ஷா, இந்த ஆண்டு மே மாதம் பாஜக கட்சியின் இரண்டு பொறுப்பாளர்களில் நியமிக்கப்பட்டவர்.

ஜம்மு & காஷ்மீர் பா.ஜ.க-வின் சிறுபான்மையினருக்கான சமூக ஊடகப் பிரிவு மற்றும் காவி கட்சியின் முக்கிய பதவிக்கு தாலிப்பை நியமிப்பதற்கான உத்தரவை, பாஜகவின் சிறுபான்மை மோர்ச்சாவின் ஜம்மு & காஷ்மீர் தலைவர் ஷேக் பஷீர் மே 9 அன்று வெளியிட்டார்.

ஜூலை 3 அன்று தலிப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது முகநூலின் சுயவிவரம் அகற்றப்பட்டது. ஏனெனில், அவர் பா.ஜ.க-வின் ஜம்மு & காஷ்மீர் தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்முவின் மக்களவை எம்.பி ஜுகல் கிஷோர் மற்றும் பிற மூத்த ஜம்மூ & காஷ்மீர் தலைவர்கள் மற்றும் காவி கட்சியின் செயல்பாட்டாளர்கள் ஆகியோருடன் அவர் இருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின.


படிக்க : உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவதும் காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!


தாலிபை நிராகரிக்க முற்படும் பாஜக, அவர் கட்சியின் உயர்மட்டத் தலைமையைக் கொல்லத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டுகிறது. “இந்தக் கைதின் மூலம் புதிய பிரச்சினை வந்துள்ளது. இது ஒரு புதிய மாடல் என்று நான் கூறுவேன் – பாஜகவில் நுழைவது, அணுகல் பெறுவது, ரெக்கார் செய்வது. போலீசுத்துறையால் முறியடிக்கப்பட்ட உயர்மட்டத் தலைமையைக் கொல்லும் சதி கூட இருந்தது” என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பதானியா தெரிவித்தார்.

ரஜோரி மாவட்ட பாஜக தலைவர் ராஜிந்தர் குப்தா, எந்தப் பின்னணியில் இருந்தும் யாரும் பாஜகவில் சேரலாம். “கட்சி வளர்ந்து வருகிறது, பலர் அதில் இணைகிறார்கள். கட்சியில் இணைந்த அனைவருக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், அவர் எங்கள் மூத்த தலைவர்கள் சிலருடன் படங்களைக் கிளிக் செய்திருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை என்று கூறினார்.

எந்த பயங்கரவாதிகள் – கிருமினல்கள் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்களாம். கூடாரம் யாருக்கானதோ அவர்களுக்குதான் அடைக்களம் இதுவார்கள் என்பதுதானே உண்மை.

தாலிப் பதவியை ராஜினாமா செய்ததாக காவி கட்சி கூறியுள்ள நிலையில், ஜம்மு & காஷ்மீரில் “பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக” காவி கட்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாடியுள்ளது.

“பயங்கரவாதிகள் கட்சியில் முக்கியப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அதன் ஆதரவை எப்படி அனுபவித்து வருகிறார்கள் என்பதை பாஜக நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். பரபரப்பான உதய்பூர் கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, ஆளும் பாஜகவின் தீவிர உறுப்பினரும் ஆவார். இப்போது தாலிப் உசேன் கைது செய்யப்பட்டு பாஜகவின் மூத்த அலுவலகப் பொறுப்பாளராக அடையாளம் காணப்பட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்று காங்கிரஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஜோரியில் நடந்த குண்டுவெடிப்புகளில் நான்கு பேர் காயமடைந்தனர், இதில் தாலிப்-க்கு தொடர்புடையது என்கிறது போலீசு. ரஜோரி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நடந்த மற்ற பயங்கரவாத வழக்குகளில் அவரது பங்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் பொதுமக்களில் ஒருவரை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


படிக்க : ‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !


ரஜோரியில் உள்ள கோட்ரன்கா பகுதியில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் தலிப் ஈடுபட்டுள்ளார். இதில் இரண்டு பேர் காயமடைந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 24 அன்று ரஜோரியின் புதாலின் ஷாபூர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் காயமடைந்ததற்கு தாலிப் பின்னணியில் இருப்பதாகவும் போலீசார் கூறினர்.

ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. இன்னும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் எத்தனைப்பேர்தான் அக்கட்சியில் உலவுகிறார்களோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை இந்நாட்டில் இருந்து ஒழித்தால்போது சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் மக்கள் கலவரங்களால் பாதிப்படையாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்பதில் ஐய்யமொன்றும் இல்லை.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க