மூன்று வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறும்போது, குறைந்த ஆதரவு விலைக்கான குழுவை அமைப்பதாக உறுதியளித்த எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 19 அன்று குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த குழுவை மத்திய அரசு அமைத்தது.
இருப்பினும், சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) விவசாயி சங்கங்களின் குடை அமைப்பானது, ஜூலை 19 அன்று குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான அரசாங்கத்தின் குழுவை நிராகரித்தது. இப்போது ரத்து செய்யப்பட்ட விவசாய விரோத சட்டங்களை ஆதரித்த “விவசாயி தலைவர்கள்” அதன் உறுப்பினர்கள். இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் விவசாயச் செயலர் சஞ்சய் அகர்வால் இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது.
குழுவை நிராகரித்த SKM தலைவர் அபிமன்யு கோஹர், “இன்று, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அரசியல் அல்லாத தலைவர்களின் கூட்டத்தை நடத்தினோம். அனைத்து தலைவர்களும் அரசாங்கத்தின் குழுவை நிராகரித்தனர். தில்லி எல்லையில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத விவசாயிகள் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை அரசாங்கம் குழுவில் சேர்த்துள்ளது. MSP குழுவில் சில கார்ப்பரேட் நபர்களையும் அரசாங்கம் உறுப்பினர்களாக ஆக்கியுள்ளது என்று” கூறினார்.
படிக்க : மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!
பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயத் தலைவர்களும், அரசாங்கம் ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை பின்வாசல் வழியாக திரும்பக் கொண்டுவர விரும்புவதாகக் குற்றம் சாட்டி; அக்குழுவைப் பற்றி அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாரதிய கிசான் யூனியன் தலைவர் மஞ்சித் சிங் தானர், “அரசாங்கம் வெறும் சம்பிரதாயமாகவே குழுவை அமைத்துள்ளது. எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்கான எங்கள் போராட்டம் தொடரும். எம்.எஸ்.பி விவகாரத்தில் தனி குழு அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருந்தது. குழுவில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் முன்பு மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததாக குற்றம் சாட்டினார். அரசாங்கம் பின்வாசல் வழியாக விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவர விரும்புகிறது” என்று கூறினார்.
அரியானா BKU (சதுனி) தலைவர் குர்னாம் சிங் சதுனி, “விவசாயிகள் MSP பற்றிய குழுவைக் கோரியுள்ளனர். ஆனால் பயிர் பல்வகைப்படுத்தல் போன்ற பல சிக்கல்கள் MSP சிக்கலை நீர்த்துப்போகச் செய்ய இணைக்கப்பட்டுள்ளன” என்றார்.
பஞ்சாப் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சதா, பஞ்சாப் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் குழுவில் இருந்து விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பஞ்சாபை வேண்டுமென்றே ஒதுக்கியதன் மூலம், மத்திய அரசு நமது மக்களை அவமதித்துள்ளது என்றார்.
மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியின் எல்லை பகுதிகளில் ஓராண்டிற்கும் மேலாக நடத்தப்பட்டதின் விளைவாகவே மோடி அரசு அச்சட்டங்களை திரும்பப்பெற்றுக்கொள்ள நிர்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும் திரும்பப்பெற்றுக்கொள்ளும் போது மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக குறைச்ச பட்ச ஆதாரவிலைக்கான குழு அமைக்கப்பதாக வாக்குறுதி அளித்தது.
ஆனால், அந்த குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களோ மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் மற்றும் மத்திய அரசை ஆதரிப்பவர்கள்; போராடிய விவசாய சங்க தலைவர்கள் அதில் நியமிக்கப்படவில்லை. எனவே இது மூன்று வேளாண சட்டங்களை புறவாசல் வழியாக மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி என்று SKM விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகின்றது. இந்த குழுவை பல்வேறு விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளனர்.
கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை தாரைவார்க்க துடியாய் துடித்து வரும் மோடி அரசு அதற்கான பல்வேறு வழிகளை செய்கிறது. காவி – கார்ப்பரேட் நலன்களை மட்டுமே தனது பிரதான திட்டமான கொண்டு, விவசாயிகளின் நலனை துளியும் மதிக்காத மோடி அரசை நாம் மோதி வீழ்த்தாமல் இந்திய விவசாயத்தை பாதுகாக்க முடியாது.
புகழ்
Sirabbana kannoddam