விவசாய சங்க தலைவர்கள் மீது காவிகள் தொடர் தாக்குதல் !

விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

0
பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் திக்கைத் மீது மை அடித்து, தாக்குதல் தொடுத்துள்ளது காவிக் கும்பல். ஒருவர் திக்கைத் முன் வைக்கப்பட்ட மைக்-ஐ கொண்டு அவரைத் தாக்கத் தொடங்குகிறார். அதற்குப் பிறகு, மற்றொருவர் திக்கைத் முகத்தில் மை வீசினார்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, அங்கு நாற்காலிகள் வீசப்பட்டு பெரும் பதற்றமாகியது. இத்தாக்குதல் குறித்து வெளியான காணொலிகளின் மோடி, மோடி என்ற கோஷங்கள் கேட்கின்றன. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) திக்கைத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான தலைவராக திக்கைக் இருந்தார். விவசாயிகளின் விடாபிடியாக போராட்டத்தின் காரணமாக மோடி அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், “திக்கைத் மீதான தாக்குதலின்போது அலட்சியமாக இருந்த போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்த தாக்குதலுக்கு நீதி விசாரணை வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.
படிக்க :
♦ உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !
♦ உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
இதேபோல், லக்கிம்பூர் கேரி படுகொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள தில்பாக் சிங் மீது கடந்த மே 31 அன்று இரவு உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மே 31 இரவு பாரதிய கிசான் யூனியன் மாவட்டத் தலைவர் தில்பாக் சிங் தனது காரில் கோலா கோட்வாலி பகுதியில் உள்ள அலிகஞ்ச்-முடா சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இத்தாக்குதல் நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சிங் வந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
“தாக்குதல் நடத்தியவர்கள் காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்க முயன்றனர். முடியாதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஓட்டுநர் உள்ள ஜன்னல் கண்ணாடியில் இரண்டு முறை சுட்டனர்” என்று சிங் கூறினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி லக்கிம்பூர் கேரியில் நடந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள சம்பூர்ண நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா. இதைக் கண்டித்து, லக்கிம்பூர் கேரி அருகிலுள்ள பகுதியில் அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீதுதான் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வெறித்தனமாக காரை ஏற்றி 4 விவசாயிகளை படுகொலை செய்தான். இச்சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருக்கும் விவசாய சங்க தலைவர்கள் மீது தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளையும், விவசாயத்தின் மீது அக்கறையின்றி செயல்படும் மோடி அரசு, விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல். விவசாயிகளை கொலை செய்ய முயற்சிக்கும் காவிக் குண்டர்களை அடித்து விரட்டுவோம். காவி – கார்ப்பரேட் பாசிச அரசை தகர்த்தெரிய உழைக்கும் மக்கள் படைகட்டி முன்னேறுவதே தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும்.
சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க