மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!

மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது.

0

மின்சார திருத்த மசோதா 2022-ஐ எதிர்த்து நாடுமுழுவதும் மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகஸ்ட் 8 போராட்டம் நடத்துவதற்கு முடிவுசெய்துள்ளனர்.

போராட்டம் தொடர்பாக மின் ஊழியர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “மின்சார (திருத்த) மசோதா 2022-ஐ அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ஆகஸ்ட் 08 ஆம் தேதி மக்களவையில், நாட்டின் 27 லட்சம் மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வேலையை விட்டு வெளியேறி நாள் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

“இந்த மசோதாவை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது மற்றும் நாடாளுமன்றத்தின் மின்சார விவகாரங்களின் நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்” என்று AIPEF (அகில இந்திய பவர் இன்ஜினியர்ஸ் ஃபெடரேஷன்) கோருகிறது.

AIPEF தலைவர் ஷைலேந்திர துபே கூறியதாவது: “நாடாளுமன்ற மரபுகளை மீறி மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போகிறது, இதனால் நாடு முழுவதும் உள்ள மின்சார ஊழியர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. மேலும், மின்சாரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது, ஆனால் மத்திய அரசு எந்த மாநிலத்திடமும் கருத்து கேட்கவில்லை என்று கூறினார். “மின்சார (திருத்தம்) மசோதா 2022 மூலம், மத்திய அரசு மின்சாரச் சட்டம் 2003-ஐத் திருத்தப் போகிறது, இது மின்சார ஊழியர்கள் மற்றும் மின்சார நுகர்வோர் மீது நீண்டகால பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது” என்று துபே கூறினார்.


படிக்க : அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !


“மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-இல் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட விநியோக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று ஒரு விதி உள்ளது. தனியார் துறையின் புதிய விநியோக நிறுவனங்கள் பொதுத்துறை வலையமைப்பைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும்” என்று AIPEF அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தனியார் நிறுவனங்கள் சில வீலிங் கட்டணங்களை மட்டும் செலுத்தி லாபம் ஈட்டுவார்கள். இதனால், அரசு நிறுவனங்கள் நிதி திவாலாகிவிடும்” என்று கூறப்படுகிறது.

மின்துறை அமைச்சர் ஆர்.கே. மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022 உடன் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தின் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்தும் என்றும் சிங்  ஆகஸ்ட் 5 அன்று தெரிவித்தார். 2022-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவடைய உள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரம் (திருத்தம்) மசோதா, சில்லறை மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்தும். மற்ற மாற்றங்களுக்கிடையில், மின்சாரச் சட்டத்தின் திருத்தம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் கட்டணங்களை திருத்துவதற்கு அனுமதிக்கும்.

மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது. ஆனால், தனியார்ம கொள்கையைத்தான் தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. தற்போது தனது வாழ்வாதாரத்திற்காக போராடும் உழைக்கும் மக்கள் – அரசு ஊழியர்கள் – செவிலியர்கள் – மாணவர்கள் – ஆசிரியர்கள் – தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைவோம்; நம் பொது எதிரிகளான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசத்தை களத்தில் இறங்கி முறியடிப்போம்!

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க