உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.

0

டந்த 2020 அக்டோபரில், த்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆதிக்கசாதி வெறியர்களால் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்களை தேசதுரோக வழக்கில் கைது செய்தது சிறையில் அடைந்தது யோகி அரசு. தற்போது வரை சிறையில் இருக்கும் மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் நீதிபதி ரவிகாந்த், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்யும்போது, ​​“முதலாவது பார்வையில் விண்ணப்பதாரர் கலவரத்தைத் தூண்ட முயன்ற குற்றத்தை செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார். சித்திக் மற்றும் அவருடன் பயணித்த அதிகூர் ரெஹ்மான், ஆலம் மற்றும் மசூத் ஆகியோர் கலவரங்களைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது என உத்தரப்பிரதேச காவல்துறையின் சமர்ப்பிப்புகளை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

“ஹத்ராஸுக்குச் செல்ல சட்டவிரோத வழிகளில் நிதி உதவி பெற்றார்”. கப்பனின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) தொடர்பான மலையாளத்தில் 47 ஆவணங்கள் மீட்கப்பட்டதாகவும் உ.பி.யின் அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதங்களை முன்வைத்தார்.


படிக்க : ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !


இந்த வழக்கில் சித்திக் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், ​​தொழில்முறை ஊடகவியலாளராக ஹத்ராஸுக்கு செய்தி சேகரிக்க சென்ற சித்திக் போலீசுத்துறையினரால் சட்டவிரோதமாக தடுக்கப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் வாதங்களை முன்வைத்தார். சித்திக் மற்றும் சிலர் “கலவரங்களைத் தூண்டுவதற்காக நிதி சேகரிக்க ‘Carrd.com’ என்ற இணையதளத்தை நடத்தி வருகின்றனர்” என்ற அரசுத் தரப்பு குற்றச்சாட்டையும் அவரது வழக்கறிஞர் நிராகரித்தார். மேலும், சித்திக்கிற்கு குற்றவியல் வரலாறு இல்லை என்றும், அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) விதிகள் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நீதிபதி ரவி காந்த், இந்த சமர்ப்பிப்புகளை நிராகரித்தார். “குற்றப்பத்திரிகை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தால், விண்ணப்பதாரர் குற்றம் செய்துள்ளார் என்பது முதன்மையான பார்வையில் வெளிப்படுகிறது” என்று உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஜாமீன் மனு தகுதியற்றது என்று தீர்ப்பளித்த நீதிபதி காந்த், அதை தள்ளுபடி செய்தார்.

அக்டோபர் 1, 2020 அன்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸுக்கு ஒரு தலித் பெண்ணின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்து புகாரளிக்கச் சென்று கொண்டிருந்தபோது சித்திக் கப்பான் உள்ளிட்ட நால்வரை ஹத்ராஸ் செல்லும் வழியில், ‘அறியக்கூடிய குற்றம் செய்யும் நோக்கத்தோடு’ சென்றதாகக் கூறி  ஊபா, ஐடி பிரிவுகளின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்தது உ.பி. ஆதித்யநாத் அரசு. உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை இந்த வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, அவர் “முஸ்லீம்களைப் பற்றி மட்டுமே புகாரளித்தார்” என்றும் “கலவரங்கள் குறித்து புகாரளிப்பதும் வகுப்புவாதமானது” என்றும் கூறியது.


படிக்க : ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !


பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் உ.பி போலீசுத்துறை எரித்தது. குற்றங்களை மறைக்கவும் குற்றவாளிகளை காப்பாற்றவுமே அதிகார வர்க்கத்தின் அடியாள் படையான உ.பி யோகி அரசு செயல்படுகிறது. உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.

முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஜனநாயக சக்திகளை யோகியின் காவி பாசிசத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்!

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க