மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கவிஞரான மகேஷ் கட்டாரே சுகம் என்பவருக்கு பினா முனிசிபல் கவுன்சில் (BMC) நோட்டீஸ் அனுப்பியது, அவருடைய வீடு “சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் இடிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
மகேஷ் கட்டாரே கூறுகையில், “பிரபாத்தின் தாய் மீரா கத்ரேயின் பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், எனது மகன் பிரபாத் கட்டரேவின் பெயர் நோட்டீஸை வழங்க பயன்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி மாநகராட்சியில் கட்டிட தளவமைப்பு அனுமதி போன்ற தேவையான கட்டிட அனுமதிகளை பெற்றுள்ளேன். மேலும், அன்றிலிருந்து நான் வீட்டு வரி செலுத்தி வருகிறேன். இதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அவருக்கு ஏன் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று கேட்டபோது, “மதுர் காலனியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சட்டவிரோதமானவை, ஆனால் எனக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு எனது வீடு இங்கு கட்டப்பட்டதில் இருந்து காலனியில் சாலை, குடிநீர், மின்சாரம், தகுந்த வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்.
படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
வகுப்புவாத மோதல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ள பின்னணியில் இது வந்துள்ளது. பாஜக ஆளும் பல அரசாங்கங்கள் தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்தி அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள கட்டாரே, அரசாங்கத்திற்கு எதிரான கவிதைகளுக்காகவும், உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகளை எழுப்பியதற்காகவும் அறியப்படுகிறார். ஹிந்தி மற்றும் பண்டேலியில் எழுதுகிறார்.
பொதுமக்களின் ஆதரவை பறை சாற்றும் வகையில், ‘நகர் பாலிகா சோ ரஹி பையா, பினா நக்ரி ரோ ரஹி பாய்யா’ [நகரசபையை காணவில்லை, பினாவில் வசிப்பவர்கள் அழுகிறார்கள்] போன்ற கவிதைகளை எழுதி பொது மேடைகளில் வாசித்தார்.
நோயியல் ஆய்வகத்தை நடத்தி வரும் தனது மகன் பிரபாத்தின் உதவியுடன் கட்டாரே முதலமைச்சரின் சேவை மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்துள்ளார். எவ்வாறாயினும், சேவை மையம் புகாரை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி, நகராட்சி கவுன்சில் அதிகாரி ஒருவர் காலனிக்கு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
“நான் புகாரை வாபஸ் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பைப் பெற்றேன்” என்று கட்டாரே கூறினார்.
படிக்க : உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !
கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய கிசான் சபாவின் இணைச் செயலாளர் பாதல் சரோஜ், “அவர் [கட்டரே] பிராந்தியத்தில் எதிர்ப்பின் குரல் மற்றும் புந்தேலி மொழியின் மிக உயரமான சமகால கவிஞர். ஆளும் அரசு அவரை கவிதைகளை தடுக்க விரும்புவதாகவும், எனவே வீட்டை இடிக்கும் நோட்டீஸ் மூலம் மிரட்டியதாகவும் தெரிகிறது” என்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.
புல்டோசர் நீதி எனும் சட்டவிரோத நடவடிக்கையை சட்டபூர்வமாகவே அமல்படுத்து பாசிசத்தின் கொடுங்கரங்களை அடித்து நொறுக்க உழைக்கும் மக்கள் படையாக அணிதிரள்வோம்!
சந்துரு