நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

2015 ஆம் ஆண்டு இன்னொரு செய்தி சேகரிப்பிற்கான அவனிடம் மீண்டும் விரிவாகப் பேச வேண்டி இருந்தது. அந்த வழக்கைப்பற்றி நான் எதுவும் எழுதப்போவதில்லை என்றாலும் திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைகளை முழுமையான உணர்வதற்காக முழுமையாக் கேட்டறிந்தேன்.

மூன்று ஆண்டுகள் கழித்து கொலம்பிய பல்கலைக் கழகத்தில் பத்திரிகையியலில் பட்டம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது அவனுடைய பயோடேட்டாவையும் அனுப்பி வைத்தேன். இந்துத்துவ போராளிகளும் இந்தியா முழுமையுமான அவர்களின் செயல்பாடுகளும் என்ற தலைப்பிற்கு தேவையான கண்ணோட்டத்தை நான் பிரேமியிடமிருந்து பெற முடியும் என்றே தோன்றியது. என்னுடைய கோரிக்கை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் ஒரு இந்து வாகன ஓட்டுனர், இந்து உதவியாளர் ஆகியோரை கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்தக் கட்டுரையானது 2020 ஏப்ரலில் வயர்ட் இதழில் வெளியாகியது.

பிரேமியும் அவனது கூட்டாளிகளும் என்னை எனக்கான இடத்திலேயே வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். முசுலீம்களைப் பற்றிய இந்து மேலாதிக்க கருத்துக்களை அவனுடன் பல சுற்றுக்கள் பேசிய பின்னரே அறிய முடிந்தது. 16 ஆம் நூற்றாண்டு, முகலாய அரசர் பாபர் காலத்திலிருந்து இந்து வன்முறை – இசுலாமிய ஏகாதிபத்தியம் தொடங்கப்பட்டது.

இது இந்துக்களின் அடையாளங்களை அழித்தது, பலரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தது. அனைத்து முசுலீம்களும் இந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக ரகசிய ஜிகாத்தை மேற்கொள்கின்றனர். சுனார் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த பிரேமி, சாதி உருவாக்கமே இசுலாமியமயத்தால் உருவானது என்ற கருத்தையும் கொண்டிருக்கிறான்.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

ஒருமுறை அவன் மற்றும் அவனது நண்பனான ராணாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ராணா “அலி ஜி, நீங்கள் ஏன் உங்கள் சமூகமான முசுலீம்களைப் பற்றிப் பேசுவதில்லை? இந்த நாட்டில் அவர்கள் பதட்டத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் தாய் நாட்டை வணங்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதில்லை” நெருப்பு தெறிக்க அவன் பேசினான்.

இன்னொருவனோ “இங்கே பெரும்பாலான கிரிமினல்கள் முசுலீம்களாக இருக்கின்றனர். அவர்கள் இந்துக்களுக்கு வெறுப்பினை உண்டாக்குகிறார்கள். முடிந்த அளவுக்கு நாங்கள் அமைதியாகவே இருக்கிறோம். நாங்கள் எதாவது எதிர்வினையாற்றினால் மதசார்பற்ற ஊடகங்களோ எங்கள் மீது பழி சுமத்துகின்றன.”

என்னை முசுலீம் சமூகத்தின் செய்தித்தொடர்பாளரைப் போன்று அணுகி இத்தகைய கேள்விகளைக் கேட்டனர்.

”முசுலீம்கள் இங்கே எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இங்கே வாழ வேண்டும் என்றால் பெரிய சகோதரர்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது பெரிய சகோதரர்களின் கடமையாகிவிடும்.” திடீரென ராணா தன் குரலை உயர்த்தியபடியே கத்தினான்” அவர்கள் இங்கே வாழ்கிறார்கள், ஆனால் பாகிஸ்தானுக்காக பிரார்த்திக்கிறார்கள், இங்கே உணவருந்துகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் நலனுக்காக பாடுகிறார்கள்.”

இப்படிப்பட்ட அசாதாரணமான சூழல்களில் நான் தலைகுனிந்துவிடுவேன் என்னுடைய ஆற்றாமையை எண்ணி. தலை குனிந்து, என்னுடைய உணர்ச்சிகளை சோதித்தவாறே அனைத்தையும் குறிப்பேட்டில் பதிவு செய்வேன். பல நேரங்களில் என் போனை எடுக்கும்போது பிரேமி “ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ராமனைப்போற்று” என்பான். நானும் சில நேரம் நகைச்சுவைக்காக “ஜெய் ஸ்ரீ ராம்” என்பேன். இந்த வார்த்தைகளைத் தான் இந்து வெறியர்கள் கூட்டு கும்பல் தாக்குதல்களின் போது ஆக்ரோஷமாக முழங்குவார்கள்.

அந்த வெறுப்பானது மொத்த முசுலீம் மக்களின் மீதானது மட்டும் அல்ல; தனிநபர் மீதானதும் தான். என்னாலொரு பத்திரிகையாளனாக இதைக் கூறமுடியும். அதே நேரத்தில் பிரேமி மற்றும் அவனது கூட்டாளிகளுடனான நல்லுறவை என்னால் கைவிட முடியவில்லை. ஒருபுறம் அவர்களை புரிந்துகொள்ளவும் அவர்களின் எண்ணங்களையும் ஆழமாக உணரவும் நான் நிர்பந்திக்கப்பட்டேன்.

இன்னொரு முறை அவனை சந்திக்கும் போது “இந்தியாவை இந்து அடிப்படைவாத நாடாக்குவதற்கு இந்துத்துவ போராளியாக வேலை செய்கிறாய்” என்று கூறியிருக்கிறேன்.

இன்னொரு புறமோ, என்னுடைய அறிக்கையை ஆச்சரியப்படத்தக்க வகையில் நான் வித்தியாசமானதாக்க வேண்டும் அப்போது தான் அதை படிப்பவர்கள் விரும்புவர். புகழ்பெற்ற அமெரிக்க இதழில் என்னுடைய கட்டுரை வெளியாக வேண்டும். இது எம்மாதிரியான விளைவை சமூகத்தில் ஏற்படுத்தும்? பிரேமி இன்னமும் புகழ் பெற்றவனாவானா? அவனை நியாயப்படுத்தும் ஒன்றாகிவிடுமா?

சர்வதேச ஊடகங்களைப் பொறுத்தவரை, பிரேமியிடம் நான் மேற்கொண்ட புலனாய்வனதுதான் இந்து வலதுசாரி அமைப்பின் உள்ளார்ந்த நடவடிக்கைகளை விளக்கும் முதல் கட்டுரையாக இருக்கும். பிரேமி தொடக்கம் முதலே இக்கட்டுரை எப்படிப்பட்ட எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். பதிப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்த புகாரையும் அவனே தெரிவித்தான்.

ஆனால் , பிரபலமடைந்ததற்காக பஜ்ரங் தள் தொண்டர்களால் அக்கட்டுரை மிகவும் மகிழ்ச்சியாக பரவலாக ஷேர் செய்யப்பட்டது. முகநூலில் இக்கட்டுரைக் குறித்த ஒரு கமெண்ட் இவ்வாறு வந்திருந்தது ”பிரேமியைப் போன்ற சிங்கங்கள் ட்ரம்பின் அமெரிக்காவில் கூட நமது கொடியை பறக்க விட்டிருக்கிறார்கள்” என்று.

வயர்ட்-ல் கட்டுரையானது பதிப்பிக்கட்ட பின்னர் இந்தியாவில் விதைக்கப்பட்ட வெறுப்புணர்வு குறித்த பிரச்சினையானது வெளிச்சத்துக்கு வந்தது. முசுலீம்கள் பாதிக்கப்பட்ட பிரச்சினை குறித்து பல இடங்களில் பேசினேன். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் நான் அசாதாரணமான சூழலில் இருப்பதாக உணர்ந்தேன்.

ஓவ்வொரு நாளின் முடிவிலும் அவர்களின் அபாயகரமான நடவடிக்கைகள் குறித்து அச்சமடைந்தேன். வன்முறை மிகுந்த இந்துத்துவ தத்துவத்தை அதன் இயக்கத்தவர்களோ மனிதமயமாக்கல் என்று கூறுகின்றனர். ஊடகங்களோ வன்முறை நிகழ்ச்சிகளுக்காக ஏங்குகின்றன.

இக்கட்டுரைய உருவாக்க எத்தனை தடைகளை, இழுத்தடிப்புகளை தாண்டி வந்திருக்கின்றேன்.ஆனாலும் நான் குற்ற உணர்வுடனும் வெட்கமாகவும்தான் உணர்கின்றேன். மீண்டும் இதுகுறித்து எழுதுவதற்கு எவ்வித விருப்பமின்றிப்போனேன்.

சமீபத்தில் Condé Nast  என்ற நிறுவனம் என் கட்டுரை குறித்து டாகுமெண்டரி படம் எடுக்க விருப்பம் தெரிவித்தது. பிரேமி இதை விரும்புவான எனத்தெரியாமல், அவனுக்கு இச்செய்தியை அனுப்பினேன். அவனோ கிஸ்ஸிங் எமோஜிகளை எனக்கு அனுப்பினான்.

முடிவுற்ற உணர்வு

2017-ல் இந்து மதவெறியர்களுக்கு எதிராக குரல்கொடுத்த காரணத்தால் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார். இச்செய்திக்குப் பிறகு எனக்கு முதல் இந்து அமைப்பினரிடம் இருந்து கொலைமிரட்டல் வந்தது. முதல் கொலைமிரட்டல் வந்ததும் வீட்டை மாற்றினேன். நடந்து செல்வதை தவிர்த்தேன். தொடர்ந்து ஒரு மாநிலத்தில் வசிப்பது பற்றி கவலையுற ஆரம்பித்தேன்.

பொது மக்களிடையில் நடந்து செல்லும்போது அடிக்கடி திரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு திரும்பி வந்த பின்னர் பூட்டினை பலமுறை சோதனை செய்தேன். ஏன் நான் டெல்லியிலிருந்து நியூயார்க் சென்ற பின்னரும் கூட நடு இரவில் எழுந்து பலமுறை பூட்டினை சோதித்துக் கொண்டு இருந்தேன். சர்வ்வல்லமை பொருந்திய யாரோ என்னை தாக்குவதற்காக பின் தொடர்கிறார்கள் என்ற அச்ச உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது.

பிரேமி என்னுள் இருந்த அத்தியாவசியமான ஒன்றை நொறுக்கிவிட்டான். நான் இந்தியாவிடம் இருந்து அன்னியப்பட்டு இரண்டாம் தர குடிமகன் என்ற நம்பிக்கையே என்னுள் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக இருக்கும் போது பிரேபி சொன்னான் “அலிஜி ஒரு நாள் வரும். உங்கள் சந்ததியினர் இங்கு வாழ வேண்டும் என்றால் அனைவரும் மதம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைவரும். அதை காண நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அது கண்டிப்பாக நடக்கும்.”

பிஜேபி மேலும்மேலும் வளர்ந்து தன் பலத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. செய்தி சேனல்களோ தங்களது வணிகத்திற்காக வெறுப்பு செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றன.

முசுலீம்கள்  குறிவைக்கப்பட்டு அவர்கள் மீதான அமைப்பாக்கப்பட்ட தாக்குதல்களும் மைக்ரோ அளவிலான முரட்டுத்தனமான சம்பவங்களும் மென்மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.

ப்ரேமியும் அவனது கும்பலும் சொன்னவை எல்லாம் நடந்துவிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் ஆதரவற்று இருக்கிறேன். பிரேமியினுடைய மற்றும் அது போன்ற வீடியோக்கள் சாதாரண இந்து குடும்பங்களின் வாட்ஸ் அஃப்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. ஒரு சராசரி இந்து பிரேமி மற்றும் அவனது கும்பல் போல எப்படி மாறுவான் என்பதை நினைக்கையில் என் இதயம் வெடித்து சிதறுகின்றது.

இந்தியாவில் சுயமரியாதையுடனும் கவுரவத்துடனும் கூடிய வாழ்க்கையை வாழ்வோம் என்ற கனவு இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.

மோடியின் இந்தியாவின் முசுலீம்கள் வாழ்வது என்பது கனவுதான். முசுலீம் ஊடகவியலாளர்கள்தான் இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதில் முன்வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் நினைத்தபடி எதையும் எழுத முடியாது. ஏனென்றால் அதுதான் அவர்களின் விதி.

பல முசுலீம் ஊடகவியலாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கின்றனர். அவர்கள் தங்கள் அடையாளத்தை காட்ட முயன்றால் அவர்களின் அடையாளம் சிதைக்கப்படும். என்னால் இந்த உண்மைகளை வெளிப்படையாகவும் உரத்தும் சொல்ல முடியும். ஏனெனில் மோடியின் கட்டைவிரல் ரேகையின் ஆட்சிக்குக்கீழ் இருக்கக்கூடிய இந்திய ஊடகத்துறையில் நான் இனி பணியாற்றப் போவதில்லை.

சில முசுலீம் பத்திரிகையாளர்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுகிறார்கள், வலிமிகுந்த இருண்ட காலத்தில் வாழ்ந்த படியே. ”இந்திய ஊடகங்கள் பெருந்தொற்று காலத்தில் மோடி அரசின் தவறான நிர்வாக நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்கான வெண்டிலேட்டராக செயல்படுகின்றன” என்று எனக்கு அளித்த பேட்டியில் சி.என்.ரானா அயூப்  தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்தை பல பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் ஆதரித்தாலும், பல பார்ப்பன பத்திரிகையாளர்கள் அவரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். பெரும் அச்சுறுத்தல் மற்றும் அபாயங்களுக்கு மத்தியில் சில வருடங்களாகவே மோடி ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்திய ஊடகங்களானவை, அதிகார தாழ்வாரத்தையே உறுதியாகப் பிரதிபலிக்கின்றன. அவை ஆதிக்கச் சாதி ஆண்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இப்போது சில தளவுகள் இருக்கலாம். ஆனால் ரானா மற்றும் தலித்துகள், முசுலீம்கள், ஆதிவாசி பத்திரிகையாளர்கள் குறைவான அளவில் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். மீடியாக்களோ மோடியின் நல்லாசிகளின்றி உயிர் வாழ முடியாத நிலையில் இருக்கின்றன.

சுதந்திர சிந்தனை மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்க்ள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் முசுலீம்கள் மீதான படுகொலைகளைக் கண்டிக்கின்றனர். அவர்கள் முசுலீம் பத்திரிகையாளர்களுக்கு உரிய இடம் கொடுத்து உண்மைகளை பேச வைக்கின்றனர்.

பல ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளிப்படையாக மோடியை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் மோடியின் தவறான நிர்வாகத்திறனை தங்கள் திறமையால் மூடி மறைத்தனர். வலதுசாரி கும்பலால் ஊடகத்துறை தாக்கப்படுவதற்கு மோடி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

படிக்க : நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சிலநேரங்களில், இந்திய முசுலீம்கள் இந்துராட்டிரம் அல்லது இந்துக்குடியரசில் வாழ்வது பற்றி கனவு காண்கிறார்கள். அந்தக்கனவு நிறைவேற வேண்டுமானால், அது அவர்களின் சுயமரியாதையை இழக்கப்பட்டதால் மட்டுமே இருக்க முடியும்.

காஷ்மீர், அசாம், குஜராத் மாடல்களை ஏற்கனவே இந்திய முசுலீம்கள் கண்டுவிட்டனர். சார்பு, பிரித்தல், வன்முறை ஆகியவற்றை மேற்கொள்ளும் இந்து பெரும்பான்மை வாத எழுச்சியின் போது  எவ்வித உதவியுமற்றிருப்பதை பார்க்க மட்டுமே நம்மால் முடியும். முசுலீம் உடல் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்தான் ஏகாதிபத்தியத்தின் விருப்பமாகும்.

மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். இந்தியாவில் ஒருமுறை கவுரவம் மிக்க வாழ்வை இழந்து விட்டால் மீண்டு வருவது கனவில் கூட சாத்தியம் இல்லை. திரும்பி வருவதற்கான வாய்ப்பே இல்லை.

என்னுடைய நாடும் எப்போது வேண்டுமானாலும் சிதைக்கப்படலாம். என்னுடைய தாய்நாடு அவநம்பிக்கையுடையதாகி விட்டது. நாங்கள் நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை எண்ணுகையில் வலியும் வேதனையும் என்னுள் பெருக்கெடுக்கிறது. நம்பிக்கையின் மரணம் என்றால் என்ன என்பதை கண்டிப்பாக நம்மால் உடனே புரிந்து கொள்ளமுடியாது.

(முற்றும்)

முகமது அலி (இந்து மேலாதிக்கம் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.)

India’s transformation under Narendra Modi என்ற புத்தகத்தை எழுதி வருகிறார்.
thebaffler.com என்ற தளத்தில் The Scream என்ற தலைப்பில் வெளியான ஆங்கில கட்டுரை

தமிழாக்கம் : மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க