ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தங்களது ஊழியர்களை கணிசமாகக் குறைத்துவருவதை அடுத்து 10,000 பேரை பணிநீக்கம் செய்ய தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் திட்டமிட்டுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 15 அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமேசான் “புதியதாக இந்த வாரம் எடுக்கவிருக்கும் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலைகளுக்கான பணியாளர்களில்” சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலன் மஸ்க் சமூக ஊடகங்களின் பணியாளர்களை பாதியாகக் குறைத்துள்ளார். மேலும் முகநூலின் தாய் அமைப்பான மெட்டா அதன் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அமேசானின் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.

அமேசான் அறிவித்துள்ள ஊழியர்கள் பணிநீக்கம் பற்றிய அறிக்கையில், தனது சொத்தின் பெரும்பகுதியை காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள செலவிட இருப்பதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

படிக்க : சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு

“செப்டம்பரில் பல சிறுவேலைகளுக்கான புதிய ஆட்சேர்ப்பை அமேசான் நிறுவனம் நிறுத்திவைத்தது. அக்டோபரில், அந்நிறுவனத்தில் முக்கியமான சில்லறை வணிகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பாமல் நிறுத்தி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவு உட்பட நிறுவனம் முழுவதும் பணியமர்த்தலை நிறுத்திவைத்தது” என்று அறிக்கை கூறுகிறது.

கோவிட்-19 ஊரடங்கி போது ஆன்லைன் வர்த்தகத்தில் நுகர்வோர் அதிகம் பயன்படுத்தியதன் காரணமாக “மிகவும் அதிக இலாபத்தை” அள்ளியது அமேசான் நிறுவனம். அந்நேரத்தில், ​​அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கு, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய குவிந்தபோது,​​​​தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியது.

எவ்வாறாயினும், உலகம் கோவிட்-19 ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங்கில் நுகர்வோர் குறைவதன் காரணமாக, ​​அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து அதிக செலவுகளை எதிர்கொண்டது. வாடிக்கையாளர்கள் இழந்ததற்கு மக்களிடையே பணம் புழக்கம் குறைந்தது மற்றும் அதிக பணவீக்கம் காரணமாக அமைந்ததுள்ளது. “அமேசானின் வளர்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிகக் குறைந்த ஆடர் விகிதத்தையே அடைந்துள்ளது.” என அறிக்கை கூறுகிறது.

படிக்க : பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !

கடந்த 2021 டிசம்பர் மாத நிலவரப்படி அமேசான் நிறுவனத்தில் உலகளாவிய வர்த்தகத்தில் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களாகச் சுமார் 1,608,000 பேர் பணியாற்றுகின்றனர். தற்போது மொத்த வொயிட் காலர் ஜாப் ஊழியர்களில் 3 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது அமேசான் நிறுவனம்.

அலெக்சா ஆகிய அமேசானின் சாதனங்கள் பிரிவு, மனித வளப் பிரிவு போன்ற பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து சிறுதொழில்களையும் அழித்து, சிறுவியாபாரிகளின் அழிவில் கொடிக்கட்டி பரந்த அமேசான், கொரோனா பேரிடர் காலத்தில் பலமடங்கு இலாபத்தை அள்ளியது. தனது ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்துவிட்டு, 10,000 ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தவிருக்கிறது அமேசன் நிறுவனம். ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்துவிட்டு, அவர்களை நஷ்டம் என்ற பெயரில் வீசியெறியும் நடைமுறையை தற்போது அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க