ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.

டெல்லியில் லிவிங் டு கெதர் என்ற உறவு முறையில் அப்தாப் அமீன் பூனாவாலா, ஷிரத்தா வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஷிரத்தா தன்னை முறைபடி திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். இதை மறுத்த பூனாவாலா ஷிரத்தாவை கழுத்தை நெறித்து கொலைசெய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியுள்ளான் என்று கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று செய்தி வெளிவந்து நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரமான கொலை சம்பவம் சுமார் 6 மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. (அதாவது கடந்த மே 18 ஆம் தேதி நடந்திருக்கிறது).

பூனாவாலா, ஷிரத்தா லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் பூனாவாலா பல பெண்களுடன் பழகி வந்துள்ளான். இது ஷிரத்தாவிற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் தன்னை முறையாக திருமணம் செய்து கொள்ளும்படி வலியுருத்தி கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷிரத்தாவை கழுத்தை நெறித்து கொலைசெய்துள்ளான் பூனாவாலா.


படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !


பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி இருக்கிறான். இந்த கொலையை மறைக்க dexter என்ற படத்தை பார்த்து இருக்கிறான். அதனடிப்படையில் வெட்டிய உடல் பாகங்களை வைப்பதற்காக ஆன்லைனின் ஆர்டர் செய்து பிரிட்ஜ் வாங்கியுள்ளான். பிரிட்ஜ்யில் அடைத்து வைத்த உடல் பாகங்களில் சிலவற்றை நள்ளிரவு 2 மணி அளவில் எடுத்துசென்று நாய்களுக்கு போட்டிருக்கிறான் பூனாவாலா.

தன் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதற்காக இப்படிபட்ட கொடூரமான கொலையை செய்திருக்கிறான் என்றால் அவன் அந்த பெண்னை காதலிக்கவில்லை, அந்த பெண்ணிடமிருந்து உடலுறவை மட்டும்தான் எதிர் பார்த்திருக்கிறான் என்பது புரியும். இவளை திருமணம் செய்துகொண்டால் மற்ற பெண்களிடம் பழக முடியாது உடலுறவு வைத்துகொள்ள முடியாது என்று அப்பெண்ணை கொலை செய்திருக்கிறான்.

அதாவது உனக்கு பிடித்தால் உடலுறவு வைத்து கொள்ளலாம், பிடிக்கவில்லை என்றால் அடுத்து யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இந்த உறவில் இருந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான துலக்கமான சான்று ஷிரத்தா கொல்லப்பட்டது.


படிக்க : லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்


பெண்களை நுகர்வு பொருளாகப் பார்ப்பதற்கு காரணம்:

இங்கு மறுகாலனியாக்க கலாச்சாரத்தை அதாவது மேலைநாட்டின் மிகவும் மோசமான பெண்களை நுகர்வு பொருளாக பார்க்கும் கலாச்சாரத்தை அனைத்தையும் திரைப்படங்கள் மூலமாக திணிக்கிறார்கள். அனைத்து திரைப்படங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காட்டுவது, விளம்பரங்களில் பெண்களை மட்டுமே நடிக்க வைப்பது, பான் வீடியோக்களில் (porn videos) நடிக்க வைப்பது, போன்ற அனைத்திலும் பெண்களை ஒரு போகப்பொருளாக-நுகர்வு பொருளாகக்கட்டி வருகிறார்கள்.

இந்த நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள். அதன் விளைவுதான் இங்கு ஷிரத்தா கொல்லப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, இந்த ஆணாதிக்க சமூகத்தையும் – மறுகாலனியாக்க நுகர்வு கலாச்சராத்தையும் ஒழித்துக்கட்டினால் மட்டும்தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க