Tuesday, September 28, 2021
முகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் லிவிங் டு கெதர் - கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

-

ன்னிக்கி வெள்ளன விடிஞ்சாப்ல இந்துப் பேப்பர படிச்சப்ப எனக்கு உடம்பெல்லாம் ஒரே பரவசம்! காரணம்; நடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்களாம்!

நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்கலாம்!

‘ஓ காதல் கண்மணி’ படம் மணிரத்னத்தோட ஒரு மைல்ஸ்டோன் சப்ஜெக்டு. இதுல நித்யா மேனன் பட்டையக் கிளப்பியிருந்தாங்க! இந்தப் படம் லிவிங் டுகெதரப் பத்தி பேசிச்சுன்னு பல பத்திரிக்கைகள் கூட அப்ப எழுதுனாக.

லிவிங் டுகெதர்ன்னா? லிவிங் டுகெதன்னா ‘மணம் தவிர் இல்லறம்’. நமக்கு தமிழ்ல சொன்னாலும் புரியாது; இங்கிலீசல சொன்னாலும் புரியாது. அதாவது கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழுவாக!

மணி ரத்னம், வழக்கமா மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் கதைகளைத்தானே மாறி மாறி படம் எடுப்பாரு! இதென்ன புதுசா? லிவிங் டுகெதர்ன்னு அல்ட்ரா மாடர்ன் புரச்சிப் படம் எடுத்திருக்கிறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.

ஒருவேளை லிவிங் டுகெதரும் ஐரோப்பிய மையவாத சிந்தனையா மேற்கத்திய கலாச்சாரமா இல்லாம இந்து பாரம்பரியத்தின் வேரா கீரா இருக்குமோன்னு மனுசக்குள்ள பல கேள்விகள் அரிச்சிக்கிட்டு கெடந்துச்சு!

என்னோட எல்லாக் சந்தேகங்களையும் விளக்கி லிவிங் டுகெதரோட இந்துபபாரம்பரியத்தை தீத்து வைச்சது நடிகை நித்யா மேனன் தான்!

அந்த வகையில நித்யா மேனனோட பரம ரசிகனான எனக்கு மணி ரத்னம் படத்தில் அவுக கொடுத்த உழப்பயும் தியாகத்தையும் சொல்ல ஒரு வாய்ப்பு கெடச்சுருக்கு!

பொதுவா தமிழ் இண்டஸ்ட்ரீல கதாநாயகிங்க கடுமையா உழைக்க வேண்டியிருக்கும்! அதுவும் மணி ரத்னம் படமுன்னா சொல்லவே வேண்டாம். நித்யா மேனன தெரிஞ்சிக்கணும்னா கொறஞ்சது தமிழ் சினிமாவில நாலு கதாநாயகிகளைப் பத்தியாவது சொல்லணுமுன்னு நினைக்கிறேன்.

80-களில் வெளிவந்த படங்கள்ல, பல படங்கள் ஆதிக்கசாதி பாலுறவுச் சிக்கல்களை மையப்படுத்தி இருந்துச்சு. அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படித்தான், புவனா ஓர் கேள்விக்குறின்னு படம் பேர ஒரு மார்க்கமா இருந்துச்சு.

இதுல முத்தாய்ப்பா வைதேகி காத்திருந்தாள் படத்துல நடிகை ரேவதிக்கு வெள்ளைச் சேலைய கட்டிவிட்டு விதவையா கால்ல சலங்கையக் கட்டி ஆயிரங்கால் மண்டபத்துல “அழகு மலராட அபிநயங்கள் கூட”ன்னு ஆடவிட்டுருப்பாங்க!

‘குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை’ன்னு விரகதாபம் வெளிப்படுற மாறி ஆக்ரோசமா ஆடவேண்டியிருந்துச்சு.

பொம்பளய்ங்க பொறப்பே இந்த மதத்துக்குள்ள இம்புட்டுதானான்னு அசிங்கம் பொறுக்காம ரேவதியோட அப்பா கடைசிச் ஜதிய, சப்பாளங் கட்டயில அடிக்கிறப்பவே நெஞ்சுவலியில செத்துப்போவாரு!

பாவம் ரேவதி! ஆனா தாராளமயம் காரணமா சினிமா உலகம் மாறினப்ப கூட இந்து பாரம்பரியம் இன்னும் ரொம்ப கெட்டியாயிருந்துச்சு! தேவர் மகன் படம் பாத்துருப்பீகள்ள!

இதே ரேவதியோட கையப்பிடிச்சிக்கிட்டு “புன்ன வனத்திலே பேடக் குயில் கூவயில, உன்னோடய வேதனைய நானறிஞ்சேன்’ன்னு இந்த சமுதாயத்தில பொண்ணுன்னா அது அதுக்கு மட்டும்தான்னு தன்னோட தியாகத்த சுருதி குறையாம பாடிக்காட்டுனாரு சுருதிகாசனோட அப்பா கமலஹாசன்!

இதுக்கு பொறவு கமலஹாசன் கட்டுன வேசம் இதுவர எந்தக் கதாநாயகியும் செஞ்சதில்ல! கமலே அக்கிரகாரத்து மாமியா மாறி தாலிய கழட்டி பீரோவுக்குள்ள வெச்சிருக்கிற பொம்மனாட்டி மீனாவுக்கு புத்திமதிய சொல்லுவாரு!

தாலிச் சண்டையில பாரம்பரியம் தமனி தாமரங்கான்னு ஆர்.எஸ்.எஸ் காலிபசங்க புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் தெம்பா குண்டு வீசக் கத்துக்கொடுத்தது யாருன்னு நெனக்கீக? சண்முகி மாமி தான்!

அதையும் தாண்டி வந்தோம்னா, ஜெனிலியாவோட தியாகத்தை யாராலும் மறக்கவே முடியாது! ராமன் சீதைய காட்டுக்குள்ள அனுப்புனான். ஜெயம் ரவி, ஜெனிலியாவ வீட்டுக்குள்ள அனுப்புனான். அம்புட்டுதான் வித்தியாசம்! ஆறு நாள் குடும்பத்தோட தங்கியிருந்தா நீ யென் பொஞ்சாதின்னு சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தில புதுசா இராமாயணம் போட்டாய்ங்க!

“அது என்னவோ தெரியல! உன்ன பாத்துவுடன பிடிச்சுருக்கு”ன்னு சொன்னவுடனே ஜெனிலியா போன்ற கொமரிங்க ஒத்துக்கிட்டதால அது வீடு வரை வந்துச்சு! ஒருவேள ஜெனிலியா பொண்ணு ஒத்துக்காம இருந்திருந்தா என்ன செய்வாங்கண்ணு தெரியல!

இப்ப தெரியுதா? இந்துப் பாரம்பரியத்த காக்கணும்னா சினிமாவுல கதாநாயகி என்னமா வேலை செய்யணும்னு? இதே மணி ரத்னம் படம்னா எப்படியிருக்கும்?

அதுக்கு ஒரு விவரம் நம்மகிட்ட இருக்கு! உங்களுக்கே தெரியும் அலைபாயுதே படத்தில ஷாலினி கல்யாணம் பண்ணிகிட்டு தாலிய மறைச்சு வாழ்ற ஒரு கேரக்டர்!

பதட்டத்தை முகத்துல காமிச்சிக்கிட்டு அதே சமயம் தாலிப் பெருமை, கர்நாடக சங்கீதம் பாடுறதுன்னு (ஸ்வர்ணமால்யாவும் ஷாலினியும் மாதவன் வீட்டுக்குப் போய் அலைபாயுதே கண்ணான்னு பாந்தமா பாடுற ஒரு கீர்த்தனை ஆர்.எஸ்.எஸ் அம்பிங்க அத்தனை பேருக்கும் ரொம்பப் பிடிக்கும்!!) பாரதத்தோட இந்து பெருமைய டெக்னிக்கலாக நடிச்சுருப்பாப்பல!

இவ்வளவையும் தாண்டி லிவிங் டுகெதர்னா அதுக்கு நித்யா மேனன் எவ்வளவு உழைச்சிருக்கணும் யோசிச்சுப் பாருங்க?

நான் கூட லிவிங் டுகெதர் நகர்மயமாதல், முதலாளித்துவ வளர்ச்சியில் ஆணுக்கும் பொண்ணுக்கு வசதி வாய்ப்புகள் கிடைக்குது. அதனால இரண்டு பேரும் சுதந்திரமா கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்து துணைய தேர்ந்தெடுப்பாங்களோன்னு நினைச்சேன். ஆக சாதிக்கு இடமில்லைன்னு உறுதியா நம்புனேன்!

ஆனா பாருங்க நித்யா மேனனும் துல்கர் சல்மானும் சர்ச்சுக்குள்ள தன்னோட நண்பர்கள் கல்யாணத்தில சந்திக்கறப்ப, நித்யா மேனன் துல்கர்கிட்ட “அன்னைக்கி ஏதோ ‘ச’ன்னு ஆரம்பிக்கிற வார்த்தைய சொன்னாப்பல இருந்துச்சு”ன்னு சூப்பரா மணிரத்னத்தோட ஸ்கிரிப்பட நடிச்சு காட்டியிருப்பாங்க!

ஆதிக்க சாதிகளைப்பொறுத்தவர வளர்ற புள்ள வாயில ‘சனியன்ற’ வார்த்தை வர்றக்கூடாதுன்ற கண்டிசன் எங்க வீட்டுல கூட இருந்துச்சு!

அங்க தான் ஒரு டிவிஸ்டு வந்துச்சு! அவ்வளவு மாடர்னா இருக்க நித்யா மேனன் இந்து கலாச்சாரம்னு வர்றப்ப எவ்வளவு துல்லியமா நடிச்சு காட்டியிருங்கான்னு தோணுச்சு! அந்தப் பிரேம் புல்லா நித்யாவோட முகம்தான் எனக்கு நின்னுச்சு!

சரி ஒருவேள பொண்ணு தான் உசந்த சாதி. கதாநாயகன் பள்ளனா, பறையனா இருந்தா இது ஒரு புரட்சிப்படமா இருக்குமோன்னு எனக்கு டவுட்டு இருந்துச்சு!

ஆனா படத்துல ஆதியே எனக்குப் பூர்விகம் மாம்பலம்னு சொல்லுவான். மாம்பலமா இல்லைன்னா மும்பைல செட்டிலான கணேஷ் அங்கிள் இடம் கொடுப்பாரா?

அதையும் நித்யா மேனன்தான் உடைச்சு எறிஞ்சாங்க! அகமதாபாத் போறப்ப ஆதியும் தாராவும் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குவாங்க!

அப்ப ஆதி போடுற கையெழுத்த நித்யா மேனன் அழகா ஆதித்யா வரதராஜன்னு வாசிச்சு காண்பிக்கிற இடத்துல உச்சரிப்பு சூப்பரா இருந்துச்சு! நீங்க கவனிக்கணும் மணிரத்னத்தோட இந்தப்படம் எந்தவித ஒலிக்கலவையும் இல்லாம கதாநாயகர்களின் சொந்தக்குரலப் பயன்படுத்திய படம்! நித்யா மேனனோட கதாபாத்திரத்தோட கணம் அம்புட்டு வெயிட்டு!

காதலர்களுக்குள்ள சின்ன சின்ன சில்மிசம்னு வர்றப்ப டிரைனுக்குள்ள நித்யா பேசின ஒரு வசனம் மட்டுமே இந்துக் கலாச்சார அறிவ அவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுச்சு எனக்கு!

ஆதி சொல்வான் “துகிலுறிவேன்”ன்னு அதுக்கு நித்யா சொல்வா பாருங்க “துச்சாதனன் மாதிரியா”ன்னு?

புராணத்தில் இருந்து எடுத்துக்காட்டி லிவிங் டுகெதர தாராவும் ஆதியும் எஞ்சாய் பண்றாங்கன்னா பார்ப்பனியமும் முதலாளித்துவமும் இம்புட்டு ஈயும் பீயுமா இருக்குங்குறது எனக்குத் தெரிஞ்சு யாருமே இவ்வளவு குளோஸ் அப்பில காட்டுனதில்லன்னு நெனக்கிறேன்.

இதையெல்லாம் தாண்டிதான் வீணை காயத்ரி சகோதரிகள் பாடுற ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நித்யாவோட பாவம், நடிப்புக்காட்சிகள் எல்லாம் டக்கரா இருந்துச்சு!

இங்க நித்யா நடிச்ச ஒரு பாடல் காட்சி இன்னுமும் என் கண்ண விட்டு அகலல. லிவிங் டு கெதரா இருந்தாலும் சரி தாலி கட்டிட்டு வீட்டுக்குள்ள வாழ்ற அலைபாயுதே படமா இருந்தாலும் சரி காதலி கண்டிப்பா ஒரு கர்நாடக சங்கீதமாவது பாடணும்ன்றது மணியோட கண்டிசன்!

காதலன் அட்டுத்தனமா பயங்கர போக்கிரியா இருந்தாலும் இந்த டெஸ்டு மட்டும் இன்னைக்கு வரைக்கும் பொண்ணுக்கு இருக்கு! அப்படித்தான் நித்யா மேனன் கணேஷ் அங்கிள் வீட்டுக்குப் போறப்ப பாடுற கர்நாடக கீர்த்தனைல கணேஷ் அங்கிள் கரைஞ்சுப் போயி லிவிங் டுகெதருக்கு ஒத்துக்குவாரு!

அந்தக் கீர்த்தனையில் “மலர்கள் கேட்டேன் மணமே தந்தனை; தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை” ன்னு வர்ற வரிகளுக்கு நித்யா புள்ள உசுரக் கொடுத்து நடிச்சுச்சு!

பல்விளக்காத ஆதி செவத்தல சாஞ்சுகிட்டே ரசிப்பான்! அதே மாதிரி அலைபாயுதே படத்துல மாதவனும்! அதே போல சாருவும் ஜடாயுவும்

இது தாண்டா லிவிங் டுகெதர்னு புரிய வைச்ச நித்யா மேனன் எவ்வளவு பெரிய மாதரசி!

இப்படித்தான் மகாபாரதத்துல பராசரன் மச்சகந்தி லிவிங் டுகெதர் கதையும் நகரும். வியாசன் அம்பாலிகையோட வேலைக்காரப் பொண்ணோட லிவிங் டுகெதரில் இருந்து விதுரன் வருவான். ஊர் பேரு தெரியாத அரக்கி- தருமன் மூலியமா கடோற்கஜன் வருவான்.

ஆனா எல்லாக் கதையிலும் மாப்பிள்ளை உசந்த சாதி! பொண்ணு கீழ் சாதியா இருந்தாலும் சங்கீத சாகித்யம் சம்பிரதாயம் அவசியம் தெரிஞ்சிருக்கணும்!

வேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு! அதாவது அனுலோமம் அலவுடு! பிரதிலோமம் நாட் அலவுடு!

நித்யா மேனன் மணிரத்னத்தோட இணையப்போற அடுத்தப்படத்த ஆவலா எதிர்பார்த்துட்டு நிக்கிறேன். எப்படா வரும்னு இருக்கு!

– இளங்கோ

 1. கதைகள் என்றாளே-சாதாரன,ஒழுக்கத்திற்க்கு மாறான குடும்ப வாழ்க்கைதான் கதைகளாக சித்தரிக்கப்படுகின்றன.
  உதாரணத்திற்க்கு-
  குடும்ப பெண் விபச்சாரம்(அரங்கேற்றம்)
  உறவு முறை மாறி காதலிப்பது
  அடுத்தவன் மனைவியை அடைய விரும்புவது
  பிற கணவன்மார்களை விரும்புவது
  இப்படிப்பட்ட வாழ்க்கைமுறைகள் பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்பதால்,
  சினிமா படங்களில் பார்ப்பனர் மற்றும் பாப்பாத்திகளை மையப்படுத்தி நிறைய தமிழ் சினிமாக்கள் வருகின்றன.
  வினவு இதில் உணக்கென்ன பொறாமை?

  • \\இப்படிப்பட்ட வாழ்க்கைமுறைகள் பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்பதா// ஐயா ஷண்முகம் அவர்களே லிவிங் டுகெதர் ஏதோ பார்ப்பன சாதிகளில்தான் சகஜம் என்ற ரீதியில் பேசாதீர்கள் . திருவண்ணாமலை மாவட்டம் ஜவாது மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் இதே லிவிங் டுகெதர் முறையில் தான் வாழ்கிறார்கள் என்ற உண்மை தங்களுக்கு தெரியுமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க