ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு, அடுத்து ஆண்டு நவம்பர் மாதம் வரை ஏற்றுருப்பது, பெருமைக்குரிய விஷயம் எனவும், ஜனநாயகத்தின் தொட்டிலான இந்தியாவின் அனுபவங்கள் உலகை வழி நடத்த உதவும் என கார்ப்பரேட் கைக்கூலி மோடி ஆரவாரத்துடன் பேசி வருகின்றார்.
பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற முதலாளித்துவ நாடுகளும் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் ஜி-20-யில் அங்கம் வகிக்கின்றன.
அடிப்படையில் மேற்கண்ட நாடுகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கின்றன. பாசிச மோடியோ ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர் காலம் என தனது அகண்ட பாரத கனவை பரந்த உலகிற்கு விரிவுப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம் நாட்டு மக்களுக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை.
படிக்க : ஜி-20: கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு
இன்றைக்கு பெரும்பாலான நாடுகளில் மோடி போன்ற பாசிசஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதால்தான் மேற்படி பேச்சுக்கு கண்டனங்கள் பெரிதாய் வரவில்லை. நாம் விசயத்திற்கு வருவோம். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்பதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சினை தீர்ந்து விடும்….?
இந்த நாடுகளின் மாநாடு யாருக்காக..? தத்தம் நாடுகளின் முதலாளித்துவ நிறுவனங்கள் பொருட்களை சந்தைப்படுத்துதல் இது தொடர்பான பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வது நமது நாட்டின் அம்பானி, அதானி, டாடா இவர்களைப் போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்த்தக அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, மக்களுக்காக வா..? ஏகாதிபத்தியத்தின் நாடு பிடிக்கும் நாய் சண்டைதான் முதல் உலகப்போர் என ஆசான் லெனின் அம்பலப்படுத்தினார்.
அதனை மறைக்கும் பொருட்டு பேசி தீர்த்துக் கொள்ள முயன்றாலும் ரசியா – உக்ரைன் போர் மூலம் மேலாதிக்கத்திற்கான நாய் சண்டை வெளிப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு 1990-களுக்கு பிறகு உருவானது. இதன் நோக்கமே உலகமயமாக்கலை ஏகாதிபத்தியங்களின், கொள்ளைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த திட்டத்தோடுதான் இதுபோன்ற அலங்கார பேச்சும் சவடால் பேச்சும் பேசுகிறார் பாசிச மோடி.
ஒருபுறம் பணமதிப்பு இழப்பு, GST வரி விதிப்பு, பொதுத் துறைகள் தனியார்மயமாக்குவது தொழிலாளர் சட்டத் திருத்தம், மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளை. மறுபுறம் காவி பாசிசத்தின் தாக்குதல்கள் யாவும் ஜனநாயகத்தின் பேரில் மோடி அரங்கேற்றும் கொடுமைகளை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் அதைத்தான் ஜனநாயகத்தின் தொட்டில் என நாட்டு மக்களை இழிவு படுத்துகிறார்.
படிக்க : ஜி-20 மாநாடு: ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !
முதலாளித்துவ கட்டமைப்பானது நொறுங்கி விழும் நிலையில் உள்ளதுதென்றால் அது மிகையில்லை. இதனை மறைக்கத்தான் மோடியின் சவடால் பேச்சுகள். எனவே இதுபோன்ற போலி பெருமிதங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்தியாவை போன்றே உலகின் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை விரிவுப்படுத்துவது, முன்னரே குறிப்பிட்டது போல ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக முடிவு செய்தல். தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி-20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம். நமது போராட்டத்தின் வெளிச்சத்தில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்திடமும், தொழிலாளி வர்க்கத்திடம் கைக்கோர்ப்போம். கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவு கட்ட போராடுவோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.