பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!

உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.

ந்தியாவின் பல்லுயிர்த்தன்மையைப் பெயரளாவிற்காவது பாதுகாக்க நகோயா நெறிமுறைகளின்படி 1992-ல், ரியோ டி ஜெனிரொவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினப் பன்மயம் குறித்த மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில்தான் பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002 கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது ஒரு நாடு அதன் எல்லைக்குள் உள்ள இயற்கை செல்வம் மற்றும் வளங்களின் மீது முழு இறையாண்மை செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தைதான் திருத்துவதற்காக பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021-ஐ அக்டோபர் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு.

இச்சட்டத் திருத்தத்தில் முதலாவதாக, உயிரி வளங்கள் மற்றும் உயிரி வளங்களின் மரபு சார்ந்த அறிவை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் பலன்களை சம்மந்தப்பட்ட உள்ளூர் மக்கள் மற்றும் சமுதாயத்தினருக்கு சமமாக பகிர்ந்து கொடுப்பதை உறுதி செய்கிற அம்சத்தைத் திருத்தியுள்ளது. அதன்படி, பயன்பாட்டுப் பலன்களை உள்ளூர் மக்களுக்கன்றி, தேசிய பல்லுயிர் ஆணையத்திற்கு பகிர்ந்தளிக்கும் வகையில் மாற்றியளித்துள்ளது.

படிக்க : காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

இரண்டாவதாக, இத்தகைய உயிரி வளப் பயன்பாட்டுப் பலன்களைப் பகிர்ந்தளிப்பதலிருந்து சில நிறுவனங்களுக்கு விலக்கும் அளித்துள்ளது. குறிப்பாக ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, இந்தியாவின் மரபு உயிரிவளங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய நிறுவனங்கள் மாநில பல்லுயிர் வாரியத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை, இந்தியாவைச் சாராத இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தேசியப் பல்லுயிரி வாரியத்திடம் (இந்திய அரசு) அனுமதி பெறத்தேவையில்லை. உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி காலங்காலமாக பாதுகாத்து வரும் இம்மண்ணின் இயற்கை உயிரிவளங்களை டாபர், பதஞ்சலி, ஹிமாலயா, யூனிலிவர் போன்ற பான்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அங்கீகாரமாகும்.

மேலும், மஞ்சள், வேம்பு ஆகியவை பற்றிய மரபு சார்ந்த அறிவை பன்னாட்டு ஏகபோகங்கள் கொள்ளையிடும் முயற்சியை போராடித்தான் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம்மண்ணின் வளத்தை, இவ்வளம் பற்றிய மரபு சார்ந்த நம்மக்களின் அறிவை கொள்ளையடித்து உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோகங்கள் அறிவுசார் சொத்துடைமையாக தனதாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடே இச்சட்டத்திருத்தம்.

தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க