விசாரிக்கப்பட்டாமல் கிடப்பில் போடப்படும் ஊ.பா வழக்குகள்!

அரசை கேள்விகேட்டும், போராடும் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கு மக்கள் இந்த அடக்குமுறை சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் குண்டர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படுவார்கள்!

விசாரிக்க நேரம் இல்லையா.? விசாரிக்க தேவையில்லையா.?
UAPA வழக்கு பதிந்தாலே குற்றவாளிதானா..

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதி வரை சுமார் 3,998 UAPA வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மட்டும் UAPA சட்டத்தின் கீழ் 1,948 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் சிறார்கள். இந்த ஆறு சிறார்களில் நான்கு பேர் 12 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். இருவர் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 2019 ஆண்டு மட்டும் ஊ.பா சட்டத்தின் கீழ் 34 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,244 UAPA வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன.

2020 ஆம் ஆண்டில், UAPA சட்டத்தின் கீழ் 1,321 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஐந்து பேர் சிறார்கள். 80 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டுள்ளனர்.

படிக்க: என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

2021 ஆம் ஆண்டில் மட்டும் UAPA சட்டத்தின் கீழ் 1,621 பேர் கைது செய்யப்பட்டு 62 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,998 UAPA வழக்குகள் விசாரணை நிலுவையில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவை மேற்கோள்காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டின் இறுதியில், 2,041 ஊ.பா வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளன. 2021 ஆண்டில் 172 வழக்குகள் பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணைக்கு வரவில்லை.

அதிக எண்ணிக்கையிலான UAPA வழக்குகள் விசாரணை நிலுவையில் இருப்பதில் அசாம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 1,224 ஊ.பா வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது. இரண்டாவதாக யூனியன் பிரதேசமான ஜம்மு&காஷ்மீரில் மாநிலத்தில் 542 வழக்குகள் விசாரிக்கப்படாமல் உள்ளது.

0-0-0

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) சில திருத்தங்கள் செய்யப்பட்டு 2019 ஆண்டு கொண்டுவந்து தற்போது நாடுமுழுவதும் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டால் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஆறு மாத காலம் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே சிறையில் வைத்துக்கொள்ளலாம்; ஆறு மாதத்திற்கு ஜாமீனும் மறுக்கப்படும். ஆறு மாத கால இறுதியில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதிய சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறி மேலும் ஆறு மாத கால சிறை என்று நீட்டித்து வாழ்நாள் சிறையாக மாற்றியமைக்கவும் முடியும். இப்படிப்பட்ட ஓர் கொடிய நடைமுறை கொண்ட ஆள்துக்கி சட்டம்தான் ஊ.பா (UAPA) சட்டம்.

படிக்க: ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போராட மக்கள் மீது ஊ.பா சட்டம் பாய்ந்தது. ஆனால், சுட்டுக்கொன்ற போலீசு மீது பாயவில்லை. இதேபோல் எல்கர் பரிஷத் வழக்கில் முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட 16 பேர் மீது ஊ.பா உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்கள் பாய்ந்தன. தற்போது நாடுமுழுவதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்பினர் என அனைவரையும் ஒடுக்குவதற்கு ஊ.பா சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையே ஊ.பா வழக்குகள் நிலுவை தொடர்பான இப்புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகிறது.

குற்றவாளியா? இல்லையா? என்று விசாரிப்பதற்கு முன்பே குற்றவாளியாக்கப்பட்டு ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வைப்பதுதான் ஊ.பா போன்ற பாசிச சட்டங்களில் நடைமுறை!

அரசை கேள்விகேட்டும், போராடும் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் இந்த அடக்குமுறை சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் குண்டர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படுவார்கள் என்பதே மோடி அரசு அரங்கேற்றிவரும் புதிய நடைமுறை!

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க